மக்களை மதிக்காத பொலிஸ் நிலையங்களும், அதிகாரிகளும்!

மக்களை மதிக்காத பொலிஸ் நிலையங்களும், அதிகாரிகளும்!

இன மொழி மற்றும் பால் வேறுபாட்டின் அடிப்படையில் பொலிஸ் நிலையங்களில் மக்கள் பாரபட்சத்திற்குள்ளாவதாக மட்டக்களப்பைச் சேர்ந்த பொ.மேகலநாதன் (37) இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.
பொலிஸ் நிலையங்கள் மற்றும் பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக அவர் இந்த முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார்.

பொலிஸ் நிலையத்துக்கு சென்றால் மக்களை சரியான முறையில் நடத்துவதில்லை. தமிழ் மொழியில் பேசுவதில்லை. மக்களை தகாதமுறையில் நடத்துகின்றனர். தகாத வார்த்தைகளால் பேசுகின்றனர். மக்களை காக்க வைக்கின்றனர். ஆண் பெண் வேறுபாட்டின் அடிப்படையில் பாரபட்சம் காட்டுகின்றனர் என்று அவர் தனது முறைப்பாட்டில் கூறியுள்ளார்.

மட்டக்களப்பு, பாலையடித்தோணி, ஜீவபுரம் என்ற முகவரியைச் சேர்ந்த இவர், தொடர்ச்சியாக இந்த மனித உரிமைகள் மீறல் இடம்பெறுவதாக தெரிவித்துள்ளார்.

மக்களுக்காக உரிமை கிடைக்க வேண்டும். மக்களுக்கான நீதி சரியான முறையில் கிடைக்க வேண்டும் என்று அவர் தனது முறைப்பாட்டில் கேட்டுள்ளார்.

மட்டக்களப்பு மேகலநாதன் குற்றச்சாட்டு

This post is also available in: English සිංහල

More News

தேர்தல் முறையிலும் மாற்றம் தேவை

  தேர்தல் முறையிலும் மாற்றம் தேவ...

Read More

கிக்கிரிவத்தையும் குப்பையும்

கிக்கிரிவத்தையும் குப்பையும். பசறை......

Read More

இலங்கையில் நுண்நிதிக் கடன் பிரச்சினை.

இலங்கையில் நுண்நிதிக் கடன் பிரச்சின...

Read More