மொழி உரிமைகளை பற்றி மேற்கொண்டு வாசிக்கக்கூடிய அட்டவணைகள் / தொடர்பு வேலைகள் / பக்கங்கள்…
- நிகழ்ச்சித்திட்டம் பற்றிய விபரங்கள்
இலங்கையில் யுத்தம் முடிவுற்றநிலையிலிருந்து முரண்பாடற்றநிலைக்கு முன்னேற வேண்டுமானால் – அதாவது முரண்பாட்டிற்றான மூலகாரணிகள் தொடராமல் அல்லது திரும்பவும் ஏற்படாமல், மீளிணக்கம் நிகழ வேண்டும் – மொழிப்பிரச்சினைக்கு தீர்வுகாணல் அதிமுக்கியமானது என்பது CPA இன் உறுதியான நம்பிக்கையாகும். மொழியானது இனப்பிரச்சினைகள்கு மையமாக அமைகின்றபடியால், மொழிப் பிர்ச்சினைக்கு தீர்வுகாணுதல் ஒரு பெரிய அடையாள மற்றும் நடைமுறை முக்கியம் கொண்டதாக அமையும். அது அடிப்படையானதாகும். மேலும், இதற்குச் செலவிடும் மூலவளத்தின் பெறுமதிக்கு மேலான பயனைப் பெற்றுக்கொள்ளலாம். இவை சகல பிரஜைகளினதும் நம்பிக்கையையும், உண்மையான நன்மதிப்பையும் அவர்களுக் கிடையிலான நம்பகத்தன்மையையும், குறுகிய, இடைக்கால, நீண்டகால பயன்களாக மீட்டுக்கொடுக்கும் ஆற்றலைக் கொண்டவையாகும்.CPA இன் மொழி நிகழ்ச்சித்திட்டம், இவ்வாறான மாற்றத்தை ஏற்படுத்த விழைகின்றது. இது பிரசைகளின் அரசியலமைப்பு உரிமைகளைப் பூர்த்தி செய்வதனால், அவர்களுடைய பொறுப்புகளைப்பற்றி எடுத்துரைக்கின்றது. பிரஜைகள் அவ்வுரிமைகளை ஈட்டிக்கொள்ளும் பொறுப்பையும் காண்பிக்கினறது.இ;த்திட்டத்தை நடைமுறைப்படுத்த உதவிய அரசதுறைக்கான பாராட்டுகளை CPA பதிவுசெய்ததோடு, இதற்கான கொள்கை முன்னுரிமையையும், அரசியமான மூலவளங்களையும் கோருகின்றது. புறக்கணிக்கப்பட்ட உணர்வுகளையோ, உரிமை குறைந்த நிலைகளையோ, முரண்பாட்டுக்கான மூலகாரணிகளையோ விசே~மாக குறிப்பிடவோ, அவதானிக்கவோ அவசியமற்றவகையில், நிறுவனங்களினுள்ளும், அரசாங்கச் செயல்முறைகளினுள்ளும் மற்றும் பொதுமக்களின் கலாசாரத்தினுள்ளும்; மொழி உரிமைகளை உட்புகுத்துவதே இறுதி நோக்கமாக அமைகின்றது.நாடு தனது பூரணமான சாத்தியவளத்தை ஈட்டிக்கொள்வதற்கு இன்னும் நீண்டதூரம் செல்லவேண்டியிருக்கையில், இந்த நிகழ்ச்சித்திட்டம் சில சாதனைகளைச் செய்துள்ளதென்றும், நாம் நம்புகிறோம்.கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து
நிறைவேற்றுப் பணிப்பாளர்
மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம்
செம்டம்பர் 2015 - நிகழ்ச்சித்திட்டத்தின் தாக்கம்
இக்கருத்திட்டம் மொழிச்சமத்துவத்துவத்துக்கான சட்ட முன்னிகழ்வை உருவாக்கி, அரசகருமமொழிகள் கொள்கைளின் ஏற்பாடுகளினதும் நடைமுறையாக்கம், அரசகரும மொழிகள் சட்டம் மற்றும் அரசியலமைப்புச்சட்டம் என்பவைசம்பந்தமான வழக்குகளையும் முறைப்பாடுகளையும் மேற்கொண்டு, மொழியுரிமையின் இயைபு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, பெரும் எண்ணிக்கையினரான அரச அதிகாரிகளைச் சென்றடைந்து, மொழியுரிமையைப் பாதுகாக்கும்வகையிலான உளப்பாங்கு மாற்றங்களையும் ஏற்படுத்தியுள்ளது. PLRM கருத்திட்டம பிரஜைகள் குழுக்களுக்கு அதிகாரவலுவை வழங்கி, அவர்களை ஐக்கியப்படுத்தியுள்ளது. அது அவர்களுக்குத் தமது மொழியுரிமைகள் சம்பந்தமான விழிப்புணர்வை வழங்கி மொழிச் சமாஜங்கள் என்னும் பொறிமுறையூடாக அவற்றுக்காதரவாகப் பயன்படுத்தக்கூடிய வழிமுறைகளை எடுத்துக்காட்டியுள்ளது. இக்கருத்திட்டம் 76000 உறுப்பினர்களைக் கொண்ட 300க்கு மேற்பட்ட மொழிச்சமாஜங்களை ஏற்படுத்தியுள்ளது. இக்கருத் திட்டத்தின் மேலதிக சாதனைகள் பின்வரும் விடயங்களையும் உள்ளடக்குகின்றன.· மொழிச்சமத்துவத்துக்கு ஆதரவான இரண்டு அடிப்படை உரிமை வழக்குகள் வெல்லப்பட்டன.
· மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கும் அரச கருமமொழிகள் ஆணைக்குழு வுக்கும் 340 வழக்குகள் சமர்ப்பிக்கப்பட்டன
· 70க்கும் மேற்பட்ட ஊடகக்கட்டுரைகள் வெளியிடப்பட்டன.
· 2200க்கு மேற்பட்ட மாற்றம் குறித்த உண்மையான நிகழ்வுகள்
· 5000க்கு மேற்பட்ட அரசாங்க அதிகாரிகளை இந்த நிகழ்ச்சித்திட்டத்தினூடாகச் சென்றடைந்தமை
· முதல் தடவையாக ஒரு சுயாதீனத் தனியதார்த்த அமைப்பு கருத்திட்டப் பிரதேசங்களில் ஓர் அனைத்துமடங்கும் மொழிக்கணக்காய்வை நடத்தியமை
PLRM கட்டம் 4 இன் முடிவில், மொழிச்சமாஜங்கள் கிராம மட்டத்தில் ஏனைய தன்னார்வச் சமாஜங்களுடன் தொடர்நிலைப்பணியில் ஈடுபட்டால் மேலும் வலுப்பெறும் என்பதையும், அதன் மூலம் ஓர் ஊடறுப்பு விழுமியமாக இத்தகைய நிறுவனங்களின் பணிப்பாணையில் மொழிச்சமத்துவத்தை முன்னேற்றலாம் என்பதையும் அங்கீகரித்தமை - மொழியுரிமை சம்பந்தமான சட்டச் சட்டகம்
- மொழியுரிமைகளைப் பாதுகாக்கும் நிறுவனங்கள்
- மொழியுரிமைகள் சம்பந்தமான ஊPயு வெளியீடுகள்
மாதமிருமுறை மும்மொழிகளிலும் வெளிவரும் விபாஷா என்னும கருத்திட்டச் செய்தி மடல் பாடசாலைகள், பொது நூலகஙகள், பிரிவெனாக்கள் அமைச்சு ஆளணியினர், சிவில் சமூக அமைப்புகள், மொழிசமாஜங்களின் அங்கத்தவர்கள் மற்றும் CPA தொடர்பாடல் நிரலிலுள்ள சகலரையும் இலக்குவைக்கும்வகையில் மொழி மற்றும் மீளிணக்கம் சம்பந்தமான விடயங்களைத் திரட்டிப் பரவலாக வழங்கும்வகையில் அச்சிடப்பட்டது முழுவதுமாக 60,000க்கும் மேற்பட்ட பிரதிகள் விநியோகிக்கப்பட்டன.ஈமெயில், கடிதங்கள், நிரப்பப்பட்ட வினாக்கொத்துகள் போன்ற வடிவங்களிலான மொழி விவகாரங்கள் சம்பந்தமான விபாஷா காலாந்தரி வாசகர்களின் பின்னூட்டல்கள் பெறப்பட்டன. இவை மொழிச்சமத்துவம் குறித்த அதிகரித்த பொதுமக்களின் விழிப்புணர்வையும், ஆதரவையும் எடுத்துக்காண்பிப்பதாக அமைந்திருந்தன.
இக்கருத்திட்டம் இலக்குக் குழுக்களிடையே மொழி உரிமைகளுக்கான அதிகரித்த விழிப்புணர்வையும், மரியாதையையும் உருவாக்கி, மும்மொழிச் செய்திமடல், 5 துண்டுப் பிரசுரங்கள், 2 வாசகர்நட்பு வழிகாட்டிகள் / மொழிபெயர்ப்புகள், சுமார் 40 செய்திப் பத்திரிகைக் கட்டுரைகள், மற்றும் இலங்கையில் மொழிக்கொள்கை நடைமுறையாக் கத்தின் கொள்கை விதப்புரைகளின் இறுதிச்சுருக்கவடிவங்கள் உள்ளடங்கும் வெளியீடுகளை வழங்கியது.அரசகரும மொழிக்கொள்கை வழிகாட்டல் சம்பந்தமான 1550 பிரதிகள் சிங்களத்திலும், தமிழிலும் அச்சிடப்பட்டு. பயிற்றுநர்கள், மொழிச்சமாஜங்களின் தலைவர்கள், உத்தியோகத்தர்கள், எல்லோருக்கும் விநியோகிக்கப்பட்டன. அமைச்சு அதிகாரிகளும், இயைபுள்ள ஏனைய பல தரப்பினரும் மேலும் பிரதிகள் அவசியமென்று கேட்டுள்ளனர். இந்த வெளியீடு அரசாங்க அதிகாரிகளை மேலும் இலகுவாக அணுகுவதற்கு உதவியது.தேசிய மொழிகள் மற்றம் சமூக ஒருங்கிணைப்பு அமைச்சில் சமீபத்தில் ஏற்படுத்தப்பட்ட முறைப்பாடுகள் உடனறிவிப்புத் தொலைபேசியுடன் இணைவு முழுமையை ஏற்படுத்தும் வகையில், CPA கருத்திட்டம் 1956 உடன்தொடர்பு அறிவிப்புத் தொலைபேசி இலக்கத்துக்கு மேலும் பிரபலம் வழங்கும் 45 பெரிய விளம்பரப்பலகைகளை காட்சிக்கு வைத்தது. அது விரைவில் ஒரு மும்மொழிப் பொதுக் குறியீட்டு CD ஒன்றை வெளியிடவுள்ளது. இதில் அச்சிடக்கூடிய வடிவங்களில் மும்மொழிகளிலும் 1000க்கு மேற்பட்ட சொற்கள் அடங்கியிருக்கும்.இவை சகலவிதமான தனியார் மற்றும் பொதுத்துறை அலுவலகங்களிலும். வர்த்தக விற்பனை நிலையங்களிலும் பயன்பாட்டுக்குரியனவாகும்.சமீபத்திய இருமொழி வெளியீடுகள்- அரச கருமமொழிகள் கொள்கை சம்பந்தமான வழிகாட்டல் மற்றும் அத்தோடு இயைபுள்ள சட்டங்கள்
- இலங்கையில் தமிழ்மொழி உரிமைகள் (கலாநிதி. தேவநேசன் நேசையா)
- மொழியும், மனிதகுலமும் (சட்டத்தரணி ளு.பு. புஞ்சிஹேவா)
- விபாஷா செய்திமடல் வெளியீடுகள் 1 – 14
- LLRC அறிக்கைகுறித்த வழிகாட்டி நூல்
- LLRC அறிக்கை சம்பந்தமான ஓர் அபிப்பிராய மதிப்பாய்வு
- மொழிச்சமத்துவத்தை முன்னேற்றுவதற்கு நீங்கள் என்ன செய்யலாம்?
- இலங்கையில் மொழிப்பிரச்சினை குறித்த செய்திப்பத்தரிகைக் கட்டுரைகள்
http://listserv.linguistlist.org/pipermail/lgpolicy-list/2006-September/003563.html
http://asiafoundation.org/in-asia/2013/01/16/in-post-conflict-sri-lanka-language-is-essential-for-reconciliation/
http://www.tamilguardian.com/article.asp?articleid=1609
http://www.lawandsocietytrust.org/PDF/Briefing%20Note%20on%20Tamil%20Language%20Rights%201%20Oct%202010.pdf
http://groundviews.org/2011/10/24/reflections-on-issues-of-language-in-sri-lanka-power-exclusion-and-inclusion/
http://www.ceylontoday.lk/51-13915-news-detail-language-issues-in-sri-lanka.html
http://usefoundation.org/view/827
http://cimogg-srilanka.org/2006/07/language-issues/
http://www.irinnews.org/report/95931/analysis-bridging-the-language-divide-in-sri-lanka
https://srilankanews.wordpress.com/2006/09/01/linguistic-discrimination-against-the-tamils/
https://www.ceylontoday.lk/51-88507-news-detail-positive-step-towards-reconciliation-singing-of-national-anthem-in-tamil.html
can use an RSS Feed here based on Language Issue /Sri Lanka
மொழி உரிமைகள் குறித்த மேலதிக இற்றைப்படுத்தல்களுக்கு எமது அஞ்சல் நிரலுடன் இணைந்துகொள்ளவும்.
இங்கு பதிவுபெறுதலூடாக, உங்கள் தொலைபேசிக்கான SMS alerts களைப் பெற்றுக்கொள்ளுங்கள்
ABOUT OUTREACH UNIT
CPA யின் முனைப்பெல்லை நிகழ்ச்சித்திட்டத்துக்கான பின்புலம்
அறிமுகம் :
CPA யின் முனைப்பெல்லை அலகு 20017 ஜனவரியில் உள்ளூராட்சியில் விழிப்புணர்வை அதிகரித்தல் நிகழ்ச்சித்திட்டத்தின் ஆரம்பத்தோடு உத்தியோக பூர்வமாகத் தனது செயற்பாடுகளை ஆரம்பித்தது. எவ்வாறாயினும், இதே உள்மைய அணி அங்கத்தவர்கள் CPA யின் சமாதானம் மற்றும் முரண்பாட்டுப்பகுப்பாய்வு அலகில் இதற்கு முன்னர் அனேகமாக ஐந்து வருடகாலம் பணியாற்றியோராவர்.
முனைப்பெல்லை அலகு சமாதானம், ஜனநாயகம் மற்றும் நல்லாட்சி தொடர்பிலான CPAயின் அடிப்படை நம்பிக்கைகளில் விழிப்புணர்வு, விளக்கம் மற்றும் நம்பிக்கை என்பவற்றை பொதுமக்கள்மத்தியிலும், குறிப்பாக எமது கருத்திட்டங்கள், கிராமிய நலன்பிரதிநிதிகள் மத்தியிலும் முன்னேற்றும் பிரயத்தனங்களில் ஈடுபட்டு வருகின்றது. இளைஞர்கள் மற்றும் பெண்கள் குழுக்கள்மீது பிரத்தியேக கவனம் வலியுறுத்தப்படுகின்றது.
பணிப்பாணை:
அனைத்துமடங்கும் குறியிலக்கான சமாதானம் ஜனநாயகம் மற்றும் நல்லாட்சியைநோக்கிய இயைபுள்ள விவகாரங்கள்மீதான அறிவார்ந்த பகிரங்க உரையாடலை ஏற்படுத்தும்வகையில் பிரஜைகள்மத்தியில் விழிப்புணர்வைப் பரவலடையச்செய்வதனூடாக CPA முனைப்பு இடையீடுகளுக்கு இணைவுமுழுமை வழங்குதல்.
பொதுவான அதன் நடவடிக்கைகள் பின்வரும் விடயங்களை உள்ளடக்குகின்றன:
- இளைஞர் யுவதிகள், மாகாணசபை அங்கத்தவர்கள், செயலாளர்கள், உள்;ராட்சி அதிகாரிகள், பிரதிநிதிகள் மற்றும் ஜனசமூகத்தலைவர்களுக்கான விழிப்புணர்வு அதிகரிப்பு செயலமர்வுகள்
<liகாலந்தரிகள் மற்றும் தனிநிலை வெளியீடுகளைத் தயாரிப்பதும், விநியோகிப்பதும்
- CSO, அசாநி, பாடசாலைகள், பல்கலைக்கழகத் தொடர்பு நபர்கள், மாகாணசபை மற்றும் உள்;ராட்சித் தொடர்பு நபர்கள் என்போரிடையிலான உத்தி வலையமைப்புகளை உருவாக்கிப் பேணுதலும், ஒருவரோடொருவர் சர்வ சமூக இணைப்புறவுகளைப் பேண ஊக்குவித்தலும்
- கிராமிய நலன்பிரதிநிதிகளுக்கும், கொள்கைவகுப்போர் மற்றும் தீர்மானம் மேற்கொள்வோருக்குமிடையில் தொடர்பாடல் இடைநிலையாளராகக் கருமப்படுதல்
எமது நிபுணத்துவத் துறைகள்
முனைப்பெல்லைப் பதவியினர் ஒப்புரவான, இனத்துவ, மற்றும் பால்நிலைச் சமத்துவ அடிப்படையிலான, பல்வகைகைகொண்ட பின்னணிகளைச்சேர்ந்த, நவீன முகாமைத்துவ அணுகுமுறைகொண்ட குழுவினராவர்.
இந்த அலகுக்கு CPAயின் ஏனைய அலகுகளின் அகநிலையமைவு ஆதரவு, ஒத்துழைப்பு அனுகூலம் மற்றும் CPA அமைப்பின் பெயர் மற்றும் அதன் முனைப்பெல்லைப் பணி குறித்த பரவலான அங்கீகாரம் என்பவை கிட்டுகின்றன.
பயிற்சிபெற்ற, அனுபவமும், அர்ப்பணிப்புணர்வும் கொண்ட பதவியினரும், வளப்பகிர்வாளர்களும், இயைபுள்ள விடயப்பரப்புகளில் துறைபோன நிபுணர்களான ஆலோசகர்க;டனான தொடர்புத்தளமும் அதன் பாரிய வலுவான அம்சங்களாகும்.
CPA யினூடாக ஒரு காத்திரமான நிதியளிப்பு மற்றும் மூலவள ஆதரவு ஏற்படுத்தப்பட்டு, நிலையான INGO இணைப்புறவுகள் பேணப்படுகின்றன. இது அனுபவம் மற்றும் தகவலைப் பெற்றுக்கொள்வதில் உதவுகின்றது.
இந்த அமைப்புக்கு NPO / CBO / இளைஞர்கள் மற்றும் / உள்ளூராட்சித் தொடர்பு நபர்களுடன் விஸ்தாரமான தொடர்பு வலையமைப்பு உள்ளது. இது CPA யினூடாக கொள்கை வகுத்தல் மற்றும் மாகாண நலன்பிரதிநிதிகள் மட்டங்களிடையிலான பெறுமதிமிக்க இருவழித்தொடர்பாடல் ஊடுவழ்களைப் பெற உதவுகின்றது.
சமஷ்டி எண்ணக்கரு அதிகாரப்பகிர்வு குறித்த வளர்ந்துவரும் தேசிய விவாதம், மற்றும் இயைபுள்ள பரப்புரை / ஆராய்ச்சியில் CPA முன்னணியிலுள்ளது என்னும் அங்கீகாரம் என்பவை அலகுக்கு மாகாண மட்டத்தில் இவற்றில் அர்த்தமுள்ள தாக்கத்தை ஏற்படுத்தும் பல வாய்ப்புகளை வழங்குகின்றது.
அதிகரித்த இனங்களுக்கிடையிலான உணர்திறன், மற்றும் மாணவர் நிகழ்ச்சித்திட்டங்களில் பங்கேற்போரிடையில் சகிப்புத்தன்மை மற்றும் ஆட்சிமுறை / முரண்பாட்டுத் தீர்வு / சிறுபான்மையோர் உரிமைகள் / அதிகாரப்பகிர்வுபோன்ற விடயங்களில் ஊPயு யின் நிலைநாட்டப்பட்ட நற்பெயர்காரணமாக வயதில் இளையவர்களான கல்விப்புலமையாளர் மற்றும் உள்நாட்டில் சகல பல்கலைக் கழகங்களையும் சேர்ந்த மாணவர்கள் மேலும் விபரமான சூழல்களுக்கு தமது ஆய்வுகளை எடுத்துச்செல்லவிரும்புவோரிடையில் முனைப்பெல்லை அலகு ஒரு கிரமமான உசாவல் நிலையமாகப் பரிணமித்துள்ளது.
காத்திரமான வலையமைப்புகள்
கடந்த ஐந்து வருடகாலமாக முனைப்பெல்லை ஆரம்பித்த நிகழ்ச்சித் திட்டங்கள் கிராமப்புறங்களிலும், கொள்கை வகுத்தல் வட்டாரங்களிலுமான கணிசமான அளவிலான தொடர்பு வலையமைப்புகளை உருவாக்குவதற்கு வழிசமைத்துள்ளன.. உதாரணமாக, சமீபத்தில் இடம்பெற்ற பல்கலைக்கழகங்களுக்கும், சமூகங்களுக்கு மிடையிலான மாணவர் பரிமாற்ற நிகழ்ச்சித்திட்டங்கள், உள்;ராட்சி சபைகளிலான நல்லாட்சி நிகழ்ச்சித்திட்டம் என்பவை அலகுக்கும் பின்வரும் நிறுவனங்களுக்கு மிடையிலான பயனுள்ள தொடர்பாடல் ஊடுவழிகளை ஏற்படுத்த உதவியுள்ளன.
- அமைச்சுகள் : இலங்கை கல்வியமைச்சு மற்றும் குறிப்பாக உள்ளூராட்சி அமைச்சு
- பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் நாட்டின் பிரதான பல்கலைக் கழகங்களைச்சேர்ந்த கல்விப்புலமையாளர்கள்
- நாடு முழுவதிலுமுள்ள 60 பாடசாலைகளைச்சேர்ந்த கல்வி ஆளணியினர்
- ஜனசமூக அடிப்படையிலான அமைப்புகள் (ஊடீழுள)- 2000 அமைப்பு களைச் சேர்ந்த தளமொன்று எம்முடன் நேரடியாகப் பணியாற்றியுள்ளது
- இளைஞர், விவசாயிகள், பெண்கள் மற்றும் தொழிற்சங்க அமைப்புகள்
- மாகாணப் பத்திரிகையாளர்கள் அமைப்புகள் மற்றும் ஊடகப் பிரதிநிதிகள் (CPA யின் ஊடகப் பிரிவுடன் தொடர்புகள்)
- உள்ளூராட்சி ஆளணியினர், பிரதிநிதிகள், சகல மட்டங்களிலுமான அதிகாரிகள்
- ஒரே துறைகளில் பணியாற்றும் பங்காளர் சிவில் சமூக அமைப்புகள்
சமாதான நோக்கு போன்ற முனைபெல்லை அலகின் காலாந்தர வெளியீடுகள் நாடு முழுவதுமுள்ள 25,000 பாடசாலை பிரிவெனாக்கள், திருச்சபைகள், ஊடக நிறுவனங்கள் என்பவற்றின் நூலகங்களைச் சென்றடைவதோடு, இவை செல்லும் சகல பிரதேசங்களுக்குமென மிகச்சிறப்பான தொடர்பாடல் அரங்காகவும் விளங்குகின்றன.
CPA முனைப்பெல்லையின் சில கருத்திட்டங்கள்
- சிறுபான்மையினங்களின் மொழியுரிமைகளை முன்னேற்றுதல் 2011 – 2015
- பெருந்தோட்டத்துறைத் தொழிலாளர்களின் சிவில் உரிமைகளைப் பாதுகாத்தல், 2013
- LLRC சம்பந்தமான பிரஜைகள் உரையாடல் – 2012
- உள்ளூராட்சிமுறை சம்பந்தமான விழிப்புணர்வை அதிகரித்தல் TALG
- ஜனசமூகங்களுக்கிடையிலான மாணவர் பரிமாற்றம்
- பல்கலைக்கழகங்களுக்கிடையிலான விவாதத்தொடர்நிகழ்வுகள்
- இனத்துவ முரண்பாடு சம்பந்தமான விவரணப்படம்
- மாகாணத் தேவைகள் கணிப்பீடு 2008
- கிழக்கு மாகாணசபை குறித்த ஆய்வு – FNST 2009 – 1020
- வெளியீடு : கிழக்கு மாகாணத்தில் அதிகாரப்பகிர்வு : 13வது திருத்தத்தின் நடைமுறையாக்கம்
- மாகாணசபைகளில் பயனுதியுள்ள நியதிச்சட்டங்களை வகுத்தமைத்தல் சம்பந்தமான ஆய்வு – FES
- கிழக்கு மாகாணசபை குறித்த ஆய்வு 2009 – 2010
- கிராமியக் கல்வி உதவி நிகழ்ச்சித்திட்டம் 2009 – 2012
- சிறுபான்மைக் குழுக்களின் மக்கள் உரிமைகள் – செய்திப்பத்திரிகைக் கட்டுரைத்தொடர் – 2012
- சமஷ்டி குறித்த விழிப்புணர்வை அதிகரித்தல்
- கருத்திட்டத் தலைப்பு – சிறுபான்மையினத்தவரின் மொழி உரிமைகளை முன்னேற்றுதல் (PLRM)
அமைப்புகள் – வடக்கு, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் 18 மாவட்டங்கள்
இலக்குக்குழுக்கள் – பொதுமக்கள், தனியார் மற்றும் அரச நிறுவனங்கள் மற்றும் அரசாங்க உத்தியோகத்தர்கள்
காலம் – 2011 – தொடர்ந்து இடம்பெறுகின்றது.விபரிப்பு – அரச கரும மொழிகள் கொள்கை (OLP) இலங்கையில் அரச கரும மொழிகளாக சிங்களத்துக்கும், தமிழுக்கும் சமமான முக்கியத்துவம் வழங்கியமை காரணமாக, கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு (LLRC) முன்வைத்த விதப்புரைகளின்பிரகாரம் 2011 இல் CPA இலங்கையிலுள்ள சிறுபான்மை யோரின் மொழியுரிமையைப் பாதுகாக்கும் இயக்கமொன்றை முன்னெடுத்தது. CPA நான்குவருடகாலமாக PLRM ஊடாக அரசகரும மொழிக்கொள்கைகள் உள்ளடக்கம், மற்றும் முக்கியத்துவம் குறித்து அரசாங்க பொது உத்தியோகத்தர்கள், மற்றும் பொதுமக்களுக்கான உணர்வூட்டல் நிகழ்ச்சித்திட்டத்தை நடத்தியது. அது மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கும், அரச கரும மொழிகள் ஆணைக்குழுவுக்கும், அரச கரும மொழிக்கொள்கை மீறப்பட்ட சந்தர்ப்பங்களில் பொதுநலன் வழக்குகளையும், முறைப்பாடுகளையும் சமர்ப்பித்தது.PLRM கருத்திட்டத்தின் பிரதான விளைவாக CPA ஒவ்வொரு வருடமும் பயிற்றுநர் களைப் பயிற்றுவிக்கும் (TOT) அமர்வுகளை நடத்தியது. பிராந்தியப் பங்காண்மை அமைப்புகளிலிருந்து பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்பட்டு, CPA பதவியினரால் பயிற்சிகள் வழங்கப்பட்டன. (மாகாணக் கூட்டிணைப்பாளர்கள், சட்டவல்லுநர்கள், மற்றும் சிரே~;ட ஆய்வாளர்கள்) இவை அரச கரும மொழிகள் கொள்கை சம்பந்தமான மீறல்கள் இடம்பெறும்போது எவ்வாறு ஒருவர் உள்ளூர் அதிகாரசபைகளிலும் பொலீஸிலும், மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் முறைப்பாடுகளை முன்னெடுப்பது என்பது சம்பந்தமானவையாகும். அவர்களுக்கு 15 மாவட்டங்களில் ஒப்பந்த அடிப்படையில் மொழிச்சமாஜங்களை (LC) உருவாக்கும் பணி ஒப்படைக்கப்பட்டது. இந்தச் சமாஜங்கள் தமது பிராந்தியங்களில் மொழிச்சமத்துவத் துக்குப் பரப்புரைசெய்த கிராமியச் செயற்பாட்டாளர்களைக் கொண்டிருந்தன. இந்த முயற்சியின் பலனாக, 15 மாவட்டங்களிலும் 150க்கு மேற்பட்ட மொழிச்சமாஜங்கள் உருவாக்கப்பட்டன. அனைத்துமடங்கலாக 2000 க்கு மேற்பட்ட மாற்றங்கள் நிகழ்த்தப்பட்டன. (மும்மொழிகளிலும் பெயர்பலகைகளை மாற்றியமைத்தல், இரு அரச கரும மொழிகளிலும் உத்தியோகபூர்வப் படிவங்களுக்கான வேண்டுகோள் விடுத்தல், பொலீஸ் நிலையங்களில் சிங்களத்திலும், தமிழிலும் தேர்ச்சிபெற்ற உத்தியோத்தர்களை ஆட்சேர்ப்புச் செய்யுமாறு கோரிக்கைவிடுதல் போன்றவை) - பெருந்தோட்டத்துறைத் தொழிலாளர்களின் சிவில் உரிமைகளைப் பாதுகாக்கும் கருத்திட்டம், 2013
அவர்களின் கடின உழைப்பு இலங்கையின் பல கோடி டொலர் பெறுமதி வாய்ந்த தேயிலைக் கைத்தொழிலுக்குச் சக்திவழங்குகின்றது. ஆயினும், பதுளை மாவட்டத்தில் தோட்டத்துறைத் தொழிலாளர்கள் இன்னமும் மோசமான ஏழ்மைநிலையில் வாடுவோராவர். இவர்கள் மிகவும் ஓரங்கட்டப்பட்ட நிலையிலுள்ள மக்களாவர். மலிவான உழைப்பைப் பிடிநழுவவிட விரும்பமற்ற ஒரு முறைமையினால் வளர்க்கப்பட்டோராவர், ஊவா மாகாணத்தில் தோட்டத்துறையில் நிலவும் நிலைமைகளில் சமீபத்திய, யுத்தத்துக்குப்பிந்திய அபிவிருத்தி இயக்கங்களால் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. நிர்வாகரீதியாக இந்த ஜனசமூகங்கள் அலட்சியப்படுத்தப் படும் நிலைமையை மேலும் மோசமாக்கும் விடயம் இவர்களுட்பலருக்கு இவர்களின் பெயர்களில் ஒரு நிரந்தரமான தொடர்பு முகவரி இல்லாதிருப்பதாகும்.பல அறைகளுக்கு இலக்கமில்லை அனேகமான சந்தர்ப்பங்களில் கடிதங்கள் ஒரேவிதமான பெயருள்ள வேறு நபர்களுக்குப் போய்ச் சேருகின்றன. விநியோகிக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்ட தொழிலாளியாகிய கங்காணியின் நியாய உணர்வு, அயலவர்களின் நல்லெண்ணம் மற்றும் சில வேளைகளில் அதிர்~;டம் இருப்பின், ஒருவர் ஒரு கடிதத்தைப் பெற்றுக்கொள்வது சாத்தியமாகும்.சிலவேளைகளில் சில தொழிலாளர்களிடம் தேசிய அடையாள அட்டைகள் இல்லாதிருப்பது பல பாரதூரமான விவகாரங்களுக்கு இட்டுச்செல்லுகின்றது. இக்கருத்திட்டம் இப்பிரச்சினைக்குத் தீர்வுதேடும் நோக்கத்தைக் கொண்டதாகும். விளைவுகளின் உதாரணங்கள் : மட்டுப்படுத்தப்பட்ட பிரயாண சுதந்திரம், கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடுவதில் இடர்கள், சிவில் மற்றும் குற்றவியல் வழக்குகளில் இலகுவில் பலியாகுந்தன்மை, பாதுகாப்பின்மை, உத்தியோகபூர்வ ஆவணங்களைப் பெற்றுக்கொள்வதில் குழப்பநிலைகள் மற்றும் வேலைவாய்ப்பைப் பெற்றுக்கொள்ளுதல் போன்றவை.மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம் (CPA) ஊவா சக்தி பவுன்டேஷன் எனப்படும் உள்ளூர்ப்பங்காளருடன் இணைந்து ஊவா மாகாணம், பதுளை, பசறையில் ஒரு முன்னேடிக்கருத்திட்டத்தை நடத்தியது. இதன் நோக்கம் வழமையாக மனித உரிமைகள் மறுக்கப்பட்ட இந்த ஓரங்கட்டப்பட்ட ஜனசமூகத்தினரின் வாழ்வில் ஒரு சிறிதளவாவது கௌரவத்தை ஏற்படுத்துவதாகும். கடந்த 6 மாத காலங்களில் இருக்கருத்திட்டம் பெருந்தோட்டத்துறையில் முதல்முறையாக 3000 பெருந்தோட்டத் தொழிலாளர் குடும்பங்களுக்கு ஒரு நிரந்தர முகவரியை ஏற்பாடுசெய்துகொடுத்தது. இக்கருத்திட்டம் 20 இடங்களில் பாதுகாப்பான அஞ்சல் சேகரிப்புப் பெட்டிகளையும் வைத்தமைக்க ஏற்பாடுசெய்தது. அப்பிரதேசத்திலிரந்த 40 உப – தெருக்களுக்கு பெயர்ப்பலகைகளை அமைத்தார்கள். இவையனைத்தும் கடிதங்களை விநியோகிப் பதற்கு பாதுகாப்புத்தேடும் முயற்சியாகும்.300க்கு மேற்பட்ட தேசிய அடையாள அட்டைகளுக்கான விண்ணப்பங்களைத் துரிதப்படுத்துவதற்கு இடம்பெயர் சேவைகள் நடத்தப்பட்டன. இல்லையென்றால் அவை மிகப்பிந்தியே உரியவர்களுக்கு கிடைத்திருக்கும் அல்லது அறவே போய்ச் சேர்ந்திருக்காது. இந்த விடயம் குறிப்பாக விரைவில் பரீட்சைகளை எழுதவிருக்கும் மாணவர்கள் விடயத்திலும் மிகவும் முக்கியமானதாகும்.நாட்டில் ஏனைய பகுதிகளில் இயல்பாக ஒரு விடயமாக ஏற்றுக்கொள்ளப் பட்டுள்ள கடிதங்களைப் பாதுகாப்பாகப் பெற்றுக்கொள்ளும் உரிமை இப்பிரதேசத்தில் பாரிய இடர்களைக்கொண்ட ஒரு விடயமாகவுள்ளது. இது அருமையாகவே கிட்டும் ஒரு பல்கலைக்கழக அனுமதி, கொழும்பில் ஒரு வேலைவாய்ப்பு, வெளிநாட்டிலிருந்து உறவினர் ஒருவர் அவசரத்தேவைக்கு அனுப்பிவைக்கும் பணம் கையில் வந்து கிடைக்குமா இல்லையா என்பதைத்தீர்மானிக்கும் ஒரு விடயமாகும். பெருந்தோட்டத் தொழிலானர் சமூகங்களின் வாழ்க்கையில் இத்தகைய வாய்ப்புகள் வாழ்நாளில் ஒரு தடவை அல்லது இரண்டு தடவை மாத்திரமே வரக்கூடியவையாகும். இது வாழ்வில் நம்பிக்கையை அல்லது இழப்புத்துயரத்தை ஏற்படுத்தக்கூடியதாகும்.
- LLRC குறித்த நாடளாவிய பிரஜைகள் உரையாடல்களின் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளுதல்
CPA கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றம் மீளிணக்க ஆணைக்குழு (LLRC) சம்பந்தமான பொதுமக்களின் விழிப்புணர்வு மட்டங்களைக் கண்காணிப்பதில் ஒரு முன்னணிப்பாத்திரத்தை வகித்தது. அதன் விதப்புரைகளின் நடைமுறையாக்க மட்டத்தையும் கண்காணிப்புச்செய்தது. CPA இந்த ஆணைக்குழுவின் விசாரணை களைக் கண்காணிப்புச்செய்து, இச்செயல்முறையின் குறைபாடுகளை விமர்சனரீதியாகப் பகுப்பாய்வுசெய்து, பொதுமக்களுககுத் தனது வெப்தளங்களூடாகத் தகவல்களைப் பரவலாக வழங்கியது.LLRC யின் அறிக்கை வெளியாகியதும், அதன் விதப்புரைகளை நடைமுறைக் கிடுவது சம்பந்தமான ஓர் அனைத்துமடங்கும் அறிக்கையொன்றை வெளியிட்டதோடு, அதற்காகப் பரப்புரைகளையும் மேற்கொண்டோம். மேலும், மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையமே (CPA) இலங்கையில் LLRC அறிக்கையின் 9 ஆம் அத்தியாயத்தை (விதப்புரைகள்) 2012 மேயில் தமிழிலும், சிங்களத்திலும் வெளியிட்டு, யுத்தத்துக்குப் பின்னரான இலங்கையில் சமாதானம் மற்றும் மீளிணக்கத்துக்கான மூலநியமக்குறிகள் சம்பந்தமாக அறிக்கையிட்ட முதலாவது நிறுவனமாகும். அத்தோடு நாம் LLRC அறிக்கை சம்பந்தமான பிரஜைகள் உரையாடலை ஊக்குவித்து, முன்னேற்றும் கருத்திட்டமொன்றை வெற்றிகரமாக முன்னெடுத்தோம். இந்த விதப்புரைகள் சம்பந்தமான விழிப்புணர்வை அதிகரித்து, இலங்கையில் முரண்பாட்டு நிலைமாற்றச் செயல்முறைக்கு அவற்றின் முக்கியத்துவம் குறித்தும் எடுத்துரைத்தோம்.இக்கருத்திட்டத்தின் முக்கியமான விளைவுகளுள் ஒன்றாக ஆணைக்குழுவின் ஆரம்ப அறிக்கையையும், விதப்புரைகள் நடைமுறையாக்கத்துக்கான செயல் திட்டத்தையும் எளிமைப்படுத்தப்பட்ட வெளிடுகளினூடாகவும், அஞ்சல் மூலமாகவும், ஈமெயிலூடாகவும், சிங்களத்திலும், தமிழிலும் இடம்பெற்ற உரையாடல்களூடாகவும், நாடு முழுவதும் 47 பிராந்தியப் பயிற்றுநர்கள் நடத்திய 1033 உரையாடல் கூட்டங்கள் மூலமாகவும் ஒரு லட்சத்து முப்பதாயிம் பிரஜைகளுக்கு வழங்கினோம்.
நாடளாவிய கலந்துரையாடல்களைப் பகிர்ந்துகொள்ளும் இன்றைய ஊடக மாநாட்டின் அறிக்கையையும், LLRC முன்னிலையில் சான்றுரை சமர்ப்பித்த சாட்சிகள் குறித்த மதிப்பாய்வின் தேடல்முடிவுகளையும் (PDFs) ஆங்கிலம், சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் CPA வெப்தளத்தில் தரவிறக்கம் செய்யலாம்.கணினியில் (பிரவுசரில்) ஆங்கிலத்திலும், சிங்களத்திலும், தமிழிலும் இந்த அறிக்கைகளை வாசிக்கலாம்.
http://www.lankastandard.com/2012/11/cpa-issues-resources-to-promote-awareness-on-llrc/ - ஒளிவுமறைவற்ற, வகைப்பொறுப்புள்ள உள்ளூராட்சி
இக்கருத்திட்டம் வடக்கு, கிழக்கிலிருந்து 11 சபைகள் உள்ளிட்டவகையில் நாட்டின் சகல பகுதிகளிலுமுள்ள உள்ளூராட்சி சபைகளுடன் இடைத்தொடர்பாடல்கள் சம்பந்தமானதாகும். இதன் குறிக்கோள் ஒளிவுமறைவின்மை மற்றும் வகைப்பொறுப்பை வலியுறுத்துவதனூடாகப் பல்வேறு உள்ளூராட்சி ஆளணியினருக்கும், சிவில் சமூகத்துக்குமிடையிலான கூட்டிணைப்பு மற்றும் ஒத்துழைப்பு என்பவற்றை மேம்படுத்துவதாகும் அது பின்வரும் வழிமுறைகள் மூலம் ஈட்டப்பட்டது.- பிரதிநிதிகள் / உத்தியோகத்தர்கள் உள்ளிட்டவகையில் இயைபுள்ள உள்ளூராட்சி அதிகாரசபைகளின் ஆளணியினருடன் இடம்பெறும் கூட்டங்கள்
- சிவில் சமூக அமைப்புகள் மற்றும் ஜனசமூக அடிப்படையிலான அமைப்புகளின் தலைவர்களுடன் இடம்பெறும் கூட்டங்கள்
- மூன்று அடுக்குகளிலான தலைவர்களுடன் இடம்பெறும் இணைந்தவகையிலான கூட்டங்கள்
- நல்லாட்சிக்கும் மற்றும் ஒளிவுமறைவின்மை / வகைப்பொறுப்புக்கான தேவைப் பாட்டுக்குமான உணர்வூட்டல்
- கடந்தகால அனுபவங்களைக் கலந்துரையாடுதல், உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கெற்புடன் குறியிலக்குகளை ஏற்படுத்தி, பொறுப்பான உத்தி யோகத்தர்களை நியமிக்கும் இணைந்த நடவடிக்கைத்திட்டங்களை வகுத் தமைத்தல்
- உள்ளூராட்சிப் பிரசுரங்கள் / வழிகாட்டல் நூல் / நல்லாட்சிச் செய்திமடல்களைப் பிரசுரித்தல்
- அவசியமான துணைவிதிகளை ஏற்படுத்துவது போன்ற உப நிலை விடயங்கள்
- கண்காணிப்பும், மதிப்பீடும்
CSO க்கள் மற்றும CBO க்களுடனான அண்ணளவாக மொத்தம் 200 ஒரு நாள் கூட்டங்கள் நாடு முழுவதும் நடத்தப்பட்டன. பிரதிநிதிகளுக்கும், உத்தியோகத்தர்களுக்குமான 103 ஒரு நாள் கூட்டங்களும், உத்தியோகத்தர்களுக்கும், சிவில் சமூகத் தலைவர்களுக்குமென 200 இணைந்த கூட்டங்களும், நடத்தப்பட்டு, உள்ளூர் அதிகாரசபைகளின் பணியில் நல்லாட்சியைக் கூட்டிணைப்புச்செய்யும் தேவைப்பாடு மற்றும் இதற்கான வழிமுறைகள் சம்பந்தமான விழிப்புணர்வு இதன் விளைவாக அதிகரிக்கப்பட்டது.
TALG நிகழ்ச்சித்திட்டத்தின் அனுபவங்களைத்தொடர்ந்து, முனைப்பெல்லை அலகு தேவையை உணரும் மக்கள் (People in need) அமைப்பின்சார்பில் ஜெர்மன் தொழில்நுட்ப ஒத்துழைப்புடன் (GT2) பங்குடைமையாக கிண்ணியா பிரதேச சபை மற்றும் நகரசபையிலிருந்து பங்கேற்போருக்கான பயிற்சி வழங்கப்பட்டது.
- ஜனசமூகங்களுக்கிடையிலான மாணவர் பரிமாற்றங்கள்
இக்கருத்திட்டம் நாடு முழுவதிலுமுள்ள பாடசாலைகளின் ஆசிரியர்கள் மற்றும் சாதரண, உயர்தர மாணவர்களிடையே சர்வசமூக சகிப்புத்தன்மை, பல்வகைமையை வரவேற்றல், மற்றும் ‘சமாதானக் கலாசாரம்’ என்பவற்றை முன்னேற்றும் குறிக்கோளுடன் ஏற்படுத்தப்பட்டதாகும். இப்பரந்த குறிக்கோளை நிறைவேற்றுவதில். சர்வ சமூக நட்புநிலை மற்றும் புரிந்துணர்வை இளம் தலைமுறையினரிடையே முன்னேற்றும்வகையில், தத்துவஞான விவாதங்கள், இணைந்த கலை மற்றும் கலாசாரம், பாடசாலைகளுக்கிடையிலான செய்திமடல் என்பவை திட்டமிடப்பட்டுள்ளன2005 மற்றும் 2006 மாணவர் பரிமாற்றத் தொடர்நிகழ்வுகளின் பின்னூட்டல்கள் மிகவும் திருப்தியளிப்பவையாக உள்ளதோடு, நிகழ்ச்சித்திட்டத்தின் ஆரம்பத்தில் இருந்ததோடு ஒப்பிடுகையில் உளப்பாங்குகளில் ஒரு மாற்றத்தைக் காண்பிக்கின்றன. நேர்காணப்பட்ட மாணவர்களுள் அனேகமாக 90 வீதமானவர்கள் தமக்கு வாழ்க்கையில் என்றுமே வேறு இனத்தவரான நண்பர் ஒருவர் இருக்கவில்லையென்றும், தமது பின்னணிகளைத் தமது புதிய நண்பர்களுடன் பகிர்ந்துகொள்வது கல்வியூட்டுவதாகவும், நிச்சயமாகவே கண்களைத் திறப்பதாகவும், உள்ளத்தில் பதிந்திருந்த மனப்பாங்குகளை மாற்றுபவையாகவும் இருந்தனவென்றும் தெரிவித்தனர்.உதாரணமாக ‘சகல தமிழர்களும் பயங்கரவாதப் புலிகள்’ என்ற எண்ணத்துடன் வளர்ந்த சிங்கள இளைஞர் யுவதிகள் அல்லது ‘சகல சிங்களவர்களும் இராணுவ வீரர்களைப்போன்று வன்செயலிலும், கொலையிலும் ஈடுபடுபவர்கள்’ என்னும் எண்ணத்துடனிருந்த தமிழ் இளைஞர் யுவதிகளும் மற்ற இனத்தைச் சேர்ந்த இளைஞர்கள் கருணை, புரிந்துணர்வு மற்றும் சகிப்புத்தன்மை கொண்ட மனிதர்கள் என்பதை அறிந்துகொண்டபோது பெரிதும் ஆச்சரியடைந்தனர். சில பேதங்கள் மொழி மற்றும் கலாசாரத்தினால் ஏற்படுபவையென்றும், அவை அச்சுறுத்தலாகவிருப்பதற்குப் பதிலாக, தேசத்தின் செழுமை மற்றும் பல்வகைமைக்கு மேலும் கவர்ச்சியூட்டுபவையென்றும் அறிந்துகொண்டனர். பல்கலாசார உணர்வொன்றிப்புக்கான இளைஞரக்ளின் இயற்கையான ஈர்ப்பு இந்த மறக்கமுடியாத அனுபவத்தினூடாக மேலும் வலுப்பட்டது. உதாரணமாக, செய்தி மடலுக்கு அவர்கள் எழுதிய கடிதங்களும், கவிதைகளும் பல்கலாசாரச் சகிப்புநிலைகுறித்த அதிகரித்த உணர்திறனைக் காண்பிப்பதோடு, அவை சமாதானத்தைக் கட்டியெழுப்பி, நிலைபேறாக்கும் வழிமுறைகள்குறித்த புதிது புனைதலான கருத்துக்களுக்கும், ஆலோசனைகளுக்கும் இட்டுச்செல்லுகின்றன.இந்த நிகழ்வுகள் அரச தொலைக்கட்சியில் ஒளிபரப்புச்செய்யப்பட்டதோடு அவை இலங்கையின் பிரதான தினசரி மற்றும் ஞாயிறு செய்திப்பத்திகைகளிலும் இடம்பிடித்தன.2006 டிசம்பர் வரையிலான கருத்திட்டம் 15 மாவட்டங்களில் அமைந்துள்ள 45 பாடசாலைகளை ஈடுபடுத்துவதாக அமைந்திருந்தது.
http://cpalanka.org/wp-content/uploads/2008/1/Arunodayaprintfile_Eng.pdf - மாகாணத் தேவைகள் கணிப்பீடு – 2008
மார்ச் – மே 2008 காலப்பகுதியில் முனைப்பெல்லை (Outreach) அலகு அரசியலமைப்புக்கான 13வது திருத்தம் மாகாணசபைகள் மற்றும் அதிகாரப்பகிர்வு போன்ற கருப்பொருட்கள் சம்பந்தமான இரண்டு சமாந்தர நிகழ்ச்சித்திட்டங்களில் பணியாற்றியது. இந்த நிகழ்ச்சித்திட்டத்துக்கு USAIF ஊடாக Development Alternatives Inc ஆதரவு வழங்கப்பட்டது.ஒரு பூர்வாங்கச் சுற்றாக, ஒரு நாள் பிராந்தியக் கூட்டங்கள் ஒவ்வொரு மாகாணசபைக் கேட்போர் கூடத்திலும் இடம்பெற்றன. இதில் தவிசாளர்கள், முதலமைச் சர்கள், மாகாண அமைச்சர்கள், பிரதம செயலாளர்கள், மற்றும் இயன்ற விடத்து, ஆளுநர் என்போர் பிரசன்னமாகவிருந்தனர். இவற்றின் நோக்கம் இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் கருப்பொருளை உருவரைக்குறிப்பாக எடுத்துரைப்பதும், ஆதரவு திரட்டுவதும், மற்றும் மாகாணசபை உத்தியோகத்தரைப் பங்கேற்க வைப்பதும், உத்தேச வதிவுச்செயலமர்வுகளுக்கான திட்ட வழங்கல்களைத் தெளிவுபடுத்துவது மாகும்.திட்டமிட்ட செயலமர்வுகளில் தீர்வுகாணப்படவேண்டிய விடயப்பரப்புகள் சம்பந்தமான பங்கேற்போர் ஆலோசனைகள் திரட்டப்பட்டன. இதைத்தொடர்ந்து, மாகாணசபைச் செயல்முறையை வலுப்படுத்தும் காத்திரமான மூன்றுநாள் பிராந்தியச் செயலமர்வுத் தொடர்நிகழ்வுகள் இடம்பெற்றன.வளப்பகிர்வாளர்களுள் கொழும்பு சட்டபீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரும் சட்ட மற்றும் அரசியலமைப்பு அலகுத் தலைவருமான ரொஹான் எதிரிசிங்க, சட்டத்தரணியும், தேசியப் பயிற்றுநரும், நூலாசிரியருமான S.G. புஞ்சிஹேவா, நிதி ஆணைக்குழுவின் தவிசாளர் அசோகா குணவர்தன என்போரும் இடம்பெற்றிருந்தனர்.ஆலோசனைகள், வெற்றிக்கதைகள் மற்றும் பங்கேற்கும் மாகாணசபை ஆளணியினர் எதிர்நோக்கும் சவால்கள் என்பவற்றைத் திரட்டி, ஆவணப்படுத்துவதே வதிவுச்செயலமர்வுகளின் நோக்கமாக அமைந்திருந்தது. இவை இறுதியில் மாகாணசபைச் சீர்திருத்தங்களுக்கான ஒரு தொகுதி விதப்புரைகளை வழங்கும்.இந்தச்செயலமர்வுகளில் எட்டப்படும் விதப்புரைகள் தொகுதியின் அடிப்படை யிலான இறுதி அறிக்கை வெளியிடப்பட்டு, 2008 மே 28 ஆம் திகதி பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டுமண்டபத்தில் (BMICH) இடம்பெற்ற மாகாண சபைகள் தேசிய மாநாட்டில் சம்பந்தமுற்ற சகலருக்கும் வழங்கப்பட்டது. - பல்கலைக்கழகங்களுக்கிடையிலான தொடர்நிலை விவாதங்கள்
இக்கருத்திட்டம் விரிவுரையாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், அறிவு ஜீவிகள் மற்றும் ஆர்வமுள்ள பொதுமக்களிடையே ஊடாட்டங்களை முன்னேற்றி எதிர்காலத்தில் தீர்மானம் மேற்கொள்வோராகிய இளம் கல்விப்புலமையாளர்களின் பங்கேற்பை ஊக்குவித்து, தெரிவுசெய்யப்பட்ட விடயப்பரப்புகளில் திறந்த விவாதங்களை ஊக்குவிக்கும் நோக்கத்தைக் கொண்டதாகும். குறிக்கோள் இலங்கையில் நிலைபேறான சமாதானத்துக்கு இட்டுச்செல்லக்கூடிய சாத்தியமான மாற்றுவழிகளுக்கான கலந்துரையாடலுக்கான ஓர் அரங்கை வழங்குவதாகும்.முதலாவது விவாதத்தொடர் 2005 இல் இடம்பெற்றது. மொத்தம் 400 மாணவர்கள் பங்குபற்றினர். இதேவகையிலான 2007 கருத்திட்டத்தில் சமூகவியல், அரசியல் விஞ்ஞானம், பொருளியல், வெகுஜனத்தொடர்பாடல்கள் பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்கள் 4 விவாதங்களில் பங்கேற்றார். இத்தோடு விவாத அமர்வுகளில் மொத்த எண்ணிக்கை எட்டாகியது. மொத்தம் 1000 மாணவர்கள் பங்கேற்றிருந்தனர்.இலங்கையில் இப்பிரதான விடயங்களில் மாணவர் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன இதுவே முதல் தடவையாகும். ஏற்பாட்டளர்கள் இலங்கையின் எதிர்காலக் கொள்கைவகுப்பாளர்கள் ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் பல்பகைமைகுறித்த சகிப்புத்தன்மை போன்ற விடயங்களில் கூருணர்வு பெற்றுக் கொள்வதற்கு இது மிகவும் முக்கியமான ஒரு படியென்று நம்புகின்றனர். மாணவர் பரிமாற்ற நிகழ்வுகளைப்போலவே இந்த நிகழ்ச்சித்திட்டமும் பங்கேற்போர் மத்தியில் இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வு மற்றும் நட்புநிலையை உருவாக்கித் தொடருவதற்கு உதவுவதாகும். பின்தொடர் நோக்கங்களுக்காக பங்கேற்போர் தொடர்புத்தகவல்கள் ஏற்பாட்டாளர்களின் தரவுத்தளங்களில் பேணி வைக்கப் பட்டுள்ளன. ஒவ்வொரு விடயப்பரப்பிலுமான ஆய்வுதலைப்புக்குறித்த மாணவர் கட்டுரைகள் வடிவத்தில் குழுப்பணிகள் தொகுக்கப்பட்டுள்ளன. இவை திரட்டப்பட்டு இந்தச் செயற்றிட்டத்திற்காக ஏற்படுத்தப்படவுள்ள வெப்தளத்தில் பிரசுரிக்கப்படும். - இனத்துவ மோதல் சம்பந்தமான ஆவணப்படம்
இந்த ஆவணப்படம் முரண்பாட்டுத் தீ;ர்வு ஆய்வுகள்குறித்த எதிர்காலச் செயலமர்வுகளில் வளவிடயங்களாகப் பயன்படுத்தப்படவுள்ளது. இது முரண்பாட்டுத்தீர்வு மற்றும் சமாதானக்கல்விகள் துறையில் சர்வதேசப் பங்காளர்களுக் கான உசாவல் பொருளாகவும் பயன்படும். முரண்பாட்டுக் கல்விகளில் நாட்டின் முன்னணிச் சிருஷ;டிகரத் தொழில்வல்லுநர்கள் மற்றும் நிபுணத்துவக கல்விப் புலமையாளர்களின் திருப்புமுனையான கூட்டுப்பணியொன்றில் முன்னணி ஊடக மற்றும் சிவில் சமூகப் பிரதநிதிகளின் மதியுரையுடன் இந்த ஆவண ஊடகத்தின் பயன்பாடு பார்வையாளருக்கு உரிய வகையில் இனத்துவ முரண்பாட்டையும், அதற்கான காரணங்களையும் கொண்டுவருகின்றது இரண்டு பிரதான இலங்கைக் கலைஞர்கள் இந்த ஆவண ஊடகத்தை மும்மொழிகளிலும் பயன்படுத்துவார்கள். இது நிகழ்வுகளின் காலவோட்டத்தைச் சுருக்கமாகவும், இலகுவில் விளங்கிக்கொள்ளக்கூடிய முறையிலும் வழங்கி, தற்போதைய மோதல் சூழலின் பகுப்பாய்வுக்கு உதவுகின்றது.இத்திரைப்படத்தில் பல்வகைமையைச் சகித்துக்கொள்ளும் ஒரு சமூகத்து மக்களின் நிலைமைக்கான ஒரு பரிவுமிக்க கவனத்தை உருவாக்கி, அரசியல் தீர்வொன்று ஈட்டிக்கொள்ளும்வகையிலான இணக்கப்பாட்டுரீதியான உதவியை வழங்கக்கூடியவர்களின் கவனத்தைப்பெறும்வகையில் கதை வசனம் என்பவை வடிவமைக்கப்படும். உத்தேசத்தீர்வினுள் சமஷ்டி எண்ணக்கரு கூட்டிணைப்புச் செய்யப்படும். - கிழக்கு மாகாணசபை குறித்த ஆய்வு – FNST
பிரெட்ரிக் நோமன் பவுண்டேஷன் (FNF) ஆதரவுடன் மாற்றுக்கொள்கைகளுக் கான நிலையம் (CPA) இலங்கையில் 13வது திருத்தம், மற்றும் அதிகாரப்பகிர்வு சம்பந்தமான ஓர் அனைத்துமடங்கும் ஆய்வை நடத்தியது. இதில் கிழக்கு மாகாணசபையின் அனுபவங்களுக்கு விசேட கவனம் செலுத்தப்பட்டிருந்தது. இந்த ஆய்வு கணிய மற்றும் தரவிளக்கங்களோடும், 13ஆவது திருத்தத்தின் சட்ட மற்றும் அரசியலமைப்புத் தாற்ப்பரியங்களோடும், கிழக்கு மாகாணசபையூடாக அதன் செயற்பாட்டுக்கும் கவனம் செலுத்தியிருந்தது. அத்தோடு, இந்த ஆய்வு பொதுமக்களிடமிருந்து திரட்டப்பட்ட கிழக்கு மாகாணசபைக் கருமப்பாடுகள் குறித்த அபிப்பிராயங்கள், கண்ணோட்டங்களுக்கும், மற்றும் புதிதாகத் தெரிவுபெற்றிருத மாகாணசபை அங்கத்தவர்கள் மற்றும் உத்தியோகத்தர்களின் கருத்துகளுக்கும் கவனம் செலுத்தியிருந்தது.இந்த மும்மொழிப்பிரசுரம் மாகாணசபை உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள், சிவில் சமூகக் தலைவர்கள், மற்றும் கல்விப் புலமையாளர்களின் பங்கேற்புடன் வெளியிடப்பட்டது. இச்சந்தர்ப்பத்தில் கொழும்புப் பல்கலைக்கழக்தின், சட்டபீடத்தின் சிரேஷ;ட விரிவுரையாளர்களாகிய ரொஹான் எதிரிசிங்க மற்றும் தமிழ்மாறன் என்போர் உரை நிகழ்த்தினர்.வெளியிடு : கிழக்கு மாகாணத்தில் அதிகாரப்பகிர்வு : 13வது திருத்தத்தின் நடைமுறையாக்கமும், பொதுமக்கள் கருத்துணர்வுகளும் 2008 – 2010
அசங்க வெலிக்கல மற்றும் லயலன் குருகே,
மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம்
வெளியீட்டுத்திகதி : செப்டம்பர் 21, 2010
இந்த ஆய்வு 2008 இல் வெளியிடப்பட்ட அறிக்கையாகிய ‘மாகாணசபை முறைமையை வலுப்படுத்தல்’ என்பதை மேலும் விரிவுபடுத்துவதாகும் –பகுதி 1 கிழக்கு மாகாண சபையைக் குறிப்பிட்டு, மாகாண அதிகாரப்பகிர்வின் ஒரு சட்ட மற்றும் அரசியலமைப்புப் பகுப்பாய்வை வழங்குகின்றது. பகுதி 2 தெரிவுபெற்ற அதிகாரிகள், மாகாணத்தின் அதிகாரவாதக் கட்டமைப்பு, மற்றும் பொது மக்களின் அதிகாரப்பகிர்வு அனுபவங்கள்சம்பந்தமான கருத்துகளையும், கண்ணோட்டங்களையும் பகுப்பாய்வுசெய்கின்றது.இந்த வெளியீட்டின் ஆங்கில, சிங்கள, தமிழ் பதிப்புகளை CPA யிலும், முறையே E – பிரதிகளாகவும் பெற்றுக்கொள்ளலாம். - மாகாணசபைகளில் பயனுறுதியுள்ள நியதிச்சட்டங்களை வகுத்தமைக்க உதவும் ஓர் ஆய்வு– FES
இந்த ஆய்வின் நோக்கம் மாகாணசபைகளில் நியதிச்சட்டங்களை ஆக்குவதன் தற்போதைய நிலையை மதிப்பீடுசெய்வதும், இயைபுள்ள நலன் பிரதிநிதிகள் மத்தியில் இந்த விடயம்குறித்த விளக்கத்தை அதிகரிப்பதுமாகும்.கடந்தகால நியதிச்சட்டங்கள், வரைபு மற்றும் திட்டமிட்ட நியதிச்சட்டங்கள் என்பவற்றைக்கொண்ட மூலவளத்தளமொன்று இந்த ஆய்வுச்செயற்பாட்டின் பெறுபெறாக எமக்குக் கிட்டியுள்ளது.இந்த ஆய்வின் ஒரு பகுதியாக முனைப்பெல்லை அலகு சகல மாகாண சபைகளுக்கும் விஜயம்செய்து, முதலமைச்சர்கள் மற்றும் பிரதம செயலாளர்கள் உள்ளிட்டவகையிலான பொறுப்புவாய்ந்த சபை அங்கத்தினர்கள் மற்றும் உத்தியோகத் தர்களைச் சந்தித்து, நியதிச்சட்ட வரைபுச்செயல்முறையில் சம்பந்தமுற்ற முக்கிய நபர்களுடன் தொடர் கலந்துரையாடல்களை நடத்தியது. கலந்துரையாடப்பட்ட சில தலைப்புகள் நியதிச்சட்டங்களை வகுத்தமைப்பதற்கான முயற்சிகளில் எதிர்ப்படும் சவால்கள் பரஸ்பர கரிசனையுள்ள விவகாரங்களில் ஏனைய மாகாணசபைகளுடன் வலையமைப்புகளை ஏற்படுத்துவதற்கான சாத்தியவளம், மற்றும் மீள்வரைபுச் சட்டவாக்கம் மூலம் தீர்வுகாணப்படவேண்டிய விடயப்பரப்புகள் என்பனவாகும்.மாகாணசபைகளில் சட்டக்குழுக்களின் அங்கத்தவர்கள் மாகாணசபைகளில் நியதிச்சட்டங்கள் வரைபுச்செயல்முறைகுறித்த கருத்துகளையும், ஆலோசனை களையும் வழங்கினர். ஒரு தீர்மானகரமான அவதானிப்பு பெருமளவுக்கு நியதிச்சட்டங்கள் இல்லாமை காரணத்தினால் அனேகமான மாகாணசபைகள் தமக்கு வழங்கப்பட்ட நோக்கெல்லையினுள் கருமப்படமுடியாதிருக்கும் என்பதாகும்.8 மாகாணசபைகளிலான மாகாணத் தீர்மானம்மேற்கொள்வோரும், இயைபுள்ள மாகாண அரசுச் செயற்பாட்டாளர்களும் (வடமாகாணம் தவிர்ந்தவகையில்) உத்தேச ஆய்வுத் தேடல்முடிவுகளின் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தனர். குறிப்பிடக்கூடிய விடயமாக விளங்கியது இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் விளைவாக மூலவளங்களும், மற்றும் நியதிச்சட்டங்கள், நியதிச்சட்டங்களை ஆக்கும் வழிகாட்டல்கள் போன்ற இயைபுள்ள ஆவணங்களும் மாகாணசபைகளிடையே பரிமாறிக்கொள்ளப்பட்டன.மாகாணசபைகளுக்கிடையிலான ஏற்றத்தாழ்வுகளும் சுட்டிக்காண்பிக்கப்பட்டன. உதாரணமாக மேல் மாகாணசபை 60க்கு மேற்பட்ட நியதிச்சட்டங்களை வரைந்துள்ளது. அதேவேளையில் ஊவா மாகாணசபை 30 நிதியச்சட்டங்களை மாத்திரமே வரைந்தது. இந்த நிலைமைக்கான காரணங்களுள் மனிதவளங்களும், அனுபவம்மிக்க ஆளணியினரும் இல்லாமை, அதிகாரிகளின் எதிர்மறையான உளப்பாங்குகள் மற்றும் சில குறிப்பிட்ட அரசாங்க முகவர் நிலையங்களின் எதிர்ப்பு என்பவை உள்ளடங்கும். இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் முடிவில் ஓர் இறுதி அறிக்கை தயாரிக்கப்பட்டது. - கிழக்கு மாகாணசபைகுறித்த ஆய்வு 2009-2010
2009 பிற்பகுதியிலிருந்து 2010 நடுப்பகுதிவரை பிரெட்ரிக் நோமன் பவுண்டேஷன் (FNF) ஆதரவுடன் அலகு 13ஆம் திருத்தம் மற்றும் அதிகாரப்பகிர்வின் அனைத்துமடங்கும் ஆய்வொன்றை மேற்கொண்டது. புதிதாகத் தெரிவுசெய்யப்பட்ட கிழக்கு மாகாணசபையின் அனுபவங்களுக்கு விசேட கவனம் வழங்கப்பட்டது. கணியங்கள்சார் மற்றும் தரம்சார் விளக்கங்களுடன் 13 ஆம் திருத்தத்தில் சட்ட மற்றும் அரசியலமைப்புசார் தாற்பரியங்களும், கிழக்கு மாகாணசபையில் அவற்றின் பாதிப்புகளும் இந்த ஆய்வில் பகுப்பாய்வுசெய்யப்பட்டன. பொதுமக்களிடமிருந்தும், புதிதாக நியமிக்கப்பட்ட சபை அங்கத்தவர்களிடமிருந்தும், பொதுமக்களிடமிருந்தும் நேரடியாகப் பெற்றுக்கொள்ளப்பட்ட சபையின் கருமப்பாடு சம்பந்தமான அபிப்பிராயங்கள் மற்றும் கண்ணோட்டங்கள் இந்த ஆய்வில் முன்வைக்கப்பட்டன. இந்த ஆய்வு யுத்தத்துக்குப்பின்னரான சூழலில் கிழக்கு மாகாணசபையை அபிவிருத்தி மற்றும் மீள்கட்டமைப்புச் செய்வதில் எதிர்நோக்கப்படும் தனிச்சிறப்பான சவால்கள் மற்றும் சிக்கல்நிலைகளைத் பயனுறுதியுள்ளவகையில் சாராம்சப்படுத்தியது.மாகாணப் பகிரங்க சேவைகள் ஆணைக்குழுவின்கீழ் பணியாற்றும் 150 அரசாங்க உத்தியோகத்தர்கள் நேர்முகம் காணப்பட்டதோடு, (24 மாவட்டங்கள்) கவனக்குழுக்கலந்துரையாடல்களும் (FGD) இடம்பெற்றன. மேலும், அமைச்சர்கள் சபை அங்கத்தவர்கள் உள்ளிட்ட வகையில் 30 மாகாணசபை உறுப்பினர்களுடனும் (மொத்த எண்ணிக்கை 36) அமைச்சுச் செயலாளர்கள் உள்ளிட்டவகையில் கிழக்கு மாகாணசபையின் முக்கிய உத்தியோகத்தர்களுடனும் கலந்தாலோசனைகளும் இடம்பெற்றன.இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் முடிவில் மும்மொழி வெளியீடொன்று இரண்டு பகுதிகளாகத் தயாரிக்கப்பட்டது- ‘ஒற்றையாட்சியின் கீழ் அதிகாரப்பகிர்வு : 13ஆம் திருத்தத்தின் ஓர் அரசியலமைப்பு ரீதியான கணிப்பிடு’ என்று தலைப்பிடப்பட்ட, கிழக்குமாகாணத்தின் அனுபவங்களை விபரிக்கும் பகுதி CPA அமைப்பின் சட்ட மற்றும் அரசியமைப்பு அலகின் அசங்க வெலிக்கல அவர்களால் 13வது திருத்தத்தின் கட்டமைப்புச் சட்டகம் மற்றும் அதைச் செயற்படுத்தும் நடைமுறைகள் குறித்த கணிப்பீடுகள் மற்றும் கிழக்கு மாகாணசபையின் காத்திரமான அனுபவங்களை கவனத்திற்கொண்டு பகுதி 1 இல் எடுத்துரைக்கப்பட்டுள்ளன. இது பிரயோகமாகும் சட்டங்கள், அரசியலமைப்பு ஏற்பாடுகள் மற்றும் காலப்போக்கில் அவற்றின் நீதிமுறைசார் மற்றும் நிர்வாக வியாக்கியானங்கள் மற்றும் இயைபுள்ள நிறுவனங்களின் செயற்பாட்டாளர்களின் நடைமுறைகள் மற்றும் நடத்தைக்கோலங்கள் சம்பந்தமான விடய வாசக விபரிப்பாகும். இப்பகுப்பாய்வு நியதிச்சட்டச்சட்டகத்திலும், நிர்வாக நடைமுறையிலும் மாற்றங்கள் சம்பந்தமான சில விதந்துரைப்புகளுக்கு அடிப்படையாக அமைந்துள்ளன. இது 13வது திருத்தத்தின் வரைவெல்லைகளுள் அதிகாரப்பகிர்வை மேம்படுத்தும் முயற்சியாகும்.
- பணியாற்றும் புதிதாகத் தெரிவுசெய்யப்பட்ட சபையொன்று குறித்த கணிப்பீடு : ஓர் உயர் வரிசை மதிப்பாய்வு’ , என்று மகுடமிடப்பட்ட பகுதி II அதிகாரப் பகிர்வின் கட்டமைப்பு மற்றும் நடைமுறைகள்சம்பந்தமான கருத்துணர்வுகள் மற்றும் உளப்பாங்குகள்குறித்த மதிப்பாய்வு வழிமுறைகள் மற்றும் கிழக்கு மாகாணப் பொதுமக்களின் கருத்துணர்வுகள் இணைந்த ஒரு பகுதியாகும். புதிலளித்தோரிடம் மாநகரசபைகள், காணிப்பிரச்சினைகள், சிறுபான்மையோர் போன்றவற்றுக்கு (மேலதிகமாக, தெரிவு செய்யப்பட்ட மாகாண சபையின் கருமங்கள், மீளிணக்கம் மற்றும் யுத்தத்துக்குப்பின்னரான சூழ்நிலை குறித்த கேள்விகள் கேட்கப்பட்டன. மதிப்பாய்வு அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் நடத்தப்பட்டது.
- கிராமப்புறக் கல்வி உதவி நிகழ்ச்சித்திட்டம் – 2009 – 2012கிராமப்புறக்கல்வி உதவி நிகழ்ச்சித்திட்டம் அமெரிக்காவின் Sahaya Foundation நிதியுதவியுடன் இலங்கையின் மிகவம் ஏழ்மை நிலையிலுள்ள சிறுவர்கள் சிலருக்கும் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைககளுக்கும் ஒப்புரவான கல்வியைப் பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகளுக்கு உதவும்முகமாக இடம்பெற்றதாகும். உள்ளூர்ப்பங்காளரான மாற்றுக்கொள்கைகள் நிலையத்தினால் நிர்வகிக்கப்படும் இந்த நிகழ்ச்சித்திட்டம் மிகவும் கடினமான சூழ்நிலைகளில் மாணவர்களின் செயல்நிறைவேற்றத்தைக் கவனத்திற்கொண்டு சிறிய அளவிலான புலமைப்பரிசில்களை வழங்குகின்றது. 2006ஃ7 காலப்பகுதியில் இதற்குமுன்னர் இடம்பெற்ற CPA ஜனசமூக பரிமாற்ற நிகழ்ச்சித்திட்டத்தில் ஈடுபட்டிருந்த பல பாடசாலைகள் இதற்காகத் தெரிவுசெய்யப்பட்டன. அதிபர் மற்றும் தற்போது மாணவர்கள் பயிலும் குறித்துரைத்த பாடசாலையில் போதிக்கும் உயர்தரத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் என்போர் பெயர்குறித்து நியமித்த புலமைப்பரிசில் பெறும் மாணவர்கள் நேர்முகம் காணப்பட்டனர் அதன்பின்னர் ஊPயு பிரதிநிதிகள் அவர்களின் வீடுகளுக்கு விஜயம்செய்து, அவர்களின் குடும்பப் பின்னணியை ஆய்வுசெய்து, அவர்களின் பொருத்தம் குறித்து மேலும் கணிப்பீடுகளை மேற்கொண்டனர். இரண்டு கட்டங்களாக இடம்பெற்ற இந்த நிகழ்ச்சித்திட்டம் 2011 வரை தொடர்ந்தது.
- சிறுபான்மைக் குழுக்களைச் சேர்ந்த மக்களின் உரிமைகள் – செய்திப் பத்திரிகைக் கட்டுரைத்தொடர்கள் CPA சிறுபான்மையோர் உரிமைகள் குழுவுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட ஒரு கருத்திட்டத்தின் பகுதியாக, நாட்டின் பல்வகைமையான பிராந்தியங்களிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட சிறுபான்மைக்குழுக்கள் மத்தியில் மக்களின் வாழ்க்கை நிலைமைகள் மற்றும் மனித உரிமைகள் நிலை என்பவற்றை ஆய்வுசெய்தது. இதன் விளைவாகக் கிட்டிய தகவல் உள்ளடக்கம் பிரதான பிரவாகச் சிங்கள வார இறுதிச் செய்திப்பத்திரிகளில் பின்னர் வெளிவந்த 13 கட்டுரைகள்கொண்ட ஒரு தொடரினுள் உள்ளடக்கம்பெற்றது. இப்பத்திரிகைகள் நாடு முழுவதுமுள்ள சுமார் 8 மில்லியன் வாசகர்களின் கைகளைச் சென்றடைகின்றன. (ஞாயிறு திவயின மற்றும்; லங்காதீப) இந்த ஆய்வுக்காக ஜூலை 22ஆம் திகதியிலிருந்து டிசம்பர் இறுதிப்பகுதிவரை யாழ்ப்பாணம் மற்றும் பாணமை உள்ளிட்டவகைகளில் இந்த ஆய்வுக்காக முனைப்பெல்லை அலகு 8 வித்தியாசமான பிரதேசங்களுக்கு விஜயம்செய்தது. இலங்கையில் இலகுவில் பாதிப்புறும், ஓரங்கட்டப்பட்ட ஜனசமூகங்கள்குறித்த இந்த ஆய்வை மேலும் பரவலாக PeaoplesRights.lk எனப்படும் வெப்தளத்தினூடாக CPA யின் கணினித் தொடர்பாளர்களுக்கு அனுப்பும்வகையில் இக்கட்டுரைகளின் மொழிபெயர்ப்பு வேலைகளும் ஆரம்பிக்கப்பட்டன.
கீழே தரப்பட்டுள்ள அட்டவணை மேலதிக தகவல்களை வழங்குகின்றது.
15) கருத்திட்டத் தலைப்பு – சமஷ;டிகுறித்த விழிப்புணர்வை அதிகரித்தல் (ARF)
இட அமைவுகள் – நாடு முழுவதும்
இலக்குக் குழுக்கள் – பொதுமக்கள், மதத் தலைவர்கள், CBO அங்கத்தவர்கள்
காலம் – ஆகஸ்ட் 2005 – நவம்பர் 2005
விபரிப்பு : இங்கு பிரதான குறிக்கோள் உள்ளூர் ஜனசமூகங்களிடையே சமஷ;டி என்னும் எண்ணக்கரு குறித்த விழிப்புணர்வையும், விளக்கத்தையும் உருவாக்குதல் ஆகும். 2005 ஆகஸ்டில் 20 பயிற்றுநர்களைப் பயிற்று விக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு மக்களை சமஷ;டி எண்ணக்கருவின் பிரயோகம், இதன் தவறான வியாக்கியானங்களைத் தெளிவுபடுத்துதல் இனப்பிரச்சினைக்கான சாத்தியமான தீர்வாக அதை முன்வைத்தல் மற்றும் ஒரு சமாதானமான தீர்வுக்கான ஒரு வழிமுறையாக அதைப்பயன்படுத்துதல் குறித்துக் கல்வியூட்டும்வகையில் 147 மாவட்டச் செயலமர்வுகள் நடத்தப்பட்டன. பங்கேற்போர் ஊடீழு அங்கத்தவர்கள் ஆசிரியர்கள், மதத்தலைவர்கள், மாணவர் தலைவர்கள் மற்றும் ஆர்வங்காண்பித்த ஜனசமூகத்தலைவர்கள் என்போரிலிருந்து தெரிவுசெய்யப்பட்டனர். ‘இலங்கையின் எதிர்காலமும், சமஷ;டி யோசனையும்’ என்னும் இறுதி ஆய்வரங்கு கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் 2006 பெப்ருவரி 06 ஆம் திகதி இடம்பெற்றது. நாடு முழுவதிலுமிருந்து 1000க்கு மேற்பட்டோர் இதில் பங்குபற்றினர். இதுவே சமஷ;டித் தீர்வொன்றை ஒரு கருப்பொருளாகக் கலந்துரையாடிய நாட்டின் மிகப்பெரிய கூட்டம் என்ற நிகழ்வுண்மை குறிப்பிடக்கூடிய ஒன்றாகவிருந்தது. 2006 ஆம் ஆண்டுக்கான நிகழ்ச்சித்திட்டம் மொத்தம் 40 பயிற்றுனர்களை ஈடுபத்தி நாடு முழுவதும் 320 திட்டமிட்ட செயலமர்வுகளுக்கான ஒன்றாகவிருந்தது. 2007 இல் நாம் 800 செயலமர்வுகளில் மேலும் 60 பயிற்றுநர்களைப் பயிற்றுவித்து, மொத்தமாகச் சம்பந்தமுறும் நபர்களின் மொத்த எண்ணிக்கையை 20,0000 ஆக அதிகரிப்போம். இது தெரிவுசெய்யப்பட்ட 100 பிரதேசச் செயலாளர் பிரிவுகளில் இடம்பெறும். 2008 க்கான இலக்கத்தொகைகள் 200 பயிற்றுநர்களும், மொத்தம் ஈடுபடுத்தப்படும் நபர்களின் மொத்த எண்ணிக்கை 40,000 பேருமாகும்.குறியிலக்கு :
• ஜனசமூகங்களுக்குச் சமஷ்டி என்னும் எண்ணக்கருவை அறிமுகம்செய்தல் ,
• 144 விழிப்புணர்வூட்டல் செயலமர்வுகளூடாக இந்த எண்ணக்கருவின் பிரயோகங்கள், மற்றும் தவறான வியாக்கியானங்களைக் தெளிவுபடுத்துதல் என்பதை அடிமட்டத்திலான பங்காளர் அமைப்புகளுடன் இணைவாக மக்களுக்குக் கல்வியூட்டும் நடவடிக்கையாக முன்னெடுத்தல்
• சமஷ்டியை இனப்பிரச்சினைக்கான ஒரு சாத்தியமான தீர்வாக முன்வைத்தலும், சமாதானமான பேச்சுவார்த்தைமூலமான தீர்வுக்கான ஒரு வழிமுறையாகப் பயன்படுத்துதலும்
• கலந்துரையாடல்கள் மற்றும் விவாதங்கள்மூலமாக ஒரு ‘சமஷ;டி உணர்வூட்டப் பட்ட’ ஜனச்சமூகத்தை உருவாக்குதல்
• சர்வதேச சூழ்நிலைகளில் இக்கோட்பாடுகளின் பிரயோகத்தின் ஒப்பீட்டுப் பகுப்பாய்வை நடத்துதல், உதாரணம் : ஏனைய நாடுகளில் இத்தகைய பிரச்சினை களுக்கான சமஷ;டித்தீர்வுகள் எவ்வாறு செயற்படுகின்றனவென்பதை எடுத்துக் காட்டுதல் மற்றும் உள்நாட்டுச் சூழ்நிலைகளுக்கு இக்கருத்தின் வரலாற்று ரீதியான இசைவாக்கத்தை வலியுறுத்துதல்
• பல்வேறு பின்னணிகளைச்சேர்ந்த பல்வேறு மக்களின் தேவைகளுக்கு ஏற்றவகையில் இந்த எண்ணக்கருவின் இயக்கத் துடிப்பாற்றலை எடுத்து விளக்குதல்
• இறுதியில் சமஷ;டிச் சமூகமொன்றைக் கட்டியெழுப்பும் குறிக்கோளுடன் உள்ளூர் ஜனசமூகங்களிடையே இவ்வெண்ணக்கரு சம்பந்தமான விழிப்புணர்வையும், விளக்கத்தையும் உருவாக்குதல்முனைப்பெல்லை அலகு வெளியீடுகள்
1. இலங்கையின் இனப்பிரச்சிகையும், அதற்கான தீர்வுகளும் (3 மொழிகளிலும்)
2. சமஷ்டி யோசனை (3 மொழிகளிலும்)
3. அவசரகாலநிலைச் சட்டமும், பாராளுமன்றமும் (சிங்களம்)
4. Perderal Wadaya ( சம்மேளனங்கள் அரங்கின் சம்மேளனங்கள் என்னும் காலந்தரியின் மொழிபெயர்வு)
5. கிரிஷாந்தி குமாரசுவாமி வழக்கின் தீர்ப்பு (3 மொழிகள்)
6. இன முரண்பாடும், இனத்துவச் சிறுபான்மையோரின் பொறுப்புகளும் (சிங்களம், தமிழ்)
7. அதிகாரப் பகிர்வு (3 மொழிகள்)
8. கருத்துரை : பேச்சுவார்த்தைகளின் கட்டமைப்பும், செயல்முறையும் (3 மொழிகள்)
9. சுனாமி : புனர்வாழ்வு குறித்த முன்மொழிவுகள் (3 மொழிகள்)
10. இலங்கையில் சமஷ்டி எண்ணக்கருவின் பரிணாமம் (3 மொழிகள்)
11. பௌத்த மதமும், முரண்பாட்டுத்தீர்வும்
12. ‘உள்ளூராட்சி – ளு.பு.புஞ்சிஹேவா, சட்டத்தரணி, இலங்கையில் பிரயோகமாகும் உள்ளூராட்சி குறித்த விபரிப்புகளும், வரைவிலக்கணங்களும். உள்ளுராட்சி சபைகளின் வகைப்பிரிவுகளும். அவற்றின் தத்துவங்களும், உப விதிகளும், வரிகள் மற்றும் இறைவரிப் பிறப்பாக்கம், சொத்துக்கள் கணிப்பீடு, இடைக்காலச் சட்டவாக்கங்கள் போன்றவற்றின் விபரமான கலந்துரையாடல் (சிங்களம், தமிழ்)
14. ‘பிராந்திய அரசாங்கமும், அதன் பிரதிநிதிகளின் பாத்திரமும், பொறுப்புகளும்’ – ளு. பு. புஞ்சிஹேவா, சட்டத்தரணி, குழு அங்கத்தினர்கள், தவிசாளரினதும், ஏனையோரினதும் கடமைகளும், பொறுப்புகளும், உள்ளூராட்சி சபைகளில் குழு முறைமை, நகரசபைகள் மற்றும் மாநகரசபைகளின் குழுக்கள் என்பவை உள்ளடங்கலாக உள்ளூராட்சி சபைகளின் உள்நிலைச்செயற்பாடுகளை விபரிப்பது.
15. ‘உள்ளூராட்சி நிறுவனங்கள்’ – உப்புல ஆபேரத்ன, சிரேஷ;ட விரிவுரையாளர், அரசியல் விஞ்ஞானப்பிரிவு, ருகுணை பல்கலைக்கழகம். ஓரளவுக்கு ளு. பு. புஞ்சிஹேவாவின் சிறுநூலாகிய ‘உள்ளூராட்சி’ இல் காணப்படும் தலைப்புகள் ஒழுங்கமைப்பை ஒத்தது. இது உள்ளூராட்சி சபைகளினுள் காணப்படும் உள்நிலை நடவடிக்கைமுறைகள், கட்டமைப்புகள் மற்றும் இடைத்தொடர்புகளை விபரமாக எடுத்துரைக்கின்றது.
16. ‘பிராந்திய ஆட்சி, நோக்கங்கள் மற்றும் நடவடிக்கைமுறைகள்’ தம்ம திசாநாயக்க. சிரேஷ;ட விரிவுரையாளர், அரசியல் விஞ்ஞானம் மற்றும் பகிரங்கக் கொள்கைப்பிரிவு, கொழும்பு பல்கலைக்கழகம். 26 விபரிப்புகளினூடாக உள்ளூராட்சி சபைகளின் குறியிலக்குகள் எடுத்துரைக்கப்பட்டுள்ளதோடு, அவுஸ்திரேலியா, இந்தியா போன்ற ஏனைய நாடுகளில் காணப்படும் உள்ளூராட்சி முறைகளுடன் ஒரு சுருக்கமான ஒப்பீட்டையும் வழங்குகின்றது (சிங்களம், தமிழ்)
17. ‘உள்ளூராட்சி, தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கான உரிமை’ சுனந்த தேசப்பிரிய, பத்திரிகையாளர், சுதந்திர ஊடக, இயக்கத்தை ஆரம்பித்தவர். மிகத் தீர்மானகரமான பிரஜைகளின் தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் உரிமை’ என்பதோடு, மக்களின் வாழ்வில் உள்ளூராட்சி சபைகளின் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்துகின்றது.
18. ‘ஊழல்கள் மற்றும் முறைகேடுகளற்ற. ஒளிவுமறைவில்லாத உள்ளூராட்சியை உருவாக்குதல்’ ஜகத் லியனாராச்சி, சட்டத்தரணி. அங்கத்தவர்கள் மற்றும் உத்தியோகத்தர்களின் ஊழலைக் கட்டுப்படுத்தும் நடைமுறை சாத்தியமான வழிமுறைகளை விளக்குகின்றது (சிங்களம், தமிழ்)