தங்கையின் திருமண நாளில் பொலிசாரால் அலைக்கழிக்கப்பட்டோம்!
தங்கையின் திருமண நாளில் வவுணதீவு பொலிஸ் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்பட்டு சங்கடத்தை எதிர்நோக்கினோம் என்று மட்டக்களப்பைச் சேர்ந்த ல.பவானந்தினி (35) மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.
மண்டபத்தடி, கண்ணன்குடாவை சேர்ந்த இவர் தனது முறைப்பாட்டை வவுணதீவு பொலிசாருக்கு எதிராக முன்வைத்துள்ளார்.
தனது முறைப்பாட்டில் அவர் கூறியுள்ளதாவது:
“2020.11.26 அன்று எனது தங்கையின் திருமணம் நடைபெற்றது. அதற்காக கூடாரம் அமைக்கப்பட்டது. ஆனால் மாவீரர் நாளுக்காக கூடாரம் அமைக்கின்றோம் என்று கருதி எங்களை பொலிசார் அழைத்து விசாரித்தனர். மறுநாள் நாங்கள் கிராம உத்தியோகத்தர், சுகாதார உத்தியோகத்தர் போன்றவர்களிடம் ஆவணங்கள் பெறப்பட்ட பின்னர் பொலிசார் எங்களை விடுவித்தனர்”. என்று அவர் விபரித்துள்ளார்.
இதுபோன்ற சங்கடமான நிலை ஏற்படாமல் இருந்தால் போதுமானது என்றும் இதற்கான வழிவகைகளை மனித உரிமைகள் ஆணைக்குழு முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
– மட்டக்களப்பு பவானந்தினி
This post is also available in: English සිංහල