குறியீடுகள் – எல்லா அரச நிறுவனங்களாலும்;, குறிப்பாக இருமொழி பேசும் பிரதேசங்களில் குறியீட்டுப் பலகைகள், வீதிகளின் பெயர்ப்பலகைகள் மற்றும் உத்தியோகபூர்வ ஆவணங்கள் மூன்று மொழிகளிலும் இருக்கN;வண்டுமென்பது ஏற்றுக்கொண்ட விடயமாக இருப்பினும், உண்மையான நிலமை சில அரச நிறுவனங்கள் இவ்வாறான பெயர்பலகைகளை அல்லது உத்தியோகபூர்வ ஆவணங்களை மூன்று மொழிகளிலும் காட்சிப்படுத்துவதில்லை என்பதாகும். உதாரணமாக கொழும்பு மாவட்டத்திலுள்ள திம்பிரிகஸ்யாய, கொட்டாஞ்சேனை போன்ற பிரதேசச் செயலகங்களில் இக்கொள்கைகள் எந்தளவுக்கு நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றால், சிறுபான்மை சமூகத்தினரின் அத்தியாவசியமான ஆவணங்களான, பிறப்பு, இறப்பு, திருமண சான்றிதழ்கள் கூட அவர்களுடைய சொந்தமொழியில் கிடைப்பதில்லை.
உற்பத்திப்பொருட்கள் தகவல்கள் – மருந்தாக்கற் தொழிற்றுறை மீறல்கள்:
மேலுமொரு பாரதூரமான மொழிஉரிமை மீறல் மருந்தாக்கற் தொழிற்றுறையில் இடம்பெறுகின்றது. இங்கு, கிட்டத்தட்ட சகல மருந்துகள் உபகரணங்கள் மற்றும் மருந்து மூலிகைகள் என்பன தற்பொழுது ஆங்கிலத்தில் மட்டுமே பெயரிடப்படுகின்றன. இந்நாட்டின் பெரும்பான்மையான சிங்கள, தமிழ் நுகர்வோர் மருந்துகளை வாங்கும்போது நோயாளிகளும் பராமரிப்பாளர்களும் அத்தியாவசியமான தகவல்களான அளவுகள், பக்கவிளைவுகள், மாற்று ஏற்பர்டுகள் அல்லது வேறு தகவல்கள் என்பவற்றை அறியாதிருக்கின்றனர். அத்தோடு, குறிப்பாக வடக்கு, கிழக்கு பகுதியிலுள்ள அரச வைத்தியசாலைகளில் பணியாற்றும் வைத்தியர்கள், தாதிகள் மற்றும் வைத்திய பணியாளர்கள் தமிழ் பேசாததினால் நோயாளிகள் இக்கட்டான நிலையை எதிர்கொள்ளுகின்றனர். நோய்வாய்பட்டு அல்லது காயப்பட்டு வேதனைப்படும் நோயாளிகள் பீதியினால் நம்பிக்கையிழந்திருக்கும் வேளையில், புரியாத மொழியில் மருந்து முறைகளும், பொருத்தமான தகவல்களும் கொடுக்கப்படுவதால் அது அவர்களை மேலும் இக்கட்டான நிலைக்கு ஆளாக்குகின்றது.