குடியேற்றவாத ஆட்சிக்காலம்தொட்டு இலங்கையின் பொதுக்கல்விமுறையில் சிங்களம், தமிழ் என்னும் இரு மொழிகளிலும் கல்வி கற்பிக்கப்படுகின்றது எப்படியெனினும், பிரயோகத்தில் அநேக பிரதேசங்களில் ஏற்றமொழியில் ஆசிரியர்கள் இல்லை. வலயக் கல்வி அலுவலங்களிலிருந்து சிங்களத்தில் மட்டுமே கடிதங்கள் அனுப்பப்படுகின்றன. தமிழ் ஆசிரியர்களுக்கு (ஆசிரியர் வழிகாட்டிகள், கற்பித்தல் நெறிமுறை) சிங்களத்தில் அனுப்பப் படுகின்றன. அநேக சந்தர்ப்பங்களில் மொழிபெயர்ப்புகள் பிரயோசனமற்றவிதத்தில் தாமதமாகவே அனுப்பப்படுகின்றன. இருமொழிகள் உபயோகத்திலுள்ள கொழும்பு போன்ற பிரதேசத்திலுள்ள பாடசாலைகளில் மாணவர் காலைக்கூட்டங்கள் சிங்களத்தில் மட்டுமே நடைபெறுகின்றன. அநேகமாக, பாடசாலை மாணவர்களுக்;கு உத்தியோகபூர்வ மொழி பெயர்ப்புகள் கிடைப்பதில்லை. பாடசாலைக்கும், பெற்றோருக்கும் இடையிலான தொடர்பாடல் சிங்களத்திலேயே நடைபெறுகின்றது. சிலவேளைகளில், சிங்களம் பேசத்தெரியாத காரணத்தினால் பெற்றோருக்கு பாடசாலை வளவுக்குள் செல்லமுடியாமலிருக்கிறது. பல்கலைக்கழகங்கள் ஆங்கிலத்திலும், சிங்களத்திலும் சில பாடத்திட்டங்களை நடத்துவதன் மூலம் சிறுபான்மையினரின் உரிமையான, கல்விக்குரிய சரிசம உரிமையை மீறுகின்றன.