நீதிவழிமுறையின் எந்தவொரு நிலையிலும், குற்றச்சார்த்துதல் பெற்றவர் தனது தாய்மொழியில் எதிர்வாதம் கூறமுடியாமல், தவறான மொழிப்பெயர்புகளில் தங்கியிருப்பதால் சரியான நீதி வழங்கப்படாத சந்தர்ப்பம் ஏற்படுகிறது. நேர்காணல்கள்மூலம் கண்டறியப்பட்ட விடயங்களில் ஒன்றானது, தமிழ் பிரிஜைகளினால் பொலிஸ் நிலையங்களில் செய்யப்பட்ட முறைப்பாடுகள் சிங்களத்தில் பதிவுசெய்யப்படுகின்றது என்பதாகும். மேலும், முறைப்பாட்டளர்கள் இவ்வாக்குமூலங்களுக்கு கையொப்பம் இடுமாறு கூறப்படுகின்றனர். (வவுனியா, திருகோணமலை, மன்னார், அம்பாறை) கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் பிரஜைகள் சிங்களத்தில் நீதிமன்ற அழைப்பாணைகளைப் பெறுகின்றனர். இலங்கையின் பல பாகங்களில் நீதிமன்ற நடவடிக்கைகள் மற்றும் வழக்கு விசாரணைகள் ஆகியன சிங்களத்தில் மட்டுமே நடாத்தப்படுகின்றன.