புதிய அரசியலமைப்பு உருவாக்கச் செயற்பாடு தொடர்பான சமகால கலந்துரையாடல்
புதிய அரசியலமைப்பு உருவாக்கச் செயற்பாடு தொடர்பான சமகால கலந்துரையாடலொன்று ஹோட்டல் ரேணுகாவில் இன்று இடம்பெற்றது. இக்கலந்துரையாடலுக்கு பாராளுமன்ற உறுப்பினர்களான கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன, சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன், கலாநிதி பாக்கியசோதிசரவணமுத்து, சட்டத்தரணி ஷிரால் லக்திலக மற்றும் சட்டத்தரணி நிஸாம் காசியப்பர் போன்ற புத்திஜீவிகள் கருத்துரை வழங்கினர்.பொதுமக்கள் கருத்தறி குழுவின் தலைவர் சட்டத்தரணி லால் விஜேநாயக்க மற்றும் சிவில் செயற்பாட்டாளர்கள் மற்றும் புத்திஜீவிகள் பலர்அரசியலமைப்பு மாற்றத்திற்கான பிரஜைகளின் முயற்சியின் சார்பில் திரு. லயனல் குருகே அவர்கள் வழிநடத்தியிருந்தார்.
புதிய அரசியலமைப்பு உருவாக்கச் செயற்பாட்டை துரிதப்படுத்தும் முறை தொடர்பாக அரசியலமைப்பின் உள்ளடக்கத்தை மேலும் சிறப்பானமுறையில் தயாரிப்பது குறித்து சிவில் சமூகத்தின் வகைப்பொறுப்பு மற்றும் என்ன என்பது குறித்த பல்வேறுகலந்துரையாடல்கள் இடம்பெற்றன.