கட்சிகளின் உள்ளக சனநாயகமும் உறுதிப்படுத்தப்பட வேண்டும்

கட்சிகளின் உள்ளக சனநாயகமும் உறுதிப்படுத்தப்பட வேண்டும்

கலாநிதி ஹரிணி அமரசூரிய
பாராளுமன்ற உறுப்பினர் – தேசிய மக்கள் சக்தி

இத்தருணத்தில் தேசிய மக்கள் சக்தி என்ற வகையில் இந்த பிரசைகளின் எழுச்சியை, அரசியல் விழிப்புணர்வுடன் எமது நாட்டுக்குத் தேவையான அரசியல் மாற்றம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டு வருகின்ற தருணமாகவே பார்க்கின்றோம். குறிப்பாக சனநாயக கட்டமைப்புக்குள், மக்கள் பிரதிநிதிகளுக்கும் பிரசைகளுக்குமிடையே காணப்படும் தொடர்பு பற்றிய புதிய வரைவிலக்கணம் அவசியப்படுகின்றதும் அது பற்றிய கலந்துரையாடல் தோன்றியுள்ளதுமான தருணம். சுருக்கமாகச் சொன்னால், ஆட்சியாளர்களுக்கும் பிரசைகளுக்குமிடையில், புதிய சமூக உடன்படிக்கையொன்று கோரப்படும் நேரம். தேசிய மக்கள் சக்தி என்ற ரீதியில் நாம் இன்று காணப்படும் அரசியலமைப்பின் மூலம் வரக்கூடிய அதிகபட்ச தூரத்தைக் கடந்து வந்துள்ளோம். இதனைத் தொடர்ந்தும் சீர்திருத்துவதன் மூலம் எமது நாட்டின் சனநாயகத்தை விரிவாக்கவோ வலுப்படுத்தவோ முடியாது என்பது பலகாலமாக நாம் பேசுகின்ற விடயம்.

 

சனநாயகம் சார்பில் இவ்வரசியலமைப்பு பற்றிய பல விமர்சனங்கள் உள்ளன. எனவே நாம் புதிய அரசியலமைப்பொன்றைத் தான் பிரேரிக்கின்றோம். நாம் 2018லிருந்தே அடிப்படை ரீதியான சில பிரச்சனைகளைப் பேசுவதற்காக புதிய அரசியலமைப்பொன்றுக்கான ஆலோசனையை விடுத்தோம். தேசிய மக்கள் சக்தி என்ற ரீதியில் நாம் இன்று காணப்படும் அரசியலமைப்பின் மூலம் வரக்கூடிய அதிகபட்ச தூரத்தைக் கடந்து வந்துள்ளோம். இதனைத் தொடர்ந்தும் சீர்திருத்துவதன் மூலம் எமது நாட்டின் சனநாயகத்தை விரிவாக்கவோ வலுப்படுத்தவோ முடியாது என்பது பலகாலமாக நாம் பேசுகின்ற விடயம். 22 புதிய அரசியலமைப்பிற்கான சவால் சமத்துவத்தை சான்றுப்படுத்தல் போராட்டம் நடத்தியதும், சிரமப்பட்டதும், ஆயுதப் போராட்டம் போன்றவற்றை மேற்கொண்டதும் ஆட்சியாளருக்கும் பிரசைக்கும் இடையிலான இந்த சமூக இணக்கப்பாட்டைச் சரிசெய்து கொள்வதற்காகத்தான் என இலங்கைப் பிரசைகள் என்ற வகையில் எமது மக்கள் நினைக்கின்றார்கள் என்பது ஒரு விடயம். பல வருடங்களுக்குப் பின்னரும் கூட அது சரியாக இடம்பெறவில்லை என்பதை ஏற்றுக் கொள்ள நேரிடுகின்றது.

 

அதனைக் கட்டியெழுப்புவதுதான் எமது அடிப்படை நோக்கம். சமத்துவத்தையும் சமமான சமூக நியாயத்தையும் உறுதிப்படுத்துவது அடுத்த நோக்கமாகும். அரசியலமைப்பொன்றில் அது மிக முக்கியமான ஒன்று. அங்கு பிரசைகளின் பல்வேறு வகையான அடையாளங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு பக்கச்சார்புகளை மேற்கொள்ள முடியாதவாறு, உரிமைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும். மனித உரிமைகள் அத்தியாயத்திலும் தனிநபர் அடையாளம் மட்டுமன்றி குழுக்களின் அடையாளங்களும் பாதுகாக்கப்பட வேண்டும். பால்நிலை, பாலியல், மத, கலாசார அடையாளங்கள் போன்றவை பாதுகாக்கப்படும் வகையிலான அரசியலமைப்பொன்று அவசியம். ஏனெனில் எமது சமூகத்தில் பன்மைத்துவம் காணப்படுவதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்பன்மைத்துவத்தில் இரண்டாம் தர (second class citizens) பிரசைகள் இருக்க வாய்ப்பில்லை. சமத்துவம் உறுதிப்படுத்தப்பட
வேண்டும்.

 

பிரசைகளின் அதிகாரத்தை அதிகரித்தல் சனநாயகத்தை வலுப்படுத்த வேண்டுமாயின் பிரசைகளின் அதிகாரம் அதிகரிக்கப்பட வேண்டும் என்பது அடுத்த விடயம். இறையாண்மை பிரசையிடம்தான் உள்ளது. என்றாலும் எம்மால் இப்போதிருக்கின்ற முறைக்கு ஏற்ப, இறையாண்மை அதிகாரத்தை காட்டவோ அதனைச் செயற்படுத்தவோ தேர்தலொன்றின் போது மட்டுந்தான் முடிகிறது. அது போதுமானது அல்ல என நாம் நினைக்கின்றோம். சனநாயகத்தை வலுப்பெறச் செய்வதாயின், விரிவாக்குவதாயின், பிரசையொருவர் ஆட்சிச் செயற்பாட்டில் இதைவிட வலிமையோடு, தொடர்ச்சியாகச் செயற்படுவது எப்படியென்பதைப் பற்றியும் கவனத்திற் கொள்ள வேண்டும். அதனூடாக எம்மிடம் சில பிரேரணைகள் உள்ளன. இவை இறுதிப் பிரேரணைகளோ இறுதித் தீர்மானங்களோ அல்ல. இவற்றை நாம் கலந்துரையாடி வருகின்றோம். நான் ஓரிரு உதாரணங்களைக் குறிப்பிடுகின்றேன். தேர்தலொன்றின் போது அதிகாரத்திற்கு வரும்போது செய்யப்படுகின்ற விடயங்கள் தொடர்பில் அரசியற் கட்சிகள், அவர்களின் தேர்தல் பிரகடனங்களை முன்வைக்கின்றன, வாக்குறுதிகளை முன்வைக்கின்றன.

 

அவற்றுக்கு ஏதேனுமொரு செல்லுபடித் தன்மை இருக்க வேண்டும் என நாம் நினைக்கின்றோம். அத்தேர்தல் பிரகடனங்களுக்கு ஏற்ப நியமிக்கப்படுகின்ற அரசாங்கம் அவற்றைச் செயற்படுத்துவதில் கடப்பாடுடையதாக இருத்தல்வேண்டும். அந்த விடயம் அரசியலமைப்பு ரீதியாக உறுதிப்படுத்தப்பட வேண்டும். வழங்கப்பட்ட அவ்வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை, தமது மனித உரிமையொன்று மீறப்பட்டுள்ளது என யாரேனும் ஒரு நபர் நீதிமன்றத்திற்குச் செல்லக்கூடிய ஆற்றல் இருக்க வேண்டும். அப்போது அரசியற் கட்சிகள் தாம் முன்வைத்த தேர்தற் பிரகடனங்கள், வாக்குறுதிகள் என்பவற்றை நிறைவேற்றுவதில் கடப்பாடுடையவையாக இருக்கும். அப்போது தேர்தற் பிரகடனங்கள் எச்சரிக்கையுடன் சமர்ப்பிக்கப்படும் என நாம் நினைக்கின்றோம். முடியாத விடயங்களைச் செய்வதாக வாக்குறுதி வழங்காதிருப்பதைப் போன்றே பொய்யான வாக்குறுதிகளை வழங்கி மக்களை ஏமாற்றவும் தயாராக மாட்டா. ஏனென்றால தமது உரிமையொன்று மீறப்படுகின்றது என பிரசையொருவர் வழக்குத் தொடர அரசியலமைப்பு ரீதியாக வாய்ப்பு உள்ளது. பால்நிலை, பாலியல், மத, கலாசார அடையாளங்கள் போன்றவை பாதுகாக்கப்படும் வகையிலான அரசியலமைப்பொன்று அவசியம். ஏனெனில் எமது சமூகத்தில் பன்மைத்துவம் காணப்படுவதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்பன்மைத்துவத்தில் இரண்டாம் தர பிரசைகள் இருக்க வாய்ப்பில்லை.

 

புதிய அரசியலமைப்பிற்கான சவால் 23 திருப்பியழைக்கும் அதிகாரம் வழங்கப்பட வேண்டும் நாங்கள் சிந்திக்கின்ற இன்னுமொரு விடயம் (Right to Recall). திருப்பியழைக்கும் அதிகாரம். அதாவது தேர்தலொன்றில் நியமிக்கப்படும் மக்கள் பிரதிநிதியின் நடத்தை பற்றிய விமர்சனங்கள் அவரை நியமித்த பிரசைகளிடம் இருக்குமாயின், அவர்கள் ஊழலில் ஈடுபடுவார்களாயின், ஏற்றுக் கொள்ள முடியாதவாறு நடந்துகொள்வார்களாயின் மனுவொன்றின் மூலம் அல்லது தேர்தலின் ஊடாக பிரசைகளுக்கு அவர்களைத் திருப்பியழைக்கும் அதிகாரம் இருக்க வேண்டும். 05 வருடங்கள் பூர்த்தியாகும் வரை காத்திருக்கத் தேவையில்லை. அந்த மக்கள் பிரதிநிதிகளை நியமித்த பிரசைகளால் அவர்களைத் திருப்பியழைக்கக் கூடியதாக இருக்க வேண்டும். 05 வருடங்கள் எதை வேண்டுமானாலும், செய்ய முடியும் என்ற எண்ணத்தில்தானே இன்று மக்கள் பிரதிநிதிகள் நியமிக்கப்படுகின்றார்கள்.

 

அவர்கள் வாக்குறுதியளித்த விடயங்களைச் செயற்படுத்துவதில்லை. இன்னொரு புறம் மக்கள் கருத்தும் மாறியிருக்கின்றது. ஆனால் பிரசைகளால் எதுவும் செய்ய முடியாது. 05 வருடங்கள் காத்துக் கொண்டிருக்க வேண்டும். அவ்வாறான நிலைமைகளைத் தவிர்க்கவும் இடைநடுவில் செய்யக் கூடிய விடயங்கள் பற்றி நாம் அவதானம் செலுத்த வேண்டும். கட்சிகளிலிருந்து அங்குமிங்கும் தாவுவதை நிறுத்த வேண்டும். அதன்மூலம் மக்களால் வழங்கப்பட்ட ஆணை துஷ்பிரயோகம் செய்யப்படுகின்றது. ஏதேனுமொரு காரணத்திற்கா நியமிக்கப்படுகின்றார்கள். ஆனால் நியமித்தவுடன் அவர்களுக்குத் தேவையான பக்கம் சாய்ந்து விடுகின்றார்கள். இவை சனநாயகத்திற்கு எதிரானவை. இவற்றை அரசியலமைப்பு ரீதியாக நிறுத்த வேண்டும்.

 

இவ்வாறான சில பிரேரணைகள் எம்மிடம் உள்ளன. அவ்வாறே அரசியலமைப்பு ரீதியாகவும், கட்சி அரசியலுக்குள்ளும் இடம்பெற வேண்டிய இன்னொரு விடயம் உள்ளது. நாம் இந்த நேரத்தில் தேசிய மக்கள் சக்தி என்ற ரீதியில் ‘வட்டார சபைகளை’ அமைத்து வருகின்றோம். அவ்வட்டார சபைகளால் கட்சியின் மேல்மட்டத்திற்கே அழுத்தம் செலுத்தக் கூடியதாக இருத்தல் வேண்டும். கட்சி அதிகாரத்திற்கு வந்தாலும் அக்கட்டமைப்பை ஆட்சி முறையுடன் தொடர்புபடுத்தக் கூடியதாக இருத்தல் வேண்டும். உதாரணமாக தேர்தலொன்றின் போது கட்சியின் வேட்பாளர்களை அவ்வட்டார சபைகள் முன்மொழியக் கூடியதாக இருக்க வேண்டும். அவ்வட்டார சபைகளின் ஊடாக தமது வேட்புமனு முன்னெடுக்கப்பட வேண்டுமேயன்றி மேலிருந்து இடுகின்ற ஒன்றாக இருக்க முடியாது. இதனூடாக கட்சி சனநாயகத்தை வலுப்படுத்தவும், பிரசைகள் ஏதேனும் செயற்பாட்டில் உறுதியாகப் பங்கேற்பதற்குமான வாய்ப்பு அரசியலமைப்பு ரீதியாக உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

 

அவ்வாறே இதனையும் சொல்ல வேண்டும். அரசியலமைப்பினால் அனைத்தையும் செய்துவிட முடியாது. அரசியலமைப்பு என்பது ஒரு விடயம். பிரசைகள் பற்கேற்பு இடம்பெறுவதாயின் பிரசைகள் ஒருங்கிணைக்கப்படுவதும், அரசியல் அறிவைப் பெற்றுக் கொள்வதும் தொடர்ச்சியாக இடம்பெற வேண்டும்.

This post is also available in: English සිංහල