பழைய முறையை ஓரங்கட்டி புதிதாக சிந்திக்க வேண்டும்
எம்.ஏ. சுமந்திரன்
பாராளுமன்ற உறுப்பினர் – இலங்கை தமிழ் அரசு கட்சி
போராட்டக்காரர்கள் மிகவும் அழுத்தமாக சொல்கின்றார்கள் தற்போதைய ஒட்டுமொத்த ஆட்சிமுறையில் மாற்றம் இடம்பெற வேண்டுமென்று. அவர்கள் சொல்லும் ஒருசில விடயங்கள் உண்மை என்பதை நாங்களும் உணர்கின்றோம். தற்போதைய பிரதிநிதித்துவ ஜனநாயக முறை மக்கள் அபிலாசைகளை பிரதிநிதித்துவப்படுகின்றதா? அல்லது குறிப்பிட்ட பிரதிநிதிகளின் அபிலாசைகள் அல்லது மாற்றுக் கருத்தா என்ற நியாயமான சந்தேகம் நம் அனைவருக்குமே உண்டு. இந்த முறையை முழுமையாக மாற்றுவதாயின் எமக்கு புதிய அரசியலமைப்பு ஒன்று அவசியம். அதனூடாக நடைமுறையிலுள்ள பிரதிநிகளை தெரிவு செய்யும் முறையை மாற்றலாம்.
தற்போது அரசியல் கட்சிகள் பிரதிநிதிகளை தெரிவு செய்து மக்கள் முன்னிறுத்தும் செயன்முறை இடம்பெறுகின்றது. மாறாக பழைய தேர்தல் முறையானது, மக்கள் தமது பிரதிநிதிகளைத் தெரிவுசெய்து குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு தமது பிரதிநிதிகளை முன்நிறுத்தினர். நடைமுறை செயன்முறையில் ஐந்து வருடங்களுக்கு அதிகாரமளித்து பிரதிநிகளை தெரிவுசெய்து அனுப்பியதன் பின் குறிப்பிட்ட பிரதிநிகள் மேற்கொள்ளும் தீர்மானங்களுக்கு நடைமுறை செயன்முறையில் ஐந்து வருடங்களுக்கு அதிகாரமளித்து பிரதிநிகளை தெரிவுசெய்து அனுப்பியதன் பின் குறிப்பிட்ட பிரதிநிகள் மேற்கொள்ளும் தீர்மானங்களுக்கு தலையீடு செய்வதற்கும், அழுத்தம் தெரிவிப்பதற்கான ஆற்றல், அதிகாரம் இவர்களை நியமித்த மக்களுக்கு இருப்பதில்லை.
புதிய அரசியலமைப்பிற்கான சவால் 27 தலையீடு செய்வதற்கும், அழுத்தம் தெரிவிப்பதற்கான ஆற்றல், அதிகாரம் இவர்களை நியமித்த மக்களுக்கு இருப்பதில்லை.
உள்ளுராட்சி மன்றங்களிலும் இவ்வாறான முறையே இடம்பெறுகின்றது. வாக்கெடுப்பில் அவர்கள் தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் அந்த சபை ஒன்றுகூடி ஆட்சியமைப்பது எவ்வாறென்பதை தீர்மானிக்கின்றது. தற்போதைய முறைக்கமைய அதிக வாக்குகளை அல்லது அதிக தொகுதிகளை வென்ற கட்சியே ஆட்சியமைக்கும் அதிகாரத்தைக் கொண்டிருக்கிறது.
இம்முறை மாற வேண்டுமென்றால் மக்கள் தமது பிரதிநிதியை தெரிவு செய்து முன்நிறுத்தி, குறிப்பிட்ட பிரதிநிதி வாக்கெடுப்பால் தெரிவு செய்யப்பட்ட பின்னர் குறிப்பிட்ட பிரதிநிதிகளைக் கொண்ட ஆட்சியை அல்லது குழுமுறை (கொமிடி) ஒன்றை உருவாக்க வேண்டும். தற்போது இம்முறைகள் தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன.
பொதுமக்கள் சபை என்றால் என்ன? பொதுமக்கள் சபை என்பது தொடர்பிலும் இந்நாட்களில் சில கலந்துரையாடல் இடம் பெற்றுவருகின்றன. பொதுமக்கள் சபை என்பது குறித்து பின்வருமாறு விளக்கலாம். அதன்போது வெவ்வேறு மட்டங்களில் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் அடுத்த கட்டங்களுக்கு நகர்ந்து, அவ்வாறான பிரதிநிதிகள் ஒன்றுகூடி பாராளுமன்றமொன்றாக அல்லது பொதுமக்கள் சபையாக ஒன்றுகூடி பொறுப்புக்கள் ஏற்று ஆட்சி முன்னெடுத்தல் எனலாம்.
இம்முறைகளை மேற்கொள்ள வேண்டுமெனின் அரசியலமைப்பை முழுமையாக மாற்றியமைத்து, நடைமுறைச் செயன்முறையை ஒருபுறம் வைத்து, புதிதாக சிந்திக்க வேண்டும். அத்துடன் பொதுமக்கள் சபையென்பது நாட்டுக்குரிய முக்கிய தீர்மானங்களை மேற்கொள்வதற்கு முன்னர் மேற்குறிப்பிட்ட
தீர்மானங்கள் பொதுமக்கள் சபைகளுக்கு அனுப்பியதன் பின் இறுதியாக பிரதான சபைக்கு அனுப்ப வேண்டும்.
இந்த முறையை நடைமுறைப்படுத்துவதில் நடைமுறை சிக்கல்கள் காணப்பட்டாலும் தற்போது எமது நாட்டிற்கு அவ்வாறான முறையொன்று அவசியமென்ற நிலைக்கு நாடு முகம்கொடுத்துள்ளது. ஏனெனில் தற்போது நடைமுறையினுள் ஐந்து வருடத்திற்கு அதிகாரங்களை வழங்கி பிரதிநிதிகளை தெரிவுசெய்து அனுப்பியதன் பின்னர் குறித்த பிரதிநிகள் மேற்கொள்ளும் தீர்மானங்களுக்கு எதிராக தலையீடு செய்வதற்கான அல்லது அழுத்தம் செலுத்துவதற்கான ஆற்றல் அப்பிரதிநிதிகளை நியமிக்கும் பொதுமக்களுக்கு இருப்பதில்லை.
எமது நாடு முகம் கொடுத்துள்ள தற்போதையநிலைக்கு இம்முறையும் முக்கிய காரணம் என்பதை அதானிக்க முடிகின்றது. ஆகவே முக்கிய தீர்மானங்கள் மேற்கொள்ளும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் தலையீடு செய்வது பொதுமக்கள் சபையின் முக்கிய பணியாகும். மக்கள் பிரதிநிதிகளுக்கு ஊழல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படும் போது அதுகுறித்து ஆராய்ந்து, குறிப்பிட்ட மக்கள் பிரதிநிதியை நீக்கி, வேறொருவரை நியமிப்பதற்கான அதிகாரம் மக்களுக்கு இருக்க வேண்டும்.
அத்தோடு எனது யோசனை என்னவென்றால் புதிய அரசியலமைப்பில் இவை உள்ளடக்கப்பட்டால் மாத்திரமே இந்த அரசியலமைப்பு உயர் ஜனநாயகப் பண்புடைய அரசியல் அமைப்பாக அமையும். இந்த முறையை நடைமுறைப்படுத்துவது இலகுவானதல்ல ஆனபோதும், நாம் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதாக இருந்தால் இந்த நோக்கத்தை நடைமுறைப்படுத்தக் கூடிய செயன்முறையை தயாரித்துக்கொள்ள வேண்டும்.
இதன்போது எமக்கு தொழில்நுட்ப உதவியை வழங்க முடியும். மேலும் நவீன உலகில் உயர்தர ஜனநாயக செய்முறைக்காக இது போன்ற நடைமுறை பிரச்சினைகளுக்கு விடைகண்டுள்ளனர். அவ்வாறு இடம்பெறவில்லை என்றால் தொடர்ச்சியாக மக்களது அபிலாசைகள் திரிபடையும்.
பிரஜைகளின் குரல்
This post is also available in: English සිංහල