இனம் என்ற பாகுபாட்டின் காரணமாக அத்துமீறப்படும் மேய்ச்சல் நிலங்கள்!

இனம் என்ற பாகுபாட்டின் காரணமாக அத்துமீறப்படும் மேய்ச்சல் நிலங்கள்!

மாடுகளுக்கான மேய்ச்சல் தரையை மீண்டும் பெற்றுத்தருமாறு மட்டக்களப்பை சேர்ந்த டிலக்ஷலா துரைரத்தினம் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

பாதிக்கப்பட்ட உறவினர் ஒருவரின் சார்பில் இவர் இந்த முறைப்பாட்டை செய்துள்ளார். ஈரக்குளம், சித்தாண்டி என்ற முகவரியைச்சேர்ந்த இவர், மட்டக்களப்பு மயிலத்தமடு, மாதவணை பகுதியில் நிகழுகின்ற மனித உரிமை மீறல் பற்றி மனித

உரிமைகள் ஆணைக்குழுவின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்.
தனது முறைப்பாட்டில் அவர் பின்வருமாறு விபரித்துள்ளார்:
“மேற்குறிப்பிட்ட குறித்த பகுதியானது, பண்ணையாளர்களின் கால்நடை வளர்ப்பு பகுதியாக உள்ளது. இங்கு தொடர்ச்சியாக அத்துமீறி பயிர்ச்செய்கைகளை மேற்கொள்வதற்கு பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் முயற்சி செய்து வருகின்றனர். இவ்விடயம் தொடர்பில் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டு அப்பகுதியில் எந்தவிதமான அத்துமீறல்களும் முன்னெடுக்கப்படாது என்று உறுதியளிக்கப்பட்டது. எனினும் மீண்டும் அத்துமீறல்கள் முன்னெடுக்கப்படுகின்றன” என்று இவர் முறையிட்டுள்ளார்.

2009ம் ஆண்டு தொடக்கம் இன்றுவரை இந்த அத்துமீறல் இடம்பெற்றுவருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக கண்கண்ட சாட்சியங்களும் உள்ளதாகவும், ஈரக்குளம் பிரதேச சபை உறுப்பினர் அந்த சாட்சியங்களுள் ஒருவர் என்று தனது முறைப்பாட்டில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இனம் என்ற காரணத்தினாலும், நிர்வாகக் குறைபாடுகள் காரணமாகவும் இந்த மனித உரிமை மீறல் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதாகவும் கடந்த மார்ச் மாதம் 15ம் திகதி, 2022ம் ஆண்டு அவர் முன்வைத்துள்ள முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.

நீதிமன்றத்தினால் அவ்விடத்தில் எந்தவிதமான அத்துமீறல்களும் நிகழ்த்தப்படக் கூடாது என்று அறிவிக்கப்பட்டும் இவ்வாறான சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெறுவது கண்டிக்கத்தக்கதாகும். இது நீதிமன்ற ஆணையை மீறும் செயலாக உள்ளதுடன், பாதிக்கப்படுபவர்கள் மீது மேலும் அடக்குமுறையை திணிக்கும் செயலாக உள்ளது.

எனவே இவ்விவகாரத்தில் மனித உரிமைகள் ஆணைக்குழுவினர் விரைவாக தலையிட்டு நியயாத்தைப் பெற்றுத்தர வேண்டும் என்று அவர் கேட்டுள்ளார்.

இந்த சம்பவத்திற்கு இனம் ஒரு காரணம் என்று முறைப்பாட்டாளர் தனது முறைப்பாட்டில் சுட்டிக்காட்டியிருப்பதனூடாக ஒரு இனத்திற்கு எதிரான அடக்குமுறையாகவும், அத்தமீறலாகவே இந்த சம்பவத்தைப் பார்க்க Nவுண்டியுள்ளது. இனம் என்ற காரணத்திற்காக நாட்டில் நிகழும் அடக்குமுறைகளும், ஒடுக்குமுறைகளும் நிச்சயம் மனித உரிமை மீறலாகும். இந்தவகையில் இந்த மேய்ச்சல் நிலம் தொடர்பான சிக்கலில் இலங்கை மனித உரிமை ஆணைக்குழு தலையிட்டு உரிய தீர்வைப் பெற்றுத்தர வேண்டும் என்று முறைப்பாட்டாளர் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

– மட்டக்களப்பு டிலக்ஷலா

This post is also available in: English සිංහල

More News

தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ மத்திய நிலையம்

தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்...

Read More