பறிமுதல் செய்யப்பட்ட விவசாயக் காணிகளை மீளப் பெற்றுத்தாருங்கள்!

பறிமுதல் செய்யப்பட்ட விவசாயக் காணிகளை மீளப் பெற்றுத்தாருங்கள்!

வனஇலாகா திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட காணி பறிமுதல் காரணமாக விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக சத்தியநாதன் யுதர்சனன் பாதிக்கப்பட்ட விவசாயிகள் சார்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

மட்டக்களப்பு, சித்திhண்டி 02, பிரதான வீதி, இல 51ஃயு என்ற முகவரியைச் சேர்ந்த இவர், கோறளைப்பற்று தெற்கு கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட வட்டவான் பிரதேத்தைச் சேர்ந்த பத்து விவசாயிகளின் காணிகளே இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக முறையிட்டிருக்கின்றார்.
2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்த மனித உரிமை மீறல் இடம்பெற்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். வனஇலாகா அதிகாரிகளுக்கு எதிராக இந்த முறைப்பாடு பதியப்பட்டுள்ளது.

குறிப்பாக மட்டக்களப்பு வனநில திணைக்கள அதிகாரிகள், வனத்துறை, கோட்ட வன அலுவலர் ஆகியோருக்கு எதிராக இந்த மனித உரிமை மீறல் முறைப்பாடு உள்ளது. அந்த முறைப்பாட்டில் அவர் அளித்துள்ள விபரம் பின்வருமாறு:

கோறளைப்பற்று தெற்கு கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட வட்டவான் பிரதேசத்தில் கி;ட்டத்தட்ட 30 வருடகாலமாக குடியிருந்த மக்களிடையே ஆறரை ஏக்கர் பரப்பினை உடைய 10 விவசாயிகளின் தோட்டக்காணிகளே இவ்வாறு வன இலாகா அதிகாரிகளினால் பறிமுதல் செய்யப்பட்டு அவர்களின் வாழ்வாதார செயற்பாடுகள் அழிக்கப்பட்டு அவர்களின் காணிக்குள் தேக்குமர செய்கை செய்யப்பட்டுள்ளது.

இதனால் இக்காணி உடமையாளர்கள் சோளம், கச்சான், மரவள்ளி பயிர்ச்செய்கைகளை செய்ய முடியாதவாற பெரிதும் பாதி;கக்பட்டுள்ளனர் என்று முறைப்பாட்டில் விபரிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் வன இலாகா, பிரதேச செயலாளர், மாவட்ட அதிபர், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஏற்கெனவே முறையிடப்பட்டுள்ளதுடன், மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கும் முறையிடப்பட்டுள்ளது என்று முறைப்பாட்டாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழ் மக்களுக்கு எதிரான இந்த செயற்பாடு ஒட்டுமொத்தமாக அரசியற்கொள்கையுடன் சம்பந்தப்பட்டது என்று குறிப்பி;டும் முறைப்பாட்டாளர் காணியினை மீட்டுத்தர வேண்டும் என்றும் காணிகளுக்காக உறுதியினை பெற்றுத்தர வேண்டும் என்றும், பாதிக்கப்பட்டவர்களுக்கான வாழ்வாதார வசதிகளை ஏற்படுத்தித் தருமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

முறைப்பாட்டாளர் இந்த முறைப்பாட்டை கடந்த மார்ச் மாதம் 3ம் திகதி, 2022 அன்று மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சமர்ப்பித்துள்ளார்.

– மட்டக்களப்பு சத்தியநாதன் யுதர்சனன்

This post is also available in: English සිංහල