தகுதியற்ற நிர்வாகத்தினால் தொல்லை!

தகுதியற்ற நிர்வாகத்தினால் தொல்லை!

நிர்வாகம் தெரியாத தகுதியற்ற மேலதிகாரியின் நிர்வாகத்தினால் பிரச்சினைகளை எதிர்கொள்வதாக மட்டக்களப்பைச் சேர்ந்த ஊடகவியலாளர் பு. கிருஷிகா முறைப்பாடு ஒன்றை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் பதிவு செய்துள்ளார்.

23 வயதான கிருஷிகா மட்டக்களப்புஇ நாவற்குடாஇ கணக்குப்பிள்ளை வீதி என்ற முகவரியில் வசித்து வருகின்றார். இவர் ஐ.பி.சி தமிழ் ஊடகத்தில் பணியாற்றி வருகின்றார்.

அதே நிறுவனத்தைச் சேர்ந்த நிர்வாகி எஸ்.தரணிகாவுக்கு எதிராக இந்த முறைப்பாட்டை அவர் முன்வைத்துள்ளார்.

அவர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளதாவது:
சம்பந்தப்பட்ட அதிகாரி தனது பணியில் இருந்துகொண்டு பணியாளர்களை மதிப்பதில்லை. சுதந்திரமாக வேலை செய்ய விடுவதில்லை. சக வேலையாட்களோடு பேசும் விதம் முற்றிலும் முரணானது. எல்லா விடயத்திலும் தேவையற்ற இறுக்கத்தை விதிப்பது மற்றும் சுருக்கமாகக் கூறினால் பணியாளர்களை ஆடு மாடு போன்று நடத்துவது என்று அவரின் செயற்பாடு உள்ளது. இந்த விடயங்களை உறுதிப்படுத்த அலுவலக பணியாளர்களோடு உரையாடுங்கள். பல மனவருத்தங்களோடு தான் அங்கு அவர்கள் பணிபுரிகின்றார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

2015ம் ஆண்டு முதல் தற்பொழுது வரை இந்த மனித உரிமை மீறல் நடப்பதாகவும்இ ஐ.பி.சி தமிழ் யாழ் கலையகத்தில் இந்த மனித உரிமை மீறல் இடம்பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மனித உரிமை மீறலுக்கான காரணம் நிர்வாகம் எப்படி மேற்கொள்வது என்ற அறியாமையும்இ தெளிவின்மையும் ஆகும் என்று அவர் குறிப்பிட்டிருக்கின்றார்.

பணிபுரிபவர்கள் அனைவரும் வேலை பறிபோய் விடும் அச்சத்தில் அமைதியாக உள்ளனர். குடும்ப சூழ்நிலையும் இதற்கு காரணமாக உள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நிர்வாகியிடம் எதிர்த்து பேசினால் வேலை பறிபோய் விடும் என்ற அச்ச உணர்வு அனைவரையும் ஆட்கொண்டுள்ளதாக அவர் கூறினார்.

இந்த முறைப்பாட்டை முன்வைப்பதனூடாக சுதந்திரமாக வேலை பார்க்கக் கூடிய சூழலை அமைத்துக் கொடுக்கும் படி தாழ்மையோடு கேட்டுக் கொள்வதாகவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

– ஊடகவியலாளர் கிருஷிகா

This post is also available in: English සිංහල

More News

இன உறவூக்கு மொழி அறிவே பிரதானமானது

த. மனோகரன் வீரகேசரி 2016/ 01/ 13 கட்டுரை வ...

Read More

பிரபாகரனின் கல்லறையும் ஊடக அடக்குமுறையும்!

பிரபாகரனின் கல்லறையும் ஊடக அடக்குமு...

Read More

பிரஜை

பிரஜை - அடிமட்டத்திலான பேச்சுவார்த்த...

Read More