பொதுமக்களை அசௌகரியப்படுத்தும் பற்றுச்சீட்டு விநியோக தாமதம்!
கனிய வள திணைக்களம் மண் விற்பனை தொடர்பான பற்றுச்சீட்டை தாமதமாக வழங்குவதனால் பொதுமக்களுக்கு பிரச்சினைகள் ஏற்படுவதாக திருகோணமலையைச் சேர்ந்த விதூஷன் (32) முறைப்பாடு ஒன்றை செய்துள்ளார்.
திருமலை. சிவன் வீதியைச் சேர்ந்த இவர், பொதுமக்கள் சார்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இவ்விடயம் தொடர்பான முறைப்பாட்டை பதிவு செய்திருக்கின்றார். மாவட்ட செயலகத்திற்கு எதிராகவும், கனிய வள திணைக்கள உத்தியோகத்தர்களுக்கு எதிராகவும் இந்த முறைப்பாட்டை அவர் செய்துள்ளார்.
மாவட்ட கனிய வள திணைக்களத்தினால் ஒவ்வொரு வருடமும் வழங்கப்படும் யாட் மண் விற்பனை செய்வதற்கான பற்றுச்சீட்டினை வழங்குவதில் மிகவும் தாமதம் ஏற்படுவதாகவும், இதனால் மாவட்டத்தில் உள்ள யாட் உரிமையாளர்கள் அவர்களுடைய தொழிலை உரிய முறையில் செய்வதற்கு திணைக்களம் தடையாள உள்ளது என்று முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் கடந்த வருட ஆரம்பத்திலிருந்து இடம்பெறுவதாகவும், நிர்வாகம் மற்றும் அரசியற்கொள்கை காரணமாக இந்த அநீதி இடம்பெறுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
உரிய காலத்தில் உரிய முறையில் இந்த பற்றுச்சீட்டினை பொதுமக்களுக்கு பெற்றுக்கொடுப்பதனால் மக்கள் எதிர்நோக்கும் அசௌகரியங்கள் பெருமளவில் குறையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
– திருமலை விதூஷன்
This post is also available in: English සිංහල