ஏனைய சமூகத்தவர்களை சிரமத்திற்குள்ளாக்கும் சிங்கள மொழியில் மட்டும் அமைந்த விண்ணப்பப்படிவம்!

ஏனைய சமூகத்தவர்களை சிரமத்திற்குள்ளாக்கும் சிங்கள மொழியில் மட்டும் அமைந்த விண்ணப்பப்படிவம்!

பொலிசார் விநியோகித்த விண்ணப்பப்படிவம் சிங்கள மொழியில் இருப்பதால் சிறுபான்மை மக்கள் சிரமத்திற்குள்ளாவதாக திருகோணமலையை சேர்ந்த முகம்மது அஸ்வர் (45) மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.

திருகோணமலை, தக்கியா வீதி, 36/14 என்ற முகவரியைச் சேர்ந்த இவர், பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் பொலிஸ் திணைக்களத்திற்கு எதிராகவும், பொலிஸ் மா அதிபருக்கு எதிராகவும் இந்த முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார்.

குடும்ப விபரங்களை புதிதாக திரட்டுவதற்காக பொலிஸ் திணைக்களத்தினால் அச்சிடப்பட்ட விண்ணப்பப்படிவம் முற்றிலும் சிங்கள மொழியில் மட்டுமே உள்ளதனால், சிங்கள மொழி அறியாத தமிழ் முஸ்லிம் மக்கள் இந்த விண்ணப்பத்தை நிரப்புவதில் பெரும் சிரமத்தை எதிர்கொள்வதாக அவர் முறைப்பாட்டில் சுட்டிக்காட்டியிருக்கின்றார். நாடு முழுவதும் இந்த படிவம் இவ்வாறு விநியோகிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்திருக்கின்றார்.

சிங்கள மொழி தெரியாத மற்றைய சமூக மக்களைக் கருத்திற்கொள்ளாமல் எடுக்கப்பட்டுள்ள இந்த செயற்பாட்டிற்கு காரணம் நிர்வாகக் குறைபாடு என்று முறைப்பாட்டில் தெரிவித்துள்ள அவர், இந்த அநீதிக்கு ஆவண சாட்சியும் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

– திருகோணமலை முகம்மது அஸ்வர்

 

This post is also available in: English සිංහල