நீதியை நிலைநாட்டி நட்டஈட்டைப் பெற்றுத்தாருங்கள்!
உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு உடமைகள் திருடப்பட்ட நிலையில் மனித உரிமைகள் ஆணைக்குழு இதுவரை விசாரணைகளை நடத்தவில்லை என்று சு.ஜெயலட்சுமணன் (36) ஆணைக்குழுவிடம் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.
கிளிநொச்சி, அம்பாள்குளம், கனகேந்திரன் குடியிருப்பு என்ற முகவரியைச் சேர்ந்த இவர் கிளிநொச்சி பொலிசாருக்கு எதிராகவும், கிளிநொச்சி பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரிக்கு எதிராகவும் இந்த முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார்.
சம்வம் ஒன்று தொடர்பில் உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு, கத்தி மற்றும் கொட்டான் கொண்டு விரட்டப்பட்ட நிலையில் உடமைகளும் களவாடப்பட்டுள்ளதாக இந்த முறைப்பாட்டில் ஜெயலட்சுமணன் தெரிவித்திருக்கின்றார். கடந்த 2021ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 19ம் திகதி இந்த முறைப்பாடு பதிவாகியுள்ளது. அம்பாள்குளம், கிளிநொச்சி மனித உரிமை மீறல் இடம்பெற்ற இடமாக முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. கண்கண்ட சாட்சிகளாக மூவர் குறிப்பிடப்பட்டுள்ளனர். பொலிஸ் முறைப்பாடு ஆவண சாட்சியாக உள்ளதுடன், மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள போதிலும் இதுவரை விசாரணை செய்யப்படவில்லை என்று முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த முறைப்பாட்டை நீதிமன்றத்திற்கு பாரப்படுத்தி நீதியை நிலைநாட்டி நட்ட ஈட்டைப் பெற்றுத்தருமாறு ஜெயலட்சுமணன் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த வேண்டுகோள் முறைப்பாடாக கடந்த மார்ச் 07ம் திகதி 2022 அன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
– ஜெயலட்சுமணன்
This post is also available in: English සිංහල