சூழல்

பிரஜைகள் தமது சூழல்மீது தாக்கம் செலுத்தும் புவி அரசியல் சக்திகளை விளங்கிக் கொள்வது அவசியமாகும். இது விடயத்தில் அவர்கள் கண்காணிபப்களை மேற்கொண்டு, தமது அரசாங்கத்தை வகைப்பொறுப்புக்கூறவைத்தல் வேண்டும். மனித உரிமைகளிலிருந்து பிரிக்கப்படமுடியாதவகையில் சூழல் நீதியென்பது உயர்வாக மதிக்கப்படுதல் வேண்டும்.

“’இறுதியான விருட்சம் வெட்டி வீழ்த்தப்பட்டதும், இறுதியான மீன் கொல்லப்பட்டதும், இறுதியாக எஞ்சியுள்ள நதியும் நஞ்சூட்டப்பட்டதும், பணத்தை உண்டு உயிர்வாழ முடியாதென்பதைக் காணுவீர்கள்”
―தலைவர் சியாட்டில்

சூழல் உபகுழுவின் நோக்கங்கள்

  1. விவசாயம், கால்நடை, மற்றும் மீன்பிடிக்கருத்திட்டங்களில் முன்னேற்றத்தின் நிலைபேற்றுத்தன்மை குறித்த விழிப்புணர்வைப் பரப்புதல்
  2. பொருத்தமான விவசாய வழிமுறைகளுக்குக் கவனம் செலுத்துதல்
  3. விவசாய உற்பத்தியில் தீங்கு ஏற்படுத்தும் பக்கவிளைவுகளைக் குறைத்து, மாற்று வழிகளை இனங்காணுதல்
  4. சுதேச மருத்துவ மூலிகைகள், தொடர்ச்சியாகப் புவிப்பிரதேசத்துக்குரிய விதைகள் மற்றும் உயிர்ப்பல்வகைமை என்பவற்றைப்பாதுகாத்து விருத்திசெய்தல்
  5. கனிப்பொருள் அகழ்வு, மணர் அகழ்வு, குப்பை கூளங்களை அகற்றுதல், காடுகளுக்குத் தீ மூட்டுதல்ஃ வெட்டியழித்தல்போன்ற விடயங்களில் சூழலைப்பாதுகாக்கும் நிகழ்ச்சித்திட்டங்களை முன்னெடுத்தல்
  6. கிராமத்தில் சூழல் நீதியைக் கண்காணித்து, உறுதிசெய்தல்

This post is also available in: English සිංහල