இலங்கையில்
மொழி உரிமைகள்

நீங்கள் அறிவீர்களா?

இலங்கையில் இரண்டு அரசகரும மொழிகள் உண்டு.
74% இலங்கையர்கள் இவ்விடயத்தை அறிந்திருக்கவில்லை…

நீங்கள் ஒரு பாரதூரமான விபத்தில் அகப்பட்டிருக்கும்வேளையில், இது உங்கள் நாடாக இருந்தும், நீங்கள் உங்கள் வாழ்நாள் முழுவதும் இந்நாட்டில் இருந்தும், உங்கள் மொழி இந்நாட்டின் அரசககரும மொழியாக இருந்தும், பொலிசாரால் நீங்கள் அறியாதமொழியில் கேள்வி கேட்கப்படுகிறீர்கள் என்று கற்பனைசெய்துபாருங்கள். அதற்குபின்னர், நீங்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்குச் செல்லுகிறீர்கள். சுதாதாரசேவையானது இந்நாட்டிலுள்ள அனைவருக்கும் உரித்தானதெனினும், அங்கே வைத்தியர் உங்களுக்கு புரியாத மொழியில் பேசி, உங்களுக்கு சிகிச்சை அளிக்க முயலுகின்றார் என்பதைச் சற்று கற்பனைசெய்து பாருங்கள். இவ்வாறான நிகழ்வுகளை மொழிச்சமத்துவம் இருந்தால் தடுத்துக் கொள்ளலாம்.

‘இனம், நிறம், பால், மொழி, மதம், அரசியல் அல்லது வேறு கருத்துகள், தேசிய சமூக அடிப்படை, சொத்து அல்லது வேறெந்த தராதரத்தின் அடிப்படையில், வேறுபாடின்றி, அனைவருக்கும் இவ்வுறுப்புரையில் கூறப்பட்ட சகல உரிமைகளும், சுதந்திரமும் உரித்தாகும்’

எனவே, மொழி உரிமையானது, அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்டுள்ள அடிப்படை மனித உரிமையாகும். குறிப்பாக அதன் 13 ஆம் திருத்தமும், இலங்கையின் சட்ட மற்றும் நீதிப் பொறிமுறைக்கான 1956ம் ஆண்டின் அரசகரும மொழிகள் சட்டம், விசேட வர்த்தமானி 1620ஃ27 பொது நிர்வாகச் சுற்றறிக்கைகள், என்பனவும் இந்த விழுமியங்களுக்கு மதிப்பளிப்பவையாகும். ஓர் அமைச்சு செயற்படுத்தப்பட்டு தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒன்றிணைப்பு அமைச்சு என்றும் பெயரிடப்பட்டது. இவ்வமைச்சு, அரசகரும மொழிகள் திணைக்களம், அரசகரும மொழிகள் ஆணைக்குழு மற்றும் தேசிய மொழிகளின் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் என்பவற்றுக்குப் பொறுப்பாகவிருந்தது. இலங்கை, முரண்பாடற்ற முன்னேற்றத்தை எய்த வேண்டுமெனில், மொழியினால் ஏற்படும் தடைகளை வெற்றிகொள்ள வேண்டும் என்பதை இம் முக்கியமான நிறுவனங்களின் பணிப்பாணை அங்கீகரிக்கின்றது.

மொழிச் சமத்துவம் மீளிணக்கத்துக்கு இன்றியமையாதது!

இலங்கையின் அரசியலமைப்பினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஓர் அடிப்படை மனித உரிமை ‘மொழி உரிமை’ ஆகும்.

எந்தவொரு பிரசைக்கும், தனது இனம், மதம், மொழி, சாதி, பால், அரசியல் சிந்தனைகள், மற்;றும் பிறப்பிடம் என்பவற்றின் அடிப்படையில் சலுகைகளை வழங்கவோ, வேறுபாடு காண்பிக்கவோ முடியாது’ என்று உறுப்புரை 12(2) தெரிவிக்கின்றது. இது கீழ்க்காணும் அனைத்துலக மனித உரிமைகள் பிரகடனத்தின் 2ம் உறுப்புரையை ஒத்ததாகும்.

பிரஜைகளின் மொழி சார்ந்த மனக்குறைகள்

அரசகருமமொழிகள் கொள்கையை மேம்படுத்துவதற்காக ஏற்பாடுசெய்யப்பட்ட தோற்றவலுவுள்ள பிரமாணங்கள், சட்டங்கள் மற்றும் நிறுவனங்கள் இருப்பினும்,மொழி உரிமைகள் சம்பந்தமான உண்மையான நிலைமை, திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்ட கருத்திட்டக்காலத்தில் இடம்பெற்ற எண்ணிறந்த வெளிக்கள விஜயங்கள், நேர்காணல்கள் மற்றும் ஏனைய ஆராய்ச்சிகள் காண்பிப்பதுபோன்று சோர்வுற்ற நிலையைக் காண்பிப்பதாகவும், பின்வரும் காரணிகளுக்குப் பாரதூரமான விளைவை ஏற்படுத்துவனவாகவும் உள்ளது.

This post is also available in: English, සිංහල

நிர்வாகமும், நாளாந்த வாழ்க்கையும்

கிராம சேவகர்கள் உட்பட்ட அரச உத்தியோக...

தகவல்களுக்கான அணுகுவழி

குறியீடுகள் - எல்லா அரச நிறுவனங்களால...

மொழியுரிமை சட்டங்கள்

பிரஜைகளின் மொழி சார்ந்த மனக்குறைகள் ...

கல்விக்கான அணுகுவழி

குடியேற்றவாத ஆட்சிக்காலம்தொட்டு இல...

நீதியைப் பெற்றுக்கொள்வதற்கான அணுகுவழி

நீதிவழிமுறையின் எந்தவொரு நிலையிலும...

Read More About Language Rights

மொழிச் சமத்துவத்தை ஊக்குவிக்க நீங்கள் என்ன செய்யலாம்?