மொழி, கலாசாரம் மற்றும் மீளிணக்கம்

ஒருவரை ஒருவர் புரிந்துகொள்வதற்கும் ஏனைய கலாசாரங்ள் மற்றும் மதங்களுடன் சௌஜன்யமாக வாழுவதற்கும், நாம் முதலில் மக்களின் தாய்மொழியை மதிக்கவேண்டும் இலங்கையின் அரச கருமமொழிகள்குறித்து வாசித்தறிந்துகொள்ளுங்கள்.
மொழி உரிமைக்கு மதிப்பளிக்கும் வாக்குறுதியை பிரதிக்கினையாக எடுத்துக் கொள்ளுங்கள்

“புரியும் மொழியில் ஒருவருடன் பேசினால், அது அவரின் மூளைக்குச் செல்லும். அவருடைய மொழியில் அவருடன் பேசினால் அது அவரின் இதயத்துக்குச் செல்லும்”

-நெல்சன் மண்டேலா

மொழி மற்றும் கலாசார உபகுழுவின் நோக்கங்கள்

  1. மொழி உரிமைகள் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கு அடிப்படையானவை என்பதை ஏற்றுக்கொண்டு, மொழி உரிமைகளைப் பாதுகாத்தல்
  2. ஜாதி, அந்தஸ்து, மதம், இனத்துவநிலை காரணமாக எழும் பாரபட்சங்களுக்கு எதிரான செல்நெறியை முன்னேற்றுதல
  3. மத மற்றும் சர்வமதப் பரிமாற்ற நிகழ்ச்சித்திட்டங்களையும், கலந்துரையாடல்களையும் ஆரம்பித்தல். இவை மதங்களின் உள்ளமைவான விழுமியங்களில் கவனம் செலுத்த வேண்டும்.
  4. புராதனக் கலை மரபுகளையும் பாரம்பரியக் கைப்பணியாளர்களையும் பாதுகாத்தல்
  5. ரசனையை வளர்க்கும் இலக்கியம், கட்புலக்கலை, நாட்டார் கலைகள் சம்பந்தமான கலந்துரையாடலை ஆரம்பித்தல்
  6. மற்றும் இறுவட்டுக்கள் குறித்த கலந்துரையாடலை ஆரம்பித்தல், எழுத்தாக்கங்கள், நூல்கள் மற்றும் ஆய்வுக்கட்டுரைகள். இலக்கியம் போன்ற துடிப்பாற்றல் மிக்க பிரஜைகள் சபைக்குப் பயனுள்ள விடயங்கள் சம்;பந்தமான கலந்துரையாடல்களை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கை களை மேற்கொள்ளுதல்

This post is also available in: English සිංහල