நடவடிக்கை எடுப்போம்

மொழி உரிமைகளை பாதுகாக்க பிரஜைகள் என்ன செய்ய வேண்டும்?

  • ஏதேனும் சந்தர்ப்பங்களில் பொதுத் தகவல்கள் தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய மொழிகளில் கிடைக்காவிட்டால் முறைப்பாடுகளை சமர்ப்பிக்கவும்
  • தனியார் துறை முகாமையாளர்அல்லது உரிமையாளர்களிடம் மொழி பெயர்ப்புக்களை வழங்குமாறு வலியுறுத்தவும்
  • உங்களுக்கு புரியாத மொழிகளில் ஏதேனும் ஆவணங்கள் காணப்பட்டால் அதில் கையொப்பமிடுவதை தவிர்த்துக் கொள்ளவும்
  • தொண்டர் அடிப்படையில் கடைகளின் குறியீட்டு பெயர் பலகைகளை மொழி பெயர்த்தல் சிறப்பானதாகும்
  • நீங்கள் அரசகரும மொழிகளை கற்பதுடன் உங்கள் குடும்பத்தினரையும் அதனை கற்குமாறு ஊக்குவிக்கவும்
  • மொழி உரிமைகளைப் பற்றி நீங்கள் கற்ற விடயங்களை ஏனைய மக்களுடன் பகிர்ந்து கொள்ளவும்
  • இதைத் தவிர ஒருவரின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு இன்னும் பல வழிகள் உள்ளன. மொழி உரிமை மீறல்கள் தொடர்பில் கவனம் செலுத்தும் நிறுவனங்கள் பின்வருவனவாகும்
  • அரசகரும மொழிகள் ஆணைக்குழு –   தொடர்பு இலக்கம் 1956
  • மனித உரிமைகள் ஆணைக்குழு –   தொடர்பு இலக்கம் 1996
  • நுகர்வோர் அதிகார சபை

This post is also available in: English සිංහල