ஒலிபரப்புக் கூட்டுத்தாபன பணியாளர்கள் 32 பேருக்கு எட்டு மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை.

ஒலிபரப்புக் கூட்டுத்தாபன பணியாளர்கள் 32 பேருக்கு எட்டு மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் நிவாரண சேவையிலிருந்து ஒப்பந்த அடிப்படையில் நியமனம் பெற்ற மற்றும் ஒப்பந்த சேவையிலிருந்து நிரந்தர நியமனம் பெற்ற பணியாளர்களுக்கு எட்டு மாதங்களாக சம்பளம் வழங்குவதற்கு ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தினால் நடவடிக்கை எடுக்கப்படாமையினால் அவர்கள் மிகுந்த அசௌகரியத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

இவ்வாறு நிரந்தர நியமனம் பெற்றவர்கள் 18 பேரும் ஒப்பந்த நியமனம் பெற்ற 12 பேரும் 2021.06.23ஆம் திகதி முதல் தற்போது வரை சம்பளம் இன்றி சேவையாற்ற நேர்ந்துள்ளது. உரிமை மீறல் மற்றும் ஒப்பந்த மீறலுக்கு உள்ளாகியுள்ள பணியாளர்கள் 30 பேர் வரையில் காணப்படுவதுடன், அவர்கள் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் கொழும்பு தலைமை அலுவலகம், ரஜரட்ட சேவை, றுகுணு சேவை மற்றும் கதுரட்ட சேவை போன்ற நிறுவனங்களில் சேவையாற்றுகின்றனர்.

இவர்கள் அனைவரும் திருமணமான பணியாளர்கள் என்பதுடன் அனைவரும் பாடசாலை கல்வியை கற்கும் பிள்ளைகளை உடைய பெற்றோர்கள் ஆவர். தற்போது நாட்டில் நிலவும் அசௌகரிய நிலைமைக்கு மத்தியில் அவர்கள் மிகுந்த பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுக்க நேர்ந்துள்ளது.

தமக்கு வழங்கப்பட வேண்டிய சம்பளம் கிடைக்கப் பெறாது நிர்க்கதியாகியுள்ள இந்த பணியாளர்கள் இவ்விடயம் தொடர்பில் நிர்வாக அதிகாரிகளுக்கு வாய்மொழியாகவும் எழுத்து மூலமாகவும் கோரிக்கை விடுத்துள்ள போதிலும் அவர்களால் இதுவரையில் எவ்வித பதிலும் கிடைக்கப் பெறவில்லை.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற இத்தகைய உரிமை மீறல் தொடர்பில் பாதிக்கப்பட்டுள்ள ரஜரட்ட சேவை பணியாளர்கள் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு முறைப்பாடு செய்துள்ளனர்.

இவ்வனைத்து நியமனங்களும் கடந்த காலத்தில் கூட்டுத்தாபன நிர்வாக சபையின் அங்கீகாரத்துடன் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாகவும் நேர்முகப் பரீட்சை நடாத்தப்பட்டு குறித்த நியமனங்களை மீண்டும் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவிக்கும் குறித்த பாதிக்கப்பட்டுள்ள பணியாளர்களுக்கு இவ்விடயம் குறித்து எழுத்து மூலமாக இதுவரை அறிவிக்கப்படவில்லை.

 

This post is also available in: English සිංහල

More News

தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ மத்திய நிலையம்

தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்...

Read More

பெண்கள் மீதான தவறான நடத்தைகள்; நிறுத்தப்பட வேண்டும்!

பெண்கள் மீதான தவறான நடத்தைகள்; நிறுத...

Read More

தகவல் அறிய உள்ள உரிமை மறுக்கப்படுகின்றது!

தகவல் அறிய உள்ள உரிமை மறுக்கப்படுகின...

Read More