அதிபரின் செயற்பாட்டினால் மன உளைச்சலுக்குள்ளாகும் சகோதரன்
பற்றி முறையிடும்
அதிபரின் செயற்பாடுகள் மன உளைச்சலை ஏற்படுத்துவதாக தனது சகோதரன் சார்பில் ஆர்.ரவீந்திரன் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.
சித்தாண்டி மகா வித்தியாலய அதிபருக்கு எதிராகவே இந்த முறைப்பாடு பதியப்பட்டுள்ளது.
“எனது சகோதரனை குறிவைத்து அதிபர் எப்பொழுதும் பல வேலைகளை சொல்வதும், அவர் மீது வீ;ண்பழி சுமத்துவதுமாக இருக்கின்றார் இதனால் எனது சகோதரன் மிகவும் மன உளைச்சலுக்குள்ளாகியுள்ளார்”. என்று அந்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வலயக் கல்விப் பணிப்பாளரிடம் இது பற்றி முறையிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள அவர், தனிப்பட்ட பழிவாங்கல் உணர்வு, நிர்வாகக் குறைபாடு, அரசியற்கொள்கை ஆகிய காரணங்களினால் இந்த அநீதி எனது சகோதரனுக்கு நிகழ்வதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த முறைப்பாட்டாளர் மட்டக்களப்பு, தாமரைக்கேணி, 30ஃ3 என்ற முகவரியில் வசிக்கின்றார்.
மட்டக்களப்பு ரவீந்திரன்!
This post is also available in: English සිංහල