வீட்டுத்திட்டத்தில் இழைக்கப்பட்ட அநீதிக்கு தீர்வைப் பெற்றுத்தாருங்கள்!
வீட்டுத்திட்டத்தின் காரணமாக தனது மனித உரிமை மீறப்பட்டுள்ளதாக லக்ஸ்மன் பவானந்தினி (35) மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.
மண்டபத்தடி, கண்ணன்குடாவை சேர்ந்த இவர், வீடமைப்பு அதிகாரசபைக்கு எதிராகவும், மண்டபத்தடி கிராம உத்தியோகத்தர் திவ்வியாவுக்கு எதிராகவும் இந்;த முறைப்பாட்டை செய்துள்ளார்.
அவர் தனது முறைப்பாட்டில் மேலும் தெரிவித்துள்ளதாவது:
நான் திருமணம் புரிந்து 7 ஆண்டுகள் கடந்த நிலையில் வீடு இல்லாத துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டள்ளேன். வீட்டுத்திட்டம் என்று கூறி 2018ல் (செமட்ட சரண) தரப்பட்ட உதவியில் அதற்கான பணம் செலுத்தப்பட்டு 4 ஆண்டுகள் கடந்த நிலையில் வீடு எமக்கு தரப்படவில்லை. ஆனால் வேறு நபர்களுக்கு வீடு வழங்கப்பட்டுள்ளது என்று அவர் தனது முறைப்பாட்டில் கூறியுள்ளார். கடன் வாங்கி அரைவாசி கட்டப்பட்ட நிலையில் இதற்கான ஆவணம் கூட இல்லாத நிலை உள்ளது. என்னோடு 17 குடும்பங்கள் உள்ளன. இவர்கள் உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளனர் என்று அவர் தனது பிரச்சினையை தெரிவித்துள்ளார்.
கிராமத்தில் உள்ள வீட்டுத்திட்டத்திற்கான நிதியைப் பெற்றுத்தர வேண்டும். வீதிகளை புனரமைப்பு செய்ய வேண்டும். வீடுகளுக்கான ஆவணம் வழங்கப்பட வேண்டும் என்று அவர் பல கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.
– மட்டக்களப்பு பவானந்தினி வேண்டுகோள்
This post is also available in: English සිංහල