பெண்கள் மீதான தவறான நடத்தைகள்; நிறுத்தப்பட வேண்டும்!
நிறுவனத்தில் மேற்கொள்ளப்படும் பெண்கள் மீதான தவறான நடத்தை தொடர்பில் மட்டக்களப்பைச் சேர்ந்த சி. உபதாரணி (22) மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.
கிரான், பாடசாலை வீதியை வசிப்பிடமாகக் கொண்ட அவர் தான் பணிபுரியும் புலனாய்வு நிறுவனத்தின் புலனாய்வு அதிகாரிக்கு எதிராக இந்த முறைப்பாட்டை செய்துள்ளார்.
சுதந்திரமாக வேலை செய்ய முடியாத நிலைமை காணப்படுவதாகவும், வழிமறித்து அச்சுறுத்தல் நடப்பதாகவும், தனது பணிக்கு இடையூறு விளைவிப்பதாகவும் அவர் இங்கு குறிப்பிட்டுள்ளார். கடந்த வருடம் இந்த மனித உரிமை மீறல் நடைபெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
சுதந்திரமாக வேலை செய்ய வேண்டும். அதற்கான வழிமுறைகள் எடுக்கப்படல் வேண்டும். பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தடுக்கப்பட வேண்டும் என்று அவர் இந்த முறைப்பாட்டினூடாக கோரிக்கை விடுத்துள்ளார்.
பணியிடங்களில் பெண்களுக்கு எதிராக இடம்பெறும் இவ்வாறான வன்முறைகளும், துன்புறுத்தல்களும் களையப்பட வேண்டும். பெண்களை மதிக்கும் சமூகம் உருவாக வேண்டும். எந்த பிரச்சினையாயினும் வன்முறையின்றி அப்பிரச்சினை தீர்க்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
– உபதாரணி
This post is also available in: English සිංහල