நிர்வாகமும், நாளாந்த வாழ்க்கையும்

கிராம சேவகர்கள் உட்பட்ட அரச உத்தியோகத்தர்கள் தங்களுடைய பிரதேசத்தில் வாழும் மக்களுடைய மொழியை அறிந்திராததினால், அவர்கள் அரச திணைக்களங்களுக்குச் செல்லும்போது, தமது மொழியில் உரையாடும் அலுவலர்கள் இல்லாதிருக்கும் சந்தர்ப்பங்கள் ஏராளம்.

வழக்கமான செயற்பாடுகளான பொலீஸ் நிலையத்தில் முறையீடுசெய்தல், அரச வைத்தியசாலைகளில் சுகாதாரப் பராமரிப்பை நாடுதல், இழப்பீடு அல்லது ஓய்வூதிய விண்ணப்பம் செய்தல் ஃ அனுமதிப்பத்திரம் பெறுதல், பிறப்பு, இறப்பு, திருமணம் என்பவற்றின் பதிவு அல்லது பிரயாணம் செய்தல் என்பன சிங்களம் தெரியாத இலங்கையர்களுக்கு ஒரு கவலைக்கிடமான அனுபவமாக அமைகின்றது.

This post is also available in: English සිංහල