நல்லாட்சி

குடிமக்கள் தமது உரிமைகள் பாதுகாக்கப்பட்டு, தமது அபிலாiஷகளை ஈட்டிக்கொள்வதை உறுதிசெய்யும் வகையில் அரசாங்கத்தோடு ஈடுபட்டுச் செயலாற்றுவது அவசியமாகும்.

பிரஜைகள் சபைகளின் நல்லாட்சி உப – குழுக்களின் பாத்திரம் பின்வருமாறு :

  1. மக்களுக்குச் சேவை செய்யும் நிறுவனங்கள் சம்பந்தமான தகவல்களை வழங்குதல் உம் : பொலிஸ், பிரதேச செயலகம்;, குடும்ப சுகாதார சேவை, கிராம அலுவலர், கமநல உத்தியோகத்தர், சமுர்த்தி அபிவிருத்தி உத்;தியோகத்தர், பெருந்தோட்டக் கண்காணிப் பாளர், மீன்பிடி சமாஜம், மகளிர் அமைப்புகள், மரண ஆதார சமாஜங்கள், முச்சக்கர வண்டி சங்கங்கள், மத அமைப்புகள், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், உள்ளூராட்சி நிறுவனங்கள், மாகாண சபைகள் மற்றும் மத்திய அரசாங்கம்.
  2. இந்த நிறுவனங்களைக் கேள்வி கேட்கும் அவர்களின் உரிமை சப்பந்தமாக பிரஜை களுக்குக் கல்வியூட்டுதல்
  3. பல்வேறு வழிகளில் இந்த நிறுவனங்களின் சேவைகளை மேம்படுத்தும் கலந்துரையாடல் களை ஆரம்பித்து, அவசியமான செயற்பாடுகளை முன்னெடுத்தல்

 

 

 

 

This post is also available in: English සිංහල