பெண்களும், சிறுவர்களும்

நாகரீகமுற்ற உலகம் முழுவதும் மேலுஞ்சிறந்த ஒரு சமூகத்தைநோக்கிய நகர்வில் மையப்பொருளாக விளங்குவது பால்நிலை சமத்துவமாகும். சிறுவர்களே எதிர்காலப் பிரஜைகளாவர். அவர்கள் பாசத்துடன் பராமரிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு, வழிநடத்தப்படுதல் வேண்டும். பெண்களுக்கு அதிகாரவலு வழங்குவதற்கும், சிறுவர்களைப் பாதுகாப்பதற்கும் பிரஜைகள் சபைகள் என்ன செய்கின்றன என்பதைப் பார்க்கவும்.

“எமது சிறுவர்களுக்குச் சமமான வாய்ப்புகளைப் பெற்றுக்கொள்வதற்கும்,தொடர் முயற்சிகளை மேற்கொள்வதற்கும், மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும், பாதுகாப்பாகவும் வாழுவதற்குமான உரிமை உள்ளது”

-2015 ஐ.நா. பொதுச்சபையில் ஷாக்கிரா

பெண்கள் மற்றும் சிறுவர்கள் உபகுழுவின் பாத்திரம்,

  1. சிறுவர்களுக்குப் பாதுகாப்பான, மகிழ்ச்சியான பிள்ளைப்பருவமொன்று கிட்டுவதை உறுதிசெய்தல்
  2. பெண்களையும், சிறுவர்களையும் கிராமத்தின் சமூக அபிவிருத்தி நடவடிக்கைகளில் ஈடுபடுத்துதல்
  3. பெண்களினதும், சிறுவர்களினதும் உரிமைகளைப்பாதுகாத்தல்
  4. பெண்கள், சிறுவர்கள் ஈடுபடும் கைப்பணிகள்ஃ குடிசைக் கைத்தொழில்கள் / கலைப் பணிகள் என்பவற்றை ஊக்குவித்து, முன்னேற்றுதல்
  5. இலவச போஷhக்கு உணவு, உடல் மற்றும உளநல சுகாதார நிலையங்கள், மற்றும் பெண்கள், விசேட தேவைகளுள்ளவர்கள் மற்றும் சிறுவர்களுக்கான சட்ட ஆலோசனைகள் கிட்டுவதை உறுதிசெய்தல்

This post is also available in: English සිංහල