இளைஞர் விவகாரங்கள்

இளைஞர்களே நாளைய தலைவர்களாவர். அவர்கள் தமது அதியுயர்வான சாத்தியவளங்களை ஈட்டிக்கொள்ளும்வகையில், அறிவு, வழிகாட்டல் என்பவை வழங்கப்படுதல் வேண்டும். குறிப்பாக இலங்கையின் இளைஞரக்ள் சகிப்பின்மைகாரணமாகப் பெரிதும் இன்னலுற் றுள்ளனர். இருப்பினும், புரிந்துணர்வு, மீளிணக்கம் மற்றும் முன்னேற்றத்துக்கான சாத்தியவளம் அவர்களின் கைகளிலேயே உள்ளது

இளைஞர் உப குழுக்கள் பின்வரும் நோக்கங்களைக் கொண்டுள்ளன :

  1. இளைஞர்களிடையே மொழி உரிமைகளுக்கான மரியாதையை ஊக்குவித்தல்
  2. இளைஞர்களை விமர்சனரீதியான, பகுப்பாய்வுச் சிந்தனைக்கு ஊக்குவித்தல்
  3. இளைஞர்களின் ஆக்கபூர்வமான உள்ளீடுகளை அபிவிருத்திக்குப் பயன்படுத்துதல்
  4. திட்டமிடல் மற்றும் தீர்மானம் மேற்கொள்ளலில் இளைஞர்களின் உள்ளீடுகளைப் பெற்றுக்கொள்ளுதல்
  5. இளைஞர்களுக்கு திறன்கள் அபிவிருத்திக்கான வாய்ப்புகளையும், தமது கிருஷ;டித் திறன்களை வெளிக்காட்டுவதற்கான வாய்ப்புகளையும் வழங்குதல்
  6. ஆட்சிமுறையில் இளைஞர் பங்கேற்பை ஊக்குவித்தல்

This post is also available in: English සිංහල