பக்கச்சார்பாக நடந்துகொள்ளும் சமுர்த்தி முகாமையாளர்!

பக்கச்சார்பாக நடந்துகொள்ளும் சமுர்த்தி முகாமையாளர்!

வவுணதீவு சமுர்த்தி முகாமையாளர் பக்கச்சார்பாக நடந்துகொள்கின்றார் என்று மட்டக்களப்பு வவுணதீவை சேர்ந்த அ. இதயவதனி (31) மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.

வவுணதீவு, 5ம் குறுக்கு வீதியில் வசிக்கும் இவர், வவுணதீவு சமுர்த்தி முகாமையாளருக்கு எதிராக இந்த முறைப்பாட்டை முன்வைத்துள்ளார்.
சமுர்த்தி முகாமையாளர் தனக்கு நெருங்கிய உறவினர்களுக்கு சமுர்த்தி சம்பந்தமாக முன்னுரிமை அளிப்பது கவலைக்குரிய விடயம். இதனால் எம்மைப்போன்ற பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

பொதுக்களுக்கு வரும் சமுர்த்தி பணத்தை 8 மாதம், 4 மாதம் என்று பிரித்துக் கொடுக்கின்றனர். அதுவும் சகல தொகையும் வழங்கப்படுவதில்லை. அரைவாசியே வழங்குகின்றனர். கொடுப்பனவை எடுத்துக் கொண்டு செல்லும் மக்கள் எவரும் இது பற்றி அச்சம் காரணமாக எதுவும் கேட்பதும் இல்லை. இதற்கு தீர்வை தரும்படி கேட்டுக்கொள்கின்றேன் என்று இதயவதனி முறைப்பாட்டில் கோரியுள்ளார்.

பொதுமக்களுக்கு சம உரிமை கிடைக்க வேண்டும். அவர்களுக்கான நிவாரண பணம் ஒவ்வொரு மாதமும் சரியான முறையில் கிடைக்க வேண்டும். என்றும் அவர் முறைப்பாட்டில் கேட்டுக் கொண்டுள்ளார்.

– மட்டக்களப்பு இதயவதனி முறைப்பாடு

This post is also available in: English සිංහල

More News

2003 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க, பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபைச் சட்டம்

2003 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க பாவனையாளர் அ...

Read More