வாகன தரிப்பிட அனுமதிச்சீட்டு வழங்குபவரால் ஊடக சுதந்திரம் மீறப்பட்டுள்ளது!

வாகன தரிப்பிட அனுமதிச்சீட்டு வழங்குபவரால் ஊடக சுதந்திரம் மீறப்பட்டுள்ளது!

வாகன தரிப்பிட அனுமதிச் சீட்டு தொடர்பான மோசடி குறித்து செய்தி சேகரிக்க சென்ற வேளை தனக்கு எதிராக மனித உரிமை மீறல் நடைபெற்றதாக திருகோணமலை ஊடகவியலாளர் அலியார் முகமது ஹீத் (46) மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.

திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலை முன்பாக கடந்த 2021-05-25 அன்று இந்த சம்பவம் நடைபெற்றதாகவும் அதற்கான ஆதாரமாக வீடியோ பதிவுகள் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் வாகன தரிப்பிட அனுமதிச் சீட்டு வழங்குனருக்கு எதிராக இந்த முறைப்பாடு பதிவாகியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக அவர் இவ்வாறு முறையிட்டுள்ளார்:
“திருகோணமலை பொது வைத்தியசாலை முன்பாக இருக்கும் வாகன தரிப்பிடத்திற்கு அனுமதிச் சீட்டு வழங்கும் நடவடிக்கையை சட்டமீறலாக செய்தி சேகரிக்க சென்ற போது சீட்டு வழங்குபவரால் தகாத வார்த்தைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு மரண அச்சுறுத்தலும் விடுக்கப்பட்டது.

தற்போது பொது வைத்தியசாலைக்கு செல்பவர்களையும் இவர் தகாத வார்த்தைகளால் பேசுகின்றார். கொரோனா பயணத்தடை காலப்பகுதியில் திருகோணமலை பொதுவைத்தியசாலை வாகன தரிப்பிட அனுமதிச்சீட்டு வழங்குபவர் குறித்த காலப்பகுதியில் தனக்கு வருமானம் இன்மையால் சீட்டு வழங்குதல் மூலம் பெறப்படும் வருமானத்தின் மூலம் திருகோணமலை நகராட்சி மன்றத்திற்கு வருமானம் செலுத்த முடியும் என்று தெரியப்படுத்தியுள்ளார். பொதுகட்டிட அல்லது பிரதேச வாகனதரிப்பிட கட்டணம் அறிவிக்கூடாது என்ற அரசாங்கத்தின் சட்டமும் மீறப்பட்டுள்ளது”.

இந்த சம்பவத்தினால் ஊடக சுதந்திரம் மீறப்பட்டுள்ளதாகவும், தனிமனித சுதந்திரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

– ஊடகவியலாளர் அலியார் முகமது ஹீத் முறைப்பாடு

This post is also available in: English සිංහල

More News

மீள்குடியேறிய மக்களுக்கு அடிப்படை வசதிகள் வேண்டும்!

மீள்குடியேறிய மக்களுக்கு அடிப்படை வ...

Read More

தகவல் அறியும் உரிமைச்சட்டத்திற்கான படிவங்கள்

தகவல்களைப் பெறுவதற்கான விண்ணப்பம் PDF...

Read More

Diamond Leadership Study on Women Political Empowerment in Sri Lanka (2019/2020)

Diamond Leadership Study on Women Political Empowerment in Sri Lanka (2019/2020) The Centre for P...

Read More