தேர்தல் முறையிலும் மாற்றம் தேவை

 

தேர்தல் முறையிலும் மாற்றம் தேவை
தயாசிரி ஜயசேக்கர
பாராளுமன்ற உறுப்பினர் – ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன

 

நாட்டில், இன்று காணப்படும் சூழ்நிலை உண்மையில் முதலாவது விடயம் பாராளுமன்றத்தின் 225 பேரும் அவசியமற்றவர்கள் என்ற விடயம். இது இலங்கையில் இருக்கின்ற அனைவரும் சொல்லும் விடயம் அல்ல போராட்ட பூமியிலியிருக்கும் ஒரு சில குழுவினர்களால் தோற்றுவிக்கப்பட்ட விடயம் என்பதே அங்குள்ள பிரதான நெருக்கடியாகும். இவ்வாறுதான் 2019லும் 225 வேண்டாம்.

பாராளுமன்றத்திற்கு குண்டு வீச வேண்டும் எனச் சொல்லிக் கொண்டுவந்த 225ம் தான் இப்போது மீண்டும் வேண்டாம் என்ற நிலைமைக்கு வந்துள்ளது. உண்மையில் இங்கிருப்பது இலக்கத்திலுள்ள பிரச்சனையல்ல. தாம் நியமிக்கின்ற பிரதிநிதி பற்றிய நம்பிக்கை, கௌரவம், அவர் உண்மையில் போய் என்ன செய்வார், பாராளுமன்றத்தில் செயற்படுகின்ற செயல்முறை, போன்றவை பற்றிய பிரச்சனையாகத் தான் நான் அதனைக் காண்கின்றேன். இரண்டாவது விடயம், 74 வருடங்களாக அரசியல் வேண்டாம் என்கின்ற விடயம். 74 வருடங்களில் அல்ல இந்த பிரச்சனை எழுந்தது. 7

 

7க்கு முன்னர் இருந்த அரசாங்கங்களில் ஊழல் தன்மை குறைவாக இருந்தது. நபர்கள் தீயவர்கள் அல்ல. எமக்குத் தெரியும் சீ.டபிள்யு.டபிள்யு. கன்னங்கர அவர்கள் உயிரிழக்கும் போது அவர் கருணைத் தொகையையே பெற்றுக் கொண்டார். அவ்வாறான அரசியல்வாதிகளைக் கொண்ட ஒரு சமூகம்தான் 77ன் பின்னர், விகிதாசார தேர்தல் முறையும் திறந்த பொருளாதார முறையும் காரணமாக பாரிய நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது.

அதனால் இது 40 வருடங்களுக்கு முந்திய அரசியலுடன் ஏற்பட்ட நிலைமை என்றே நான் நம்புகின்றேன். தேசிய சபை தொடர்பான பிரேரணை அவ்வாறே, பாராளுமன்றம் மற்றும் அமைச்சரவையுடன் இணைந்து தொழில்வாண்மையாளர்களைக் கொண்ட தேசிய சபையொன்றைத் தாபித்து, அவர்களின் கருத்துகளையும் ஆலோசனைகளையும் பெற்றுக் கொண்டு அரசாட்சி செய்ய வேண்டும் என்ற விடயம், இந்த போராட்ட பூமியில் இருந்தவர்களிடமிருந்து வந்த பாரிய முன்மொழிவாகவே இருந்தது. அதைத் தான் நாமும் பிரேரித்துள்ளோம்.

அவர்கள் பாராளுமன்றத்திற்கு எங்களை நியமித்து அனுப்புவதைப் போன்றே மறுபுறத்தில், பாராளுமன்றத்திற்கு நியமித்து அனுப்புவர்களிடையிலேயே மேலும் ஒரு குழுவினரை அரசியலுக்கு எடுத்துக் கொள்ள, அவர்களின் கருத்துகளைப் பரிமாறிக் கொள்ள, கருத்துக்கள் ஆலோசனைகளை கருத்திற் கொள்ளுகின்ற ஒரு சபை இருக்க வேண்டும் என்ற விடயம். ஒரு வகையான பெறுமதியுடன் கலந்துரையாடப்பட்டு வருகின்ற விடயமாக நாம் இதனைக் காண்கின்றோம். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி என்ற ரீதியில் எமது ஏற்பாட்டாளர்களை தலைவர் நியமிப்பதில்லை. தலைவர் கடிதத்தைக் கொடுத்தாலும் அதற்கு முன்னர் சில நிகழ்வுகள் உள்ளன. ஏனென்றால் நேர்முகத் தேர்வு விசாரணைச் சபையொன்று உள்ளது.

அச் சபைக்கு நபர்கள் வருவார்கள். அவர்களின் தகவல்கள் கலந்துரையாடப்படும். அதிலிருந்துதான் நாம் அந்தந்தத் தொகுதிகளுக்கு ஏற்பாட்டாளர்களைத் தேர்ந்தெடுத்து நியமிப்போம். கட்சித் தலைவர் ஒருவரால் நபரொருவர் நியமிக்கப்படுவது நியாயமான முறையல்ல. தேர்தலொன்றின் போது தாம் விரும்பிய நபருக்கு வாக்களிக்க சிறந்த பட்டியலொன்று இல்லையென்பது மக்களிடமிருந்து விடுக்கப்படும் பாரிய குற்றச்சாட்டு. சில மாவட்டங்களில் பட்டியலை எடுத்துக் கொண்டால், திருடர்கள், கொள்ளைக்காரர்கள், சமூக ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்கள், காடையர்கள், அயோக்கியர்கள், கல்வியறிவற்றவர்கள் என இவ்வாறான பல எண்ணிக்கையிலான பெயர்கள் இந்தப் பட்டியலில் காணப்படுகின்றன.

அதுதான் காணப்படுகின்ற பிரதான நெருக்கடி. மக்களால் தேர்ந்தெடுக்கக் கூடிய மனிதர்கள் இந்த பட்டடியலில் இல்லை. ஏற்றுக் கொள்ளக் கூடிய வேட்பாளர்கள் தேவை அரசியற் கட்சி என்ற ரீதியில் எம் அனைவருக்கும் நாட்டிலும் சமூகத்திலும் அங்கீகரிக்கப்பட்ட நபர்களை ஈடுபடுத்தும் பொறுப்புள்ளது. ஊழல் குற்றச் சாட்டுகளுக்கு உள்ளானவர்கள், கொலை செய்தவர்கள், கொலைக் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்களை பட்டியலின் மூலம் சமர்ப்பிக்கும் போது தேர்ந்தெடுக்கின்ற ஆற்றல் மக்களுக்குக் கிடைக்காது.

அது தொடர்பான பல விடயங்களை நாம் கலந்துரையாடி வருகின்றோம். அரசியலமைப்புத் திருத்தம் என்ற விடயத்தில், இங்கு சொல்லப்பட்ட விடயங்களுடன் இணைந்து இப்போது காணப்படும் தேர்தல் முறையும் சீர்திருத்தப்பட வேண்டும். அது பற்றியும் நாம் கலந்துரையாடிக் கொண்டிருக்கின்றோம். எமது பல பிரேரணைகளை சமர்ப்பித்துள்ளோம். எதிர்காலத்தில் மிக விரைவாக இந்த தேர்தல் திருத்தச் செயற்பாடுகளை வலுப்படுத்தினால் மட்டுமே பிரதிநிதித்துவ சனநாயகம் வலுப்பெறும். போராட்டத்துடன் தொடர்புபட்டுள்ள மனிதர்களின் உணர்வுகளை ஓரளவுக்கு இந்த செயற்பாட்டில்தான் ஆசுவாசப்படுத்த நேரிடும் என நான் நம்புகின்றேன்.

This post is also available in: English සිංහල