போராட்டத்தில் கட்டுண்டு அரசியலமைப்புகளைத் தயாரிப்பது நாட்டில் இடி விழுவதற்கு ஒப்பாகும்
பிரசன்ன ரணதுங்க
பாராளுமன்ற உறுப்பினர் – ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன
எமது நாட்டில் அரசியலமைப்பானது 78லிருந்து இதுவரை 20 தடவைகள் திருத்தப்பட்டுள்ளது. இத் திருத்தங்களில் பல, அரசியற் கட்சிகளின் அல்லது நபர்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்காகவே
கொண்டுவரப்பட்டன. அதனாற்தான் திருத்தங்கள் வந்து வந்து இது சிக்கல் நிலைமைக்கு வந்துள்ளது.
எனவே நிகழ்காலத்திற்குப் பொருந்துகின்ற புதிய அரசியலமைப்பொன்றை இந்த நாட்டுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்ற கருத்து நாட்டு மக்களிடமும் கல்விமான்களிடமும் காணப்படுகின்றது. மக்களின் தேவைகளை இனங்கண்டு நாட்டுக்குப் பொருத்தமான புதிய அரசியலமைப்பொன்றைக் கொண்டுவர வேண்டும் என்பதுதான் எனது ஆலோசனையும் கூட. ஜனாதிபதி முறையை இரத்துச் செய்கின்ற போது மாகாண சபைகளுக்கு என்ன நடக்கும், உள்ளூராட்சியாரின் கீழ் நிருவகிக்கப்படும், என்ற சிக்கல் தோன்றும். இவை ஒன்றோடொன்று இணைந்துள்ள விடயங்கள்.
எமது நாட்டை கூட்டாட்சி ஆக்குவதா, ஒற்றையாட்சி நாடாக்குவதா? என்ற தீர்மானத்தை எடுக்க வேண்டும். கூட்டாட்சியாக்குவதாயின் மாகாண சபைகளை வைத்துவிட்டு ஜனாதிபதி முறைமையை இரத்துச் செய்தால் கூட்டாட்சியாகக் கொண்டு செல்லலாம். நாட்டின் பெரும்பான்மை மக்கள் இது ஒற்றையாட்சி அரசாங்கமாக இருக்க வேண்டும் எனச் சொல்வார்களாயின்இ மாகாண சபைகளைக் கையாள்வதற்கான சில அதிகாரங்கள் ஜனாதிபதிக்கு இருக்க வேண்டும். இதனைச் சுருக்கமாக விளக்க முடியாது. இது விரிவான கலந்துரையாடல்.
நான் எதிர்க்கட்சியில் இருக்கும்போது அரசியலமைப்புத் திருத்தக் குழுவில் நான்கு வருடங்கள் இருந்தேன். நாம் கலந்துரையாடினோம். முடிவொன்றைக் காணவில்லை. அரசியலமைப்பு எனப்படுவது ஓரிரு நாட்களில் தயாரிக்கக் கூடிய விடயமல்ல. நாட்டில் ஒரு கலந்துரையாடலை ஏற்படுத்த வேண்டும். ஏனெனில் பலருக்கு இந்த அரசியலமைப்பு பற்றிய புரிதல் இல்லை.
அன்றாட தேவைகளைப் பூர்த்தி செய்துகொண்டு வாழ்வதே அவர்களது தேவை. எனவேஇ இந்த நாட்டில் ஒரு கலந்துரையாடலை ஏற்படுத்தி இது தொடர்பான வாதவிவாதங்கள் ஏற்பட இடமளித்து இந்த நாட்டுக்குப் பொருத்தமான அரசியலமைப்புச் சட்டமொன்றை அறிமுகப்படுத்த வேண்டும் என நம்புகின்றேன். அதற்கு அனைவரின் ஒத்துழைப்பும் கிடைக்க வேண்டும். இல்லாவிடில் இதனைச் செய்ய முடியாது. இன்று பாராளுமன்றத்தில் தேசிய பட்டியலிலிருந்து நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள் தவிர்ந்த ஏனைய அனைவரும் மக்கள் வாக்குகளால், மக்களின் பிரதிநிதிகளாகத்தான் நியமிக்கப்பட்டிருக்கின்றார்கள்.
இன்று போராட்டத்தைப் பற்றி இந்த நாட்டில் பெரிதாகப் பேசுகின்றார்கள். அங்கிருக்கின்ற அறுபது தலைவர்களிடம் இடம்பெற வேண்டியது எதுவெனக் கேட்டால்இ அந்த அறுபது பேரும் அறுபது விடயங்களைச் சொல்வார்கள். அரசியலமைப்பைப் பற்றிய புரிதல் இல்லாதவர்களும் அங்கு பேசுகின்றார்கள். அவர்கள் எதனை முன்மொழிகின்றார்கள் என ஊடகங்கள் கேட்கும் போது அவ்வாறான பிரேரணைகள் அங்கேயில்லை என்கின்றார்கள். எனவே இந்தப் போராட்டத்தில் சிக்குண்டு, அரசியலமைப்புகளை தயாரிக்க முனைந்தால் அது நாட்டில் இடி விழுந்ததற்கு ஒப்பாகும்.
இது பற்றிய சிறந்த புரிதலையுடைய குழுக்களை ஒன்றிணைத்துக்கொண்டு நல்லதொரு கலந்துரையாடலை ஏற்படுத்திஇ அதனை மக்களுடைய தரப்பிலிருந்து பார்த்து மக்களின் குறிக்கோள்கள்
பாதுகாக்கப்படும் வகையில் செயற்படுகின்ற அரசியலமைப்பொன்றாகஅது இருக்க வேண்டும். போராட்டக்காரர்கள் 225 பேரும் வேண்டாம் என்று சொல்கின்றார்கள்.
ஆனால் இப்போதிருக்கின்ற 225 பேரும் விலகினால் அடுத்து பட்டியலில் உள்ள 225 பேர்தான் நியமிக்கப்படப் போகின்றார்கள். அதனால் நிறைவேற வேண்டியது போராட்டக்காரர்களின் நோக்கமல்ல.
பிரஜைகளின் குரல்
This post is also available in: English සිංහල