இன பாகுபாடு காரணமாக முஸ்லிம் ஊடகவியலாளர்களுக்கு காணிகள் வழங்கப்படவில்லை!

இன பாகுபாடு காரணமாக முஸ்லிம் ஊடகவியலாளர்களுக்கு காணிகள் வழங்கப்படவில்லை!

இனரீதியிலான பாகுபாடு காரணமாக மட்டக்களப்பு மாவட்;டத்தில் முஸ்லிம் ஊடகவியலாளர்களுக்கு காணி வழங்கப்படவில்லை என்று மட்டக்களப்பு ஊடகவியலாளர் ஏ.எச்.அப்துல் ஹ{சைன் (54) மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.
ஏறாவூர், காயர் வீதியைச் சேர்ந்த இவர், மாவட்ட செயலகத்திற்கு எதிராகவும், மாவட்ட செயலாளருக்கு எதிராகவும் இந்த முறைப்பாட்டை முன்வைத்துள்ளார். இந்த மனித உரிமை மீறல் 2021ம் ஆண்டு மார்ச் மாதம் இடம்பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 32 ஊடகவியலாளர்களுக்கு காணி வழங்கப்பட்டுள்ளது. இதில் முஸ்லிம் ஊடகவியலாளர்கள் எவரும் உள்ளடக்கப்படவில்லை என்று அவர் அந்த முறைப்பாட்டில் கூறியுள்ளார். இதற்கான ஆவண சாட்சியங்களாக செய்திகள், படங்கள் மற்றும் பிரதேச செயலக ஊடகப்பிரிவின் ஆவணங்கள் என்பனவற்றை குறிப்பிட்டுள்ளார்.
இந்த பாரபட்சமான செயற்பாடு தொடர்பில் 2021ம் ஆண்டு ஜுன் மாதம் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறையிடப்பட்டதாகவும், இது தொடர்பான விசாரணைகள் இடம்பெறுவதாகவும், ஆனால் தீர்வு கிடைக்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இனரீதியிலான செயற்பாடுகள் நிறுத்தப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட முஸ்லிம் ஊடகவியலாளர்களுக்கு காணிகள் வழங்கப்பட வேண்டும் என்று அவர் இந்த முறைப்பாட்டினூடாகக் கேட்டுக்கொண்டுள்ளார்.

– ஊடகவியலாளர் அப்துல் ஹ{சைன் குற்றச்சாட்டு

This post is also available in: English සිංහල

More News

பகிடிவதை புரியும் வங்கி முகாமையாளர்!

பகிடிவதை புரியும் வங்கி முகாமையாளர்!...

Read More