அரசியற்கட்சி உறுப்பினரால் மனித உரிமை மீறல்!

அரசியற்கட்சி உறுப்பினரால் மனித உரிமை மீறல்!

வந்தாறுமூலை பொதுச்சந்தையில் அரசியற்கட்சியை சார்ந்த ஒருவரால் நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறலுக்கு நீதியைப் பெற்றுத்தருமாறு தனது சக ஊடகவியலாளரும், சகோதரனுமாகிய எல்.தேவப்பிரதீபன் சார்பில் அவரது சகோதரரால் முறைப்பாடு ஒன்று பதியப்பட்டுள்ளது.
ஊடகவியலாளர் தேவ அதிரன் இந்த முறைப்பாட்டை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்துள்ளார்.

இந்த மனித உரிமை மீறல் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியைச் சேர்ந்த வேலுப்பிள்ளை நந்தகுமார் என்பவரால் நிகழ்த்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வந்தாறுமூலை பொதுச்சந்தைக்கு முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றைப் பற்றி செய்தி சேகரிக்க சென்ற வேளை ஐ.பி.சி தமிழ் செய்தியாளரான எனது சகோதரர் அங்கு வந்த அரசியற்கட்சியைச் சேர்ந்த வேலுப்பிள்ளை நந்தகுமார் என்பரால் தாக்கப்பட்டார். இதனால் 3 தினங்கள் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற வேண்டிய நிலை அவருக்கு ஏற்பட்டது என்று அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பாக ஏறாவூர் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசியற்கொள்கை முரண்பாட்டினால் ஆர்ப்பாட்டத்தினை குழப்பும் நோக்கத்துடன் இந்த செயற்பாடு இடம்பெற்றதாக அதிரன் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாமையை உறுதிப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ள அவர், இந்தம அநீதிக்காக நிதி இழப்பீட்டைப் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

-ஊடகவியலாளர் தேவ அதிரன்

This post is also available in: English සිංහල