போராட்டத்தின் சமிக்ஞையை புரிந்துகொள்ளல்

போராட்டத்தின் சமிக்ஞையை புரிந்துகொள்ளல்

“பிரஜைகள் குரல்” என்பது இந்த நாட்டின் மக்களின் குரலை சமூக மயப்படுத்தும், பிஜைகளுக்கு முக்கியம் வாய்ந்த விடயங்கள் தொடர்பாக பரந்த கலந்துரையாடலை மேம்படுத்தும் நோக்காகக் கொண்ட வெளியீடாகும். 25 வருடகாலமாக மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் கட்டியெழுப்பிய சமூகசார் கலந்துரையாடலை இச்சந்தர்ப்பத்தில் மேலும் தீவிரமாக மேற்கொள்ள வேண்டுமென சிந்தித்தோம். அதற்கமைய இந்த வெளியீடு மும்மொழிகளிலும் வெளியிடப்படவுள்ளதுடன், இக் கலந்துரையாடல்களை சமூக ஊடகத்தில் வீடியோப் பதிவுகளாக வெளியிடுவதற்கும் எதிர்பார்க்கின்றோம். அரசியலமைப்பு உருவாக்கம் என்பது நாட்டின் மிக முக்கியமான செயற்பாடாகும். சோல்பரி அரசியலமைப்பு தொடக்கம் 78 வது அரசியலமைப்பு வரையும், அன்றிலிருந்து இன்றுவரை மேற்கொள்ளப்பட்ட அரசியலமைப்பு உருவாக்க செயல்முறைகளில் இந்த சமூகத்தில் வாழும் மக்களது உண்மையான வாழ்வியல் எதிர்ப்பார்ப்புக்கள் பிரதிநித்துப்படுத்தப்படவில்லை என்பது தெளிவாகின்றது. 71 ஆண்டு கிளர்ச்சியில் முன்வைக்கப்பட்ட செய்தியை புரிந்துகொண்ட வகையில், 78 ஆண்டு அரசியலமைப்பு அமைந்திருக்கவில்லை.

 

20வது தடவைகள் சீர்திருத்தப்பட்டு இன்றுவரை அமுலிலுள்ள 78வது அரசியலமைப்பு, 40 வருடங்களுக்கு மேலாக அமுலில் இருக்கும் காலப்பகுதியில் வடக்கிலும் தெற்கிலும் இரண்டு கிளர்ச்சிகளால் சவாலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. பிரஜைகளாக தமது உரிமைகளை கோரும் வடக்கு மக்களது பிரச்சினைகள் 30 வருட கால யுத்தமாக வளரும் வரை அதற்குறிய நியாயமான தீர்வை வழங்குவதற்கு அரசு தவறியது. யுத்தம் நிறைவடைந்து பத்து வருடத்திற்கும் அதிகமான காலம் கடந்தும் குறிப்பிட்ட பிரச்சினைகளுக்கான தீர்வு இதுவரை வழங்கப்படவில்லை. 88-89 களில் தெற்கு இளைஞர் கிளர்ச்சிகளின் ஊடாக முன்வைக்கப்பட்ட சமிக்ஞையை புரிந்துகொள்வதற்கும் ஆட்சியாளர்கள் தேர்ச்சி பெறவில்லை. சுதந்திரத்தின் பின்னர் கடந்த 75 வருடகாலமாக சமூகத்தால் முன்வைக்கப்பட்ட பாரதூரமான எவ்வித சமிக்ஞைகளையும் எந்த ஒரு ஆட்சியாளரும் புரிந்துகொள்ளவில்லை என்பது மேலும் தெளிவாகின்றது.

கடந்த நாட்களில் மேலெழுந்த மக்கள் போராட்டம், அண்மைக்கால வரலாற்றின் மிகவும் முக்கிய போராட்டம் ஆகும். இதில் பல சாதகமான அம்சங்களும், சில பாதாகமான அம்சங்களும் காணப்பட்டன. இதன் சிறப்பம்சம் யாதெனில் வன்முறையற்ற மற்றும் மிகவும் ஆக்கப்பூர்வமான போராட்டமாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 71 மற்றும் 88-89 இளைஞர் கிளர்ச்சி சிறு ஆயுத கிளர்ச்சியாக அமைந்திருந்தது. இந்த போராட்டத்தில் பங்கேற்ற இளைஞர் குழு 88-89 தலைமுறையினரினதும் பிள்ளைகளாகவும் 71 தலைமுறையினரின் பேரப்பிள்ளைகளாகவும் இருக்கலாம். இவர்களது போராட்ட முறை முற்றிலும் அஹிம்சையானது. அத்தோடு, இன, மத, பகுப்பு, கிராமிய-நகர, ஆண் – பெண் போன்ற எவ்வித பேதங்களுமின்றி அனைவரையும் ஒருங்கிணைக்கும் வலிமையும், அனைவருக்கும் சம அந்தஸ்துக் காணப்பட்டமையும் இப்போராட்டத்தின் சிறப்பம்சமாகும். மேற்குறிப்பிட்டவாரான பல சாதகமான அம்சங்கள் இதனூடாக மேலெழுந்தன.

ஆனபோதும் இந்த போராட்டத்தின் பின்னரும், அதன் சமிக்ஞைகளை புரிந்துகொள்ளாது வழக்கமான முறையில் முன்நோக்கி நகர்வதற்கான முயற்சியை அரசாங்க தர்பினர் மேற்கொள்வது கவலைக்குரிய விடயாமாகும். அமைச்சரவை, அமைச்சர் மற்றும் இறுதியாக ஜனாதிபதி வரை பதவி விலகுவதற்கு காரணமாயிருந்த தற்போதைய போராட்டத்திற்கு வெறுப்புடன் பதில் அளிப்பதை மிகத்தெளிவாக காணமுடிகின்றது.

இது மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய தன்மையாகும். இப்பின்னணியில் எமது முயற்சியானது, போராட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்ட “முறையில் மாற்றத்தை ஏற்படுத்தல்” என்ற விடயம் குறித்து கலந்துரையாடலை ஏற்படுத்துவதாகும். நாட்டின் அரசியலமைப்பு அந்நாட்டின் அனைத்து பிரஜைகளினதும் கௌரவத்திற்கும் ஏற்றுக் கொள்ளலுக்கும் ஏற்புடையதாக அமைந்திருக்க வேண்டும். அத்தோடு அரசியலமைப்பை உருவாக்க செயல்முறையும் பிரபுகள் மட்டத்தில், அரசியல் கட்சிகளது பொறுப்பு என மட்டுப்படுத்தாது சமூகத்தின் பல்வேறு தரப்பினர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தரப்பினரது பங்கேற்புடன் பரந்த கலந்துரையாடலின் மூலம் மேற்கொள்ள வேண்டியதொன்றாகும். அது ஒருசில நாட்களில் தயாரிக்கக் கூடிய விடயமொன்றல்ல. இதன் போது ஒரு வரைபில்லாது பல வரைபுகள் தயாரிக்கப்படலாம்.

எனினும், இறுதி வரைபு பொதுமக்கள் மத்தியில் பரந்தளவில் கலந்துரையாடப்பட வேண்டும். எமது முயற்சியானது புதிய அரசியலமைப்பு உருவாக்குதலில் மேற்குறிப்பிட்டவாறு கலந்துரையாடலை ஏற்படுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்குவதாகும். அதன் முதல் கட்டமாக, நடைமுறையில் செயற்பாட்டு அரசியலில் ஈடுபட்டுள்ள கட்சித் தலைவர்கள் மேற்படி விடயம் குறித்து எந்த அளவிற்கு விழிப்புணர்வுடன் உள்ளனர் என்பதுகுறித்து விசாரித்துப் பார்த்தோம். மேலும் அரசியல் சீர்திருத்தம் தொடர்பில் அவர்கள் எவ்வாறு சிந்திக்கின்றனர் என்பதுகுறித்தும், ஜனநாயகத்தை வலுவூட்டுதல் மற்றும் கட்சி உள்ளக ஜனநாயகம் போன்ற விடயங்கள் குறித்தும் கலந்துரையாடினோம்.

எதிர்காலத்தில் மேலும் பல தரப்பினருடன் இவ்விடயம் குறித்து கலந்துரையாடல்களை ஏற்படுத்துவதற்கு எதிர்பார்க்கின்றோம். விசேடமாக இதுகுறித்து நிபுணர்களது கருத்துக்களை சமூகத்திடம் கொண்டு சேர்ப்பதற்கும், கலந்துரையாடல்களை ஏற்படுத்துவதற்கும் எதிர்பார்க்கின்றோம். பேராசிரியர் ஜயதேவ உயங்கொட அவர்களது கருத்துக்களை இந்த இதழில் இணைப்பதன் நோக்கம் அதுவே. அச்சு வெளியீடுத் துறை முன்கொடுத்துள்ள சவால்கள் காரணமாக ஆரம்பத்தில் இவ்விதழ் இலத்திரனியல் வெளியீடாக மாத்திரம் வெளியிடுவதற்கு எதிர்ப்பார்க்கின்றோம். ஆனபோதும் எதிர்காலத்தில் இதன் பிரதான விடயங்கள் தொடர்பில் திறந்த சமூகக் கலந்துரையாடல்களை ஏற்படுத்துவது எமது எதிர்பார்ப்பாகும். இக்கலந்துரையாடலுடன் இணைந்து இச்செயன்முறையை மேலும் மேம்படுத்துவற்கு பல்கலைக்கழக சமூக, தொழில் வாண்மையாளர்கள் மற்றும் இதுகுறித்து ஆர்வம் செலுத்தும் பிரஜைகளையும் அழைக்கிறோம்.

லயனல் குருகே

சிரேஷ்ட ஆய்வாளர்

மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம்

This post is also available in: English සිංහල