ஊடகச் சுதந்திரத்திற்கு இடையூறு விளைவிப்பு!

ஊடகச் சுதந்திரத்திற்கு இடையூறு விளைவிப்பு!

தொல்பொருள் திணைக்களத்தில் நடைபெற்ற நிகழ்வு தொடர்பாக செய்தி சேகரிக்க சென்ற வேளை இடையூறு விளைவிக்கப்பட்டதாக வவுனியாவைச் சேர்ந்த ஊடகவியலாளர் கு.கோகிலன் (38) இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.
தொல்பொருள் திணைக்கத்திற்கு எதிராக அவர் இந்த முறைப்பாட்டினைப் பதிவு செய்துள்ளார்.

ஊடக சுதந்திரம் மறுக்கப்பட்டதாகவும், இந்த மனித உரிமை மீறல் அரசியற் காரணங்களுக்காக இடம்பெற்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த முறைப்பாடு மார்ச் 8ம் திகதி 2022 அன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாட்டில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, ‘வவுனியா கச்சன் சமணங்குளத்தில் தொல்பொருள் தொடர்பான செய்தி சேகரிக்க சென்ற போது தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளினால் தடையேற்படுத்தப்பட்டதுடன் புதிதாக மறுசீரமைக்கப்படும் தொல்பொருட்களை ஒளிப்பதிவு செய்ய தடை விதித்தனர்.

மறுசீரமைக்கப்படாத விடயங்களை மாத்திரம் ஒளிப்பதிவு செய்ய சிறிது நேரம் மட்டும் அனுமதித்ததுடன் இது தொடர்பாக தான் பணியாற்றும் ஊடக நிறுவனத்திற்கு தகவல் வழங்கி மேலதிகாரிகளினால் விசாரணைக்குட்படுத்தப்பட்டிருந்தேன்’.

தொல்பொருட்களை பாதுகாப்பதற்கு மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும், அவற்றை அழியாமல் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் இந்த முறைப்பாட்டினூடாக அவர் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

– ஊடகவியலாளர் கோகிலன்

This post is also available in: English සිංහල

More News

குடிநீருக்காய் அல்லலுறும் ஆக்கரதன்னை மக்கள்

குடிநீருக்காய் அல்லலுறும் ஆக்கரதன்...

Read More

தமிழ் மொழிக் கல்விக்கு வழியின்றி இனம் மாறும் தமிழர்கள

த. மனோகரன் தினக்குரல் 2016/01/05 கட்டுரை...

Read More

பொதுமக்களின் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும்!

பொதுமக்களின் காணிகள் விடுவிக்கப்பட ...

Read More