செய்தியை வெளியிட்டமைக்கு எதிராக பொலிசார் வழக்குப் பதிவு ஊடக சுதந்திரத்தை மீறும் செயல் என்கின்றார் ஊடகவியலாளர் அலியார் முகமது!

செய்தியை வெளியிட்டமைக்கு எதிராக பொலிசார் வழக்குப் பதிவு
ஊடக சுதந்திரத்தை மீறும் செயல்.

மதகுருவின் போலியான டிக்டொக் வீடியோ பற்றிய செய்தியின் காரணமாக பொலிசார் வழக்குத் தாக்கல் செய்தனர் என திருகோணமலை ஊடகவியலாளர் அலியார் முகமது மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறையிட்டுள்ளார்.

திருகோணமலை சாரதா வீதி, 26/1 என்ற முகவரியைச் சேர்ந்த இவர் பிரதான ஊடகங்களில் பிராந்திய செய்தியாளராக பணியாற்றி வருகின்றார். இச்சம்பவம் தொடர்பில் உப்புவெளி பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரி தயான் அவர்களுக்கு எதிராக அவர் இந்த முறைப்பாட்டை பதிவு செய்திருக்கின்றார்.

கொரோனா கால பயணத்தடை காலத்தில் பொருட்கள் விநியோகம் செய்வதாக பொய்யான வீடியோ எடுத்து அதை டிக்டொக் ஊடாக வெளியிட்டது தொடர்பாகவும், மதகுரு கைது செய்யப்பட்டது தொடர்பாகவும் செய்தி வெளியிடப்பட்டது. இது தொடர்பாக உப்புவெளி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி என்னை விசாரணைக்கு அழைத்து பின்னர் எனக்கு எதிராக திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது என்று முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், வழக்கு திகதி 25.05.2022 என்று அந்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த உரிமை மீறல் 05.02.2021 அன்று இடம்பெற்றதாக அவர் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார். ஹிரு, தெரண, சுவர்ணவாகினி ஆகியவற்றில் வெளியான செய்திகளை அவர் ஆவண சாட்சியமாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஊடகவியலாளர் அலியார் முகமது!

This post is also available in: English සිංහල

More News

சமாதான நோக்கு

மலர் 13 இதழ் 02 / டிசம்பர் மாற்றுக் கொள்...

Read More

A BRIEF REPORT ON THE IMPLEMENTATION OF THE OFFICIAL LANGUAGES POLICY (OLP) IN SELECTED MINISTRIES & GOVERNMENT INSTITUTIONS & PUBLIC PERCEPTION ON OLP IN SRI LANKA

A BRIEF REPORT ON THE IMPLEMENTATION OF THE OFFICIAL LANGUAGES POLICY (OLP) IN SELECTED MINISTRIES &...

Read More