இன வேறுபாட்டை கருத்திற்கொள்ளாது நீர் வசதியைப் பெற்றுத் தாருங்கள்!

 

இன வேறுபாட்டை கருத்திற்கொள்ளாது நீர் வசதியைப் பெற்றுத் தாருங்கள்!

அடிப்படை தேவைகளுள் ஒன்றான நீர் விநியோகம் வழங்கப்படாததால் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக மட்டக்களப்பைச் சேர்ந்த பி.டெலினா (18) மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடு ஒன்றை செய்துள்ளார்.

மட்டக்களப்பு றனமடு பிரதேச மக்கள் சார்பாக இந்த முறைப்பாட்டை அவர் செய்துள்ளார்.

நீர் வழங்கல் வடிகாலமைப்புக்கு எதிராக இந்த முறைப்பாடு பதியப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு, தாண்டவெளி, எல்லைவீதி தெற்கு, இலக்கம் 15 என்ற முகவரியைச் சேர்ந்த இவர், அடிப்படை தேவையான நீர் இன்றி மக்கள் பெரும் பிரச்சினைகளை எதிர்கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தனது முறைப்பாட்டில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:
“நீர் மனிதனுக்கு அவசியமான ஒன்று. நீர் வசதியை பெற்றுக்கொள்வது அனைவருக்கும் உள்ள உரிமையாகும். அதனைப் பெற்றுக்கொள்ள உள்ள உரிமையை எவராலும் பறித்துக் கொள்ள முடியாது. அருகில் உள்ள சிங்கள மக்களுக்கு நீர் வசதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழ் மக்கள் உள்ள எமது கிராமங்களுக்கு வழங்கப்படாதளவுக்கு பாரபட்சமும் இன வேறுபாடும் தலைத்தூக்கியுள்ளது.”.

றனமடு மக்களுக்கு விரைவாக நீர் வசதியைப் பெற்றுக்கொடுத்து அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைக்கு தீர்வினை வழங்க இலங்கை மனித உரிமைகள் தலையீடு செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

அத்துடன் மழைக்காலத்தில் நீர் தேங்கி நிற்பதால் வீதியில் நுளம்பு பெருக்கம் அதிகரிக்கின்றது. இதனால் நீர் தேங்கியிருக்கும் இடங்களில் நீரை வடித்து ஓடுவதற்கு வழி செய்யுமாறும் அதற்கு மட்டக்களப்பு மாநகர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மற்றுமொரு முறைப்பாட்டையும் அவர் செய்துள்ளார். மழைக்காலம் முடிந்த பின் சுமார் 4 மாதங்கள் இந்த பிரச்சினை காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

– மட்டக்களப்பு டெலினா கோரிக்கை

This post is also available in: English සිංහල

More News

பிரஜை – அடிமட்டத்திலான பேச்சுவார்த்தை – 2

பிரஜை – அடிமட்டத்திலான பேச்சுவார்த்...

Read More

குடிநீருக்காய் அல்லலுறும் ஆக்கரதன்னை மக்கள்

குடிநீருக்காய் அல்லலுறும் ஆக்கரதன்...

Read More

இடைக்கால வரைபு அறிக்கை

இடைக்கால வரைபு அறிக்கை இடைக்கால வ...

Read More