பிரதேச எல்லைப் பிரிப்பினால் மனித உரிமை மீறல் நிகழ்ந்துள்ளது!

பிரதேச எல்லைப் பிரிப்பினால் மனித உரிமை மீறல் நிகழ்ந்துள்ளது!

பிரதேச எல்லைப் பிரிப்பின் காரணமாக மக்களுக்கு ஏற்பட்டுள்ள அநீதி தொடர்பில் பா.சதீசன் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை செய்துள்ளார்.

வவுனியா, நெளுக்குளம், புதையல்பிட்டி, இல 225ஃ 3 யு என்ற முகவரியில் வசிக்கும் சதீசன் வன இலாகா திணைக்களத்திற்கும், வன இலாகா அதிகாரிக்கும் எதிராக இந்த முறைப்பாட்டை வழங்கியுள்ளார். இந்த மனித உரிமை மீறல் 2021ம் ஆண்டு நவம்பர் 26ம் திகதி நடைபெற்றதாகவும், கற்குளம், வவுனியாவில் இந்த மனித உரிமை மீறல் நடைபெற்றதாகக் கூறியுள்ளார்.

நிர்வாகக் குறைபாட்டின் காரணமாக இந்த மனித உரிமை மீறல் இடம்பெற்றுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வவுனியா கற்குளம் -2 கிராமத்தில் வசிப்பவர்கள் வவுனியா மாவட்டத்தின் எல்லைக்குள் இருந்தார்கள். தற்போது எல்லை பிரிக்கப்பட்டதனால் அவர்கள் அனுராதபுரம் மாவட்டத்திற்கு சென்று விட்டார்கள். அதனால் மாவட்ட ரீதியாக தேவைப்பாடுகளை பல கி.மீ தூரம் கடந்து செல்ல நேர்ந்துள்ளதாக அந்த முறைப்பாட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதன்படி இந்த முறைப்பாட்டினூடாக வவுனியா மாவட்டத்திற்குள் தங்களை உள்ளடக்குமாறு மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
நிர்வாகக் குறைபாட்டினால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள அசௌகரியத்தை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் அவர் கேட்டுள்ளார்.

– பா.சதீசன்

This post is also available in: English සිංහල