அபாயா அணிந்து வந்த காரணத்தால் பாடசாலையை இழந்த பாத்திமா பக்மிதா ரமீஷ்

அபாயா அணிந்து வந்த காரணத்தால் பாடசாலையை இழந்த பாத்திமா பக்மிதா ரமீஷ்

கல்வியியல் கல்லூரி ஆசிரியையான பாத்திமா பஸ்மிதா திருகோணமலை சண்முகா இந்து மகளிர் கல்லூரிக்கு 2013 ஆம் ஆண்டு வருகை தருகிறார். அதற்கு முன் அவர் மூதூர் முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்தில் பணியாற்றினார். ஆசிரியர் பணிக்கு இதுவரை குறித்த ஒரு சீருடை நிர்ணயம் செய்யாத நிலையில் பல முஸ்லிம் பாடசாலை ஆசிரியைகள் அபாயா அணிந்து பாடசாலைக்கு வருவது வழமை.

பாத்திமா பஸ்மிதா ஆசிரியை 2013 ஆம் ஆண்டில் சண்முகா இந்து மகளிர் கல்லூரிக்கு முதல் தடவையாக வரும் போதும் அவர் அபாயா அணிந்து வந்தார். எனினும், திரு பாத்திமா பஸ்மிதாவுக்கு அந்நாள் பாடசாலையின் அதிபராகப் பணியாற்றிய திருமதி சுலோசனா தமது பாடசாலையின் ஆசிரியைகள் ஆபாயா அணிந்து வருவதற்கு அனுமதி இல்லை எனவும், அவருக்கு அதில் ஏதேனும் சிரமம் இருப்பின், வேறு பாடசாலைக்கு இடமாற்றம் பெற்றுச் செல்லுமாறும் தெரிவித்தார்.

திருமதி பாத்திமா பஸ்மிதா இரண்டு வாரங்களாக அவ்வாறு அபாயா அணிந்து பாடசாலைக்குச் சென்றிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. பின்னர் அவர் அதிபரின் அறிவுறுத்தலுக்கு அமைய அன்றிலிருந்து சேலையையும், தலையை மூடியவாறு ஸ்காப்பும் அணிந்து பாடசாலைக்கு வருகை தந்துள்ளார். இதேவேளை கிண்ணியாவைச் சேர்ந்த மற்றுமொரு முஸ்லிம் இன ஆசிரியை ஒருவர் சண்முகா இந்து மகளிர் கல்லூரிக்கு இடமாற்றம் பெற்று வருகை தந்ததுடன், அவர் அதிபரின் அறிவுறுத்தலை உதாசீனப்படுத்தி தொடர்ச்சியாக அபாயா அணிந்து பாடசாலைக்கு வருகை தந்ததாகவும், அதன் போது அவர் கறுப்பு நிற அபாயாவை அணிந்ததாகவும், பாத்திமா பஷ்மிதா ஆசிரியை கூறினார். எனினும், சுலோசனா அதிபரின் உத்தரவைப’ புறம் தள்ளி அபாயா அணிந்து வந்த அந்த ஆசிரியை தொடர்பில் ஏதோ ஒரு காரணத்தால் குறித்த சட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை என பாத்திமா பஷ்மிதா ஆசிரியை கூறினார்.

இதனை சாட்டாகக் கொண்டு, தானும் மீண்டும் சேலையிலிருந்து அபாயாவுக்கு மாறியதாக திருமதி பாத்திமா பஷ்மிதா கூறினார். அதிபரின் உத்தரவைப் பொருட்படுத்தாது அபாயா அணிந்து வந்த கிண்ணியா பிரதேச ஆசிரியை ஒரு மாத காலம் சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் கடமையாற்றி பின்னர் வேறு பாடசாலைக்கு இடமாற்றம் பெற்று சென்றதுடன், திருமதி பாத்திமா பஸ்மிதா உள்ளிட்ட மேலும் மூன்று ஆசிரியைகள் இக் கல்லூரியிலேயே கடமையாற்றினர். அவர்கள் அங்கு கறுப்பு நிற அபாயா ஆடையை தவிர்த்து வேறு நிறங்களாலான அபாயா ஆடைகளை அணிந்து தலையை ஸ்காப் ஒன்றால் மூடினார்கள்.
எனினும், பாடசாலையால் அபாயா ஆடை குறித்தான எதிர்ப்பு தொடர்ச்சியாக ஏற்பட்டமையால், அவர்கள் இந்தப் பிரச்சனையை கல்வி அமைச்சிடம் முன்வைக்க நடவடிக்கை மேற் கொண்டனர். அங்கு அதிகாரிகள் உரிய நான்கு ஆசிரியைகளுக்கு அபாயா ஆடை தொடர்பான தீர்வை வழங்கும் வரை அவர்களை அருகில் இருக்கும் சஹிரா முஸ்லிம் வித்தியாலயத்துக்கு தற்காலிகமாக இணைப்பு செய்வதாகத் தெரிவித்தனர். அதற்கமைய 2018.04.27 ஆம் திகதி இவர்களை சஹிரா முஸ்லிம் வித்தியாலயத்துக்கு இணைப்பு செய்வதற்கு மாகாண கல்வி அமைச்சு நடவடிக்கை மேற் கொண்டது. கல்வி அமைச்சு இந்தப் பிரச்சனை குறித்து கவனத்தைச் செலுத்தாது, உரிய ஆசிரியையின் தற்காலிக இடமாற்றத்தை தொடர்ச்சியாக இற்றைப்படுத்த நடவடிக்கை மேற் கொண்டதாக திருமதி பாத்திமா பஷ்மிதா தெரிவித்தார். இதனால் அவர்கள் இந்தப் பிரச்சனையை தமது மனித உரிமைகள் மீறலாகக் கருதி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடு செய்ய நேர்ந்தது.

முதலில் இவர்கள் திருகோணமலையில் அமைந்துள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு இது தொடர்பாக முறைப்பாடுகளை செய்த போதிலும், பின்னர் கொழும்பில் அமைந்துள்ள பிரதான அலுவலகத்துக்கு முன்வைத்தனர்.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு இந்தப் பிரச்சனை தொடர்பில் சகல தரப்பினருடனும் ஏழு தடவைகள் மேற் கொண்ட விசாரணைகளின் இறுதியில் உரிய ஆசிரியைகளுக்கு பாடசாலை அதிகாரிகளால் மனித உரிமைகள் மீறப்பட்டதாகவும், பாடசாலை அதிகாரிகள் அதனை உடனடியாக சீர் செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் 2019.02.19 ஆம் திகதி பரிந்துரை வழங்கியது.

தமது கலாச்சாரத்தின் ஒர் அங்கமான அபாயா ஆடையை பாடசாலைக்கு அணிந்து வருவதற்கு பாடசாலை அதிகாரிகள் தன்னிச்சையாக இடமளிக்காமை, அது தொடர்பான கல்வி அதிகாரிகளின் மௌனம், மற்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைககுழுவின் பரிந்துரைகளை பாடசாலை அதிகாரிகள் கடைபிடிக்காமை போன்ற விடயங்களின் மீது திருமதி பாத்திமா பஷ்மிதா தனது சட்டத்தரணிகளின் மூலமாக மேன்முறையீட்டு நீதிமன்றில் ரீட் மனுவை முன்வைத்துள்ளார்.

சட்ட மா அதிபர் திணைக்களம் இந்த ரீட் மனுவை விசாரணை செய்யும் போது முறைப்பாட்டாளரும், கல்வி அமைச்சும் இணக்கப்பாட்டுக்கு வருவதற்கு விருப்பு தெரிவித்தது. அந்த இணக்கத்துக்கு அமைய, மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் வழங்கப்பட்ட பரிந்துரைகளை அவ்வாறே செயற்படுத்துவதற்கும், உரிய ஆசிரியைகளின் நிலுவை சம்பள அதிகரிப்புடன், மீண்டும் அதே கல்லூரியில் கடமையாற்றவும் இணக்கம் தெரிவிக்கப்பட்டதாக திருமதி பாத்திமா பஷ்மிதாவின் கணவரான திரு அப்துல் ரஹீம் ரமீஷ் தெரிவித்தார்.

இருப்பினும், மீண்டும் ஒரு தடவை பாத்திமா பஷ்மிதா ஆசிரியை கடந்த 2022.02.02 ஆம் திகதி சண்முகா இந்து மகளிர் கல்லூரிக்கு இணைக்கப்பட்டமை, அவர் அபாயா அணிந்து பாடசாலைக்கு சமூகமளித்தமை, அதனை எதிர்த்து பாடசாலையில் குழப்ப நிலை உருவானமை ஆகிய காரணங்களால் அவர் மீண்டும் வலயக் கல்வி அலுவலகத்துக்கு இணைப்பு செய்யப்பட்டதுடன் முடிவுக்கு வந்தது. எனினும், திரு பாத்திமா பஷ்மிதா மனித உரிமைகள் மீறிப்பட்டதாக நீதிமன்றமும் மனித உரிமைகள் ஆணைக்குழுவும் தீர்மானித்திருந்த போதிலும் அதற்கான பரிந்துரைகள் வழங்கப்பட்டிருந்த போதிலும், கல்வி அமைச்சு உள்ளிட்ட அதிகாரிகளின் நடத்தைக்கு அவர் தொடர்ந்தும் சவால் விடுத்து வருகிறார்.

This post is also available in: English සිංහල