பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் அவரது மனைவி பெண் ஊடகவியலாளருக்கு அச்சுறுத்தல்

பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் அவரது மனைவி பெண் ஊடகவியலாளருக்கு அச்சுறுத்தல்

கண்டி ஹந்தான சுற்றாடல் வலயத்தில் இடம்பெறும் அனுமதியற்ற கட்டிட நிர்மான நடவடிக்கைகள் குறித்து திவயின செய்தித்தாளில் பிரசுரிக்கப்பட்ட செய்தித் தொகுப்பு தொடர்பாக பாராளுமன்ற அமைச்சர் அவரது மனைவி ஆகியோரால் ஊடகவியலாளர் சமந்தி வீரசேக்கரவிற்கு தொலைபேசியின் ஊடாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

கண்டி ஹந்தான பிரதேசம் சுற்றாடல் பாதுகாப்பு வலயமாகும். கண்டி நகருக்கு தேவையான நீரை வழங்கும் நீர் மூலங்கள் பலவற்றைக் கொண்ட உயிர்பல்வகைமை செறிந்த இப் பிரதேசத்தில் அரசியல்வாதிகளும் அவர்களது நலன்விரும்பிகளும் செல்வந்தர்களும் முறையற்ற விதத்தில் காணிகளை கையகப்படுத்தியுள்ளனர். இது தொடர்பில் ஹந்தான பாதுகாப்பு அமைப்பின் செயலாளர் திரு. அமித் சேனாநாயக்கவினால் கண்டி பொலிஸ் நிலையத்திலும் ஹந்தான முகாமைத்துவ குழுவிற்கும் மத்திய சுற்றாடல் அதிகார சபைக்கும் பல தடவைகள் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடல் மட்டத்திலிருந்து 300 அடிக்கு மேற்பட்ட உயர் நிலத்தில் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல அவர்களின் மனைவிக்கு சொந்தமானதாக கூறப்படும் காணியொன்று உள்ளது. குறித்த காணியிலுள்ள மரங்கள் வெட்டப்பட்டு தீ வைக்கப்பட்டுள்ளதாக அமித் சேனாநாயக்க கண்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். குறித்த முறைப்பாட்டினால் தற்போது கண்டி நீதிமன்றத்தில் வழக்கொன்றும் பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்படுகின்றது. இந்த சுற்றாடல் வலயத்தில் இடம்பெறுகின்ற அனுமதியற்ற கட்டிட நிர்மானங்கள் உள்ளிட்ட சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் ஊடகவியலாளர் சமந்தி வீரசேக்கர 2021 ஜனவரி மாதம் 03ஆம் திகதி திவயின செய்தித்தாளில் விசேட கடிதத் தொகுப்பொன்றை பிரசுரித்திருந்தார்.

”குறித்த கடிதம் பிரசுரிக்கப்பட்டதன் பின்னர் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல மற்றும் அவரது மனைவி ஆகியோர் இரண்டு சந்தர்ப்பங்களில் எனக்கு அச்சுறுத்தும் தொனியில் கதைத்து இத்தகைய கடிதத் தொகுப்பை பிரசுரிப்பதற்கு ஏதுவாக என்னிடமுள்ள ஆதாரங்கள் என்ன என வினவினார்கள். அவற்றை அவர்களிடம் தருமாறு தெரிவித்ததுடன் தொடர்ந்தும் என்னிடம் பேசுவதற்கு இல்லை எனத் தெரிவித்து அமைச்சர் கிரியெல்லவின் மனைவி தொலைபேசியை பாதுகாப்பு அதிகாரியிடம் கையளித்தார். அமைச்சர் கிரியெல்ல தலைமை அலுவலகத்திற்கு தொடர்பு கொண்டு என்னைப் பற்றிய தகவல்களை விசாரித்து இருக்கிறார்.” என சம்பவத்திற்கு முகங்கொடுத்த பெண் ஊடகவியலாளர் தெரிவித்துள்ளார்.

அவர் இவ் விடயம் தொடர்பில் தமது செய்தி நிறுவனத்திற்கு தெரியப்படுத்தியுள்ளதுடன் பொலிஸ் அல்லது வேறு தரப்பினருக்கு முறைப்பாடு அளிக்கவில்லை. சமந்தி வீரசேக்கர திவயின செய்திப் பத்திரிகையின் கண்டி மாவட்ட செய்தித் தொகுப்பாளராக பணியாற்றி வருகின்றார்.

 

This post is also available in: English සිංහල

More News

சட்டவிரோத மணல் அகழ்வு முறைப்பாடு இதுவரை விசாரிக்கப்படவில்லை!

சட்டவிரோத மணல் அகழ்வு முறைப்பாடு இது...

Read More

தகவல் அறிய உள்ள உரிமை மறுக்கப்படுகின்றது!

தகவல் அறிய உள்ள உரிமை மறுக்கப்படுகின...

Read More