புதிய அரசியலமைப்பிற்கான சவால்

புதிய அரசியலமைப்பிற்கான சவால்

ஒரு நாட்டின் அடிப்படை சட்டமான அரசியலமைப்பின் அடிப்படை தாற்பரியமாக அமைவது இறையாண்மையாகும், இவ் இறையாண்மை அதிகாரத்தின் ஆதாரம் மக்களே. எனவே, நாட்டின் அரசியலமைப்பு உருவாக்கம் மற்றும் சீர்திருத்தங்கள் என்பதும் நாட்டு மக்களின் பரந்த அபிலாஷைகளை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும்.

இலங்கையில் அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட பிரஜைகளின் போராட்டத்தின் கோரிக்கையானது நாட்டில் பரந்த சமூக மற்றும் அரசியல் ரீதியான சீர்த்திருத்தங்களுக்கு அழைப்பு விடுத்தது. இக்கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் சீர்திருத்தங்களில் பின்பற்ற வேண்டிய சமூக-அரசியல் கொள்கைகள், அரசியலமைப்பு கோட்பாடுகள் மற்றும் பின்பற்ற வேண்டிய  ஜனநாயக நடைமுறைகள் ஆகியவற்றைப் புரிந்துகொள்வது ஒரு மைய மற்றும் பிரதானமான தேவை என்பது எமது புரிதலாகும்.

நாட்டின் பொது தேசிய தேவையான அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் தொடர்பிலான கோரிக்கையினை வலுப்படுத்துல் மற்றும் மக்கள் அபிலாஷைகளை பரந்த மற்றும் ஆழமாக தெளிவுபடுத்திக் கொள்வதற்கான தரமான பங்களிப்பை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் எம்மால் ஆரம்பிக்கப்பட்ட “பிரஜைகளின் குரல்” என்ற பெயரில் முதலில் மக்கள் பிரதிநிதிகளின் குரலுக்கு செவிசாய்க்கும் முயற்சியாக இத்திட்டத்தினை உங்களிடம் கொண்டு வருகிறோம்.

புதிய அரசியலமைப்பிற்கான சவால் – PDF இற்கு இங்கே பிரவேசிக்கவும்

This post is also available in: English සිංහල

More News