சட்டவிரோத செயல்களை அம்பலப்படுத்தியதால் தாக்குதலை எதிர்கொண்டேன்!

சட்டவிரோத செயல்களை அம்பலப்படுத்தியதால் தாக்குதலை எதிர்கொண்டேன்!

தமது பிரதேசத்தில் இடம்பெறுகின்ற சட்டவிரோத நடவடிக்கைகள் தொடர்பில் ஊடகங்களின் கவனத்திற்கு கொண்டு வந்தமை காரணமாக தாக்குதலுக்குள்ளான போதிலும் அடம்பன் பொலிசாரிடம் அது பற்றி முறையிட்டும் இதுவரை அவர்கள் சட்ட நடவடிக்கை எதனையும் எடுக்கவில்லை என்று மன்னார், பெரியமடு, ஈச்சளவக்கை, முதலாம் வீதியில் வதிவிடத்தைக் கொண்ட ஊடகவியலாளர் அ. மயூகரன் (36) மனித உரிமைகள் ஆணைக்குவிடம் மார்ச் 7ம் திகதி, 2022 அன்று முறைப்பாடு ஒன்றை செய்துள்ளார்.

சட்டவிரோதமான செயல்களான போதைப்பொருட் விற்பனை மற்றும் மணல் அகழ்வு செய்வோர் பற்றிய விடயங்களை அம்பலப்படுத்தி செய்தியாக வெளியிட்டதனால் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடும் சில தரப்பினர் திட்டமிட்டு ஊடகவியலாளர் மயூகரன் மீது தாக்குதல் நடத்தியிருந்தனர். இது பற்றி பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்ட போதிலும் சட்ட நடவடிக்கைகள் எதுவும் இதுவரை எடுக்கப்படவில்லை என்று அவர் தனது முறைப்பாட்டில் சுட்டிக்காட்டியுள்ளார். கண்கண்ட சாட்சியாக தனது மனைவியைக் குறிப்பிட்டுள்ள அவர், இச் சம்பவம் தொடர்பில் பொலிசார் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காதது தொடர்பில் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோரைக் கண்டறிந்து ஊடகவியலாளர்கள் அவர்களை அம்பலப்படுத்தும் போது அந்த கும்பல்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை விரைவாக முன்னெடுப்பது பொலிசாருக்கு இலகுவான காரியமாக இருக்கும். ஆயினும், பொலிசார் இவிடயத்தில் ஊடகவியலாளருடன் கரம் கோர்த்து செயற்படாமல் அவர்களுக்கு எதிராக இருந்து அமைதி காப்பதானது நிச்சயம் இங்கு பொலிசாhர் பக்கச்சார்பாக செயற்படுகின்றனர் என்பதனை உறுதிப்பபடுத்துகின்றது என்றே கருத வேண்டியுள்ளது.

இது மிகவும் பிரச்சினைக்குரிய விடயாகும் என்று அவர் கூறுகின்றார்.
பாதுகாப்பு தரப்பினர் பொதுமக்கள் பக்கமும், சட்டவிரோத செயற்பாடுகளை அம்பலப்படுத்தும் ஊடகவியலாளர்கள் பக்கமும் நிற்க வேண்டும். அவர்களுக்காக முன்நிற்க வேண்டும். அதுவே நியாயமான செயற்பாடாகும். ஆயினும், இங்கு பொலிசார் இவ்வாறு பக்கச்சார்பாக நடந்துகொள்வது பல்வேறு கேள்விகளை எழுப்புகின்றது.

சுயாதீன ஊடகவியலாளர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று மயூகரன் தனது முறைப்பாட்டில் வலியுறுத்திக் கேட்டுள்ளார். சட்டவிரோத செயல்களை அம்பலப்படுத்தும் போது ஊடகவியலாளர்கள் பெரும் அச்சுறுத்தலை எதிர்கொள்வதுடன் உயிராபத்துக்களையும் எதிர்கொள்ள Nவுண்டியுள்ளது. இது ஊடகவியலாளர்களின் குடும்ப உறவுகளையும் பாதிக்கும் விடயமாகும்.

மயூகரன் தாக்குதலுக்குள்ளான சம்பவம் தொடர்பில் பொலிசார் இதுவரை சட்ட நடவடிக்கை எடுக்காதது சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோருக்கு பெரும் உத்வேகத்தை அளிக்கும் விடயமாகும். இதனால் அவர்கள் எந்தவிதமான தங்குதடையும் இன்றி தங்களது சட்;டவிரோத செயற்பாடுகளை முன்னெடுக்க மேலும் வாய்ப்பு கிட்டும். இது சமூக விரோத செயற்பாடுகளை சமூகத்தில் தூண்டும் செயற்பாடாகவே அமைகின்றது. சமூகத்துக்கு தவறான முன்னுதாரணத்தை வழங்கும் இவ்வாறான செயற்பாடுகள் தொடர்பில் பாதுகாப்பு தரப்பினர் கவனம் கொள்ளாமல் இருப்பது ஏன்? இவ்வாறான செயற்பாடுகள் ஊடகவியலாளர்களை மேலும் ஆபத்தில் மாட்டிவிடும் செயற்பாடுகளே அன்றி வேறு என்ன?

மயூகரன் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு உரிய நடவடிக்கை எடுக்காததன் ஊடாக மீண்டும் அவரின் சுய பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளதுடன், சம்பவத்தின் சாட்சியாக அவர் தனது மனைவியை குறிப்பிட்டுள்ளதன் ஊடாக அவரின் முழுக் குடும்பமே இந்த சட்டவிரோத கும்பலால் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளது என்றே கருதக் கூடியதாக உள்ளது.

– ஊடகவியலாளர் அ.மயூகரன்

This post is also available in: English සිංහල