மொழிப் பிரச்சினையின் காரணமாக மீறப்படும் மனித உரிமைகள்!

மொழிப் பிரச்சினையின் காரணமாக மீறப்படும் மனித உரிமைகள்!

வேற்று மொழி சார்ந்தவர்களால் மனித உரிமைகள் மீறப்படுவதாக ஊடகவியலாளர் ஜோசப் நயன் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.

மன்னார் மாவட்டத்தில் உள்ள வனவள திணைக்களம், வன சீவராசிகள் திணைக்களம், தொல்லியல் திணைக்களம் ஆகியவற்றில் உள்ள அதிகாரிகள் வேற்று மொழி சார்ந்தவர்கள் என்பதால் தொடர்பாடல் ரீதியிலான பிரச்சினைகள் ஏற்படுவதாக மன்னார், சாந்திபுரம், இல 82 என்ற முகவரியைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஜோசப் நயன் (27) மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்.

கடந்த மார்ச் 6ம் திகதி 2022 அன்று முறைப்பாட்டின் மூலம் இந்த விடயத்தைக் கவனத்திற்கு கொண்டு வந்துள்ள அவர், இத்திணைக்களங்களைச் சேர்ந்த உயர் மட்ட அதிகாரிகளை உரிமை மீறலில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளாக பெயர் குறிப்பிட்டுள்ளார்.
2021- 2022 காலப்பகுதியில் இந்த மனித உரிமை மீறல் இடம்பெற்றதாகவும், மனித உரிமை மீறலுக்கான காரணங்களாக மொழிப் பிரச்சினை, நிர்வாகக் குறைபாடு, மொழிக் கொள்கை என்பனவற்றை அவர் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

மேலும் மொழி ரீதியிலான உரிமை எல்லா திணைக்களங்களிலும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பது இந்த முறைப்பாட்டினூடாக அவர் முன்வைக்கும் பிரதான கோரிக்கையாகும். பொதுவாக இலங்கையில் தமிழ் மொழி அமுலாக்கப் பிரச்சினை பொதுவான பிரச்சினையாக உள்ள நிலையில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு கிழக்கு உட்பட்ட பகுதிகளில் சகோதர மொழி அரச உத்தியோகத்தர்களின் செயற்பாடுகள் காரணமாக இப்பிரச்சினை தீவிரமாக உணரப்படுகின்றது.

அரச திணைக்களங்களின் உயர் அதிகாரிகள் சகோதர மொழிகளைச் சேர்ந்தவர்களாக இருப்பதனால் தமிழ் மொழியை மட்டும் அறிந்துவைத்துள்ள மக்களுக்கு தத்தமது பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள கடினமாக இருப்பதுடன் இதன் காரணமாக மனித உரிமைகளும் மீறப்படும் சம்பவங்களும் பற்பல இடம்பெற்றுள்ளனர். இந்நிலையிலேயே சிங்கள அரச உத்தியோகத்தர்கள் தமிழ் மொழியை அறிந்திருக்க வேண்டும் என்றும் தமிழ் அதிகாரிகள் சிங்கள மொழியை அறிந்திருக்க வேண்டும் என்றும் அரசு இதற்கு தீர்வாக நடவடிக்கை எடுத்திருந்தது.

இந்தவகையில் பார்க்கும் போது தமிழர்கள் செறிந்து வாழும் பகுதிகளில் தமிழ் தெரிந்த அதிகாரிகளை நியமிப்பதனூடாக பல்வேறு நன்மைகள் ஏற்படுவதுடன், அரசின் திட்டங்கள் மக்களை பாகுபாடு இன்றி சென்றடையவும் வாய்ப்பு ஏற்படும். இவ்வாறான மனித உரிமை மீறல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கக் கூடியதாகவும் இருக்கும் எனலாம்.
இந்தவகையில் இந்த விடயத்தையே ஜோசப் நயன் முன்வைத்து முறைப்பாட்டை அளித்திருக்கின்றார்.

– ஊடகவியலாளர் ஜோசப் நயன்

 

This post is also available in: English සිංහල

More News

சட்டவிரோத மணல் அகழ்வு முறைப்பாடு இதுவரை விசாரிக்கப்படவில்லை!

சட்டவிரோத மணல் அகழ்வு முறைப்பாடு இது...

Read More