பொதுமக்களுக்கான காணிகளைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுங்கள்!
மன்னார் அகத்தி முறிப்பு, அலக்கட்டு என்ற பிரதேசத்தில் காணி சம்பந்தப்பட்ட பிரச்சினைக்கு தீர்வு எட்டப்பாத நிலையில், அது தான் தொடர்பான வழக்கும் நிறைவு பெறாத நிலையில் இது தொடர்பாக மன்னார், முசலி, பொற்கேர்ணி, அகத்தி முறிப்பு என்ற முகவரியைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஏ.எம்.றிசான் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கவனத்திற்கு கொண்டு வரும் முகமாக முறைப்பாடு ஒன்றை கடந்த மார்ச் 6ம் திகதி 2022ம் ஆண்டு பதிவு செய்துள்ளார்.
சிலாவத்துறை, முசலி, பிரதேச செயலகத்திற்கு எதிராகவும், பிரதேச செயலாளர் எம்.ராஜீவ், பிரதேச சபை தவிசாளர் அலிகத் சுபிஹான், தலைவரும் செயலாளருமான மஸ்ஜிதுல் ஹைராத் ஆகியோருக்கு எதிராக இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. நிர்வாகக் குறைபாடுகளே இந்த பிரச்சினைக்கு காரணம் என்று இந்த முறைப்பாட்டில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அகத்திமுறிப்பு, அலக்கட்டு எனும் பிரதேசத்தில் மக்களுக்காக காணி கச்சேரி முசலி பிரதேச செயலகத்தினால் நடாத்தப்பட்டு 2013ம் ஆண்டு டுனுழு பேர்மிட் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அப்பிரதேசத்தில் வசிக்கின்ற சிலர் தலையீடு செய்து பொதுமக்களுக்கு அக்காணிகளை வழங்க மறுக்கின்றனர். இதன் அடிப்படையில் அரசின் சார்பாக பிரதேச செயலாளரும் காணிகளை வழங்க மறுத்து வருகின்றார். மேலும், 2020-11-27 அன்று பட வரைபின்படி பொதுமக்கள் காணிகளைத் துப்புரவு வேலைத்திட்டத்தை மேற்கொண்ட போது பள்ளிவாசல் சார்ந்த நபர்கள் அந்நத மக்களை வாளால் வெட்டியும், பொல்லால் தாக்கியும் உள்ளனர். இது தொடர்பாக வழக்கு ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக றிசான் தனது முறைப்பாட்டில் விபரித்துள்ளார். மனித உரிமை மீறல் நடைபெற்ற தினமாக 2020-11-27 அன்றைய தினம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் கண்கண்ட சாட்சியாக பொதுமக்கள் உள்ளனர் என்றும், ஆவண சாட்சியங்களாக பொலிஸ் முறைப்பாடு, நிதிமன்ற வழக்கு, கடிதங்கள் மற்றும் விடயம் தொடர்பான பல்வேறு ஆவணங்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முறைப்பாட்டில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. மன்னார் நீதிமன்றத்தில் உள்ள வழக்கு தொடர்பில் தற்போதைய நிலவரம் குறித்து எதுவும் தெரியவில்லை என்றும் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மக்களுக்கான காணிகள் கிடைக்கப் பெற வேண்டும் என்றும், டுனுழு காணிகளில் மக்கள் தங்களின் வாழ்வாதாரத்தை மேற்கொள்ள ஆவண செய்யப்பட வேண்டும் என்றும் இந்த முறைப்பாட்டினூடாக அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முற்றிலும் பொதுநலன் சார்ந்து ஊடகவியலாளர் றிசான் இப்பிரச்சினையை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்.
– ஊடகவியலாளர் ஏ.எம்.றிசான்
This post is also available in: English සිංහල