அபிவிருத்திக்கும் அரசியலமைப்பு ரீதியான சமநிலை அவசியம்.

அபிவிருத்திக்கும் அரசியலமைப்பு ரீதியான சமநிலை அவசியம்.
பாட்டலி சம்பிக்க ரணவக்க பாராளுமன்ற உறுப்பினர் – ஐக்கிய மக்கள் சக்தி

புதியதொரு அரசியலமைப்பு தொடர்பான கருத்து மீண்டும் தோன்றியுள்ளது. 2022 ஏப்ரல் 12ம் திகதி அரசு வங்குரோத்துத் தன்மையை வெளியிட்டதே அதற்குக் காரணம். இதனால் மக்கள் முகங்கொடுக்க நேர்ந்துள்ள பிரச்சனைகளோடு தமது பிரதிநிதிகளையும் ஆட்சியாளர்களையும் பாரதூரமான முறையில் கேள்விகேட்கத் தூண்டப்பட்டுள்ளார்கள். அதனாலேயே பாராளுமன்றத்திற்கு வெளியே நேரடி சனநாயகம் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் வகையில் பிரதிநிதித்துவ முறையைப் பற்றிய கலந்துரையாடலொன்றும் சமூகத்தில் ஏற்பட்டுள்ளது.

இலங்கையின் நெருக்கடியை எடுத்துக் கொண்டால், அதற்கு ஒரு வரலாற்று ரீதியான காரணம் இருந்தாலும், இந்த நெருக்கடி இந்த அளவுக்கு முற்றி வளர்ந்ததற்கு 2010ன் பின்னர், எம்மால் எடுக்கப்பட்ட வணிகமல்லாத கடன்களை எந்தவொரு வருமானத்தையும் ஈட்ட முடியாத கருத்திட்டங்களில் முதலீடு செய்ததும், அதிலிருந்து பெரும் பணத்தொகையை கொள்ளயடித்ததுமே காரணம்.

அது அரசியலமைப்பிலுள்ள சிக்கலா என்ற கேள்வி எம்முன்னே காணப்பட்டாலும், அதன் பின்னணியில் ஆளுகை (Govewernance) பற்றிய கேள்வி உள்ளது. அதனால், அடுத்த அரசியலமைப்பொன்றின் மூலம்பெரும்பாலும் கடந்தகால அரசியலமைப்புகளில் சிறுபான்மை இன மக்களின் துன்பதுயரங்கள் அல்லது அபிலாசைகள் பற்றிப் பேசினாலும் இப்போது அதைக் காட்டிலும் விரிவான துறையொன்றில் சனநாயகம், மனித உரிமைகள் மற்றும் பொருளாதார நடத்தைகள் தொடர்பான விடயங்களைக் கலந்துரையாடலுக்கு எடுப்பதற்கான வாய்ப்புகள் விரிவாக்கப்பட்டுள்ளது. அபிவிருத்திச் செயற்பாடுகளை ஒழுங்குபடுத்தல் பொதுவாக அரசியலமைப்பு பற்றிய அரசியல் விஞ்ஞானத்தின் வரைவிலக்கணங்களுக்கு ஏற்ப, பொருளாதாரம் பற்றிய விடயங்கள் அரசியலமைப்பில் பிரதிபலிக்கப்படுவதில்லை.

அவை கட்டளைச் சட்டங்களால் பிரதிபலிக்கப்படுகின்றன. எனினும் இப்போதிருக்கின்ற நிலைமையின் கீழ், ஒவ்வொரு ஆட்சியாளருக்கும் தன்னிச்சையாக தீர்மானமெடுப்பதற்கு இடமளிக்காது, அரசியலமைப்பு ரீதியான சமநிலையொன்று அபிவிருத்தியென்ற விடயத்தில் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பது தோன்றியுள்ளது. தேசிய பௌதீகத் திட்டத்தை முன்மொழிந்துள்ளோம். அவ்வாணைக்குழுவை அரசியலமைப்பில் உள்ளடக்கி அதற்கு வெளியேயான அபிவிருத்திச் செயற்பாடுகளைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்மொழிந்துள்ளோம். அது தவிர மரபு ரீதியான கட்சி அரசியல் மீது பாரதூரமான கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.

எமது நாட்டில் புரட்சிகரமான அரசியலில் ஈடுபட்டவர்கள் ஆயுதப் போராட்டத்தினால் இந்த முறையை புரட்டிப் போட்டுவிட எப்போதும் எதிர்பார்த்தனர். வேறு முறையில் சமூக முறையொன்றை தாபிக்க முயன்றனர். அவை தோல்வியடைந்தன. அதற்கேற்ப சனநாயக முறை மட்டும் இலங்கையில் தோல்வியடைந்துவிடவில்லை. ஆயுத அரசியலும் பாரதூரமான முறையில் தோல்வியுற்றிருக்கின்றது. அவ்வாறே ஆயுத அரசியல் மூலம் கட்டியெழுப்ப முனைந்த சோசலிசம் போன்ற விடயங்கள் கியூபா போன்ற நாடுகளைப் பார்க்கின்ற போது மிக மோசமான முறையில் சவாலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

அந்த சமூக முறைமைகள் வீழ்ச்சியடைந்திருந்தாலும் இன்னும் அந்த நினைவுகளைச் சுமந்துகொண்டுள்ளவர்கள் காணப்படுவதால் அச் சிக்கல்கள் எழுந்துள்ளன. கட்சிகளின் உள்ளக சனநாயகம் எனவே தாம் பின்பற்றுகின்ற பொருளாதார முறை எது என்பது பற்றி மாத்திரமன்றி கட்சி முறை மற்றும் கட்சித் தலைவர்களுக்குக் கிடைத்திருக்கும் எல்லையற்ற அதிகாரங்கள், கட்சிகளுக்குள்ளே சனநாயகம் இல்லாமை, தோல்வியின் போது விலகிச் செல்லாதிருக்கும் பண்பு, மீண்டும் மீண்டும் பாராளுமன்றத்திலோ, மாகாண சபையிலோ, பிரதேச சபையிலோ புகுந்து கொள்ள எடுக்கின்ற வெறுக்கத்தக்க முயற்சி, அவ்வாறே இந்த நாட்டில் குடும்பவாதத்தால் ஏற்படுத்தப்பட்டு பாதிப்பு போன்றவை பற்றியும் அவதானம் செலுத்த வேண்டும். இப்போத பாராளுமன்றத்தில் மூன்றில் ஒன்று உறவினர்கள், இன்னுமொரு குழுவினர் முறைகேடான பணத்தைக் கொண்டு விருப்பு வாக்குகளை அதிகரித்துக் கொண்டு வந்தவர்கள். அவ்வாறே ஊடகங்களால் விடுக்கப்பட்ட அழுத்தங்கள், குறிப்பாக இலத்திரனியல் ஊடக உரிமையாளர்கள் தமது குழுக்களை பாராளுமன்றத்திற்கு அனுப்புவதற்காக பாரிய செயற்பாடொன்றை கட்டவிழ்த்து விடுவதுடன் தாம் விரும்பாதவர்களைத் தோற்கடிப்பதற்கும் அபகீர்த்தீக்கு ஆளாக்குவதற்குமான செயல்களையும் வழிநடத்துகின்றனர்.

இந்த ஊடகங்கள் மற்றும்கட்சிகளில் உள்ளக சனநாயகம் பற்றிய பாரிய கலந்துரையாடலொன்று இப்போது ஆரம்பிக்கப்பட வேண்டியுள்ளது.வெகுசன ஊடகமும் முறைகேடான மூலதனமும் வெகுசன ஊடகங்களை எடுத்துக் கொண்டால், குறிப்பாக இலத்திரனியல் ஊடகங்களின் அலைவரிசைகள் மக்களுக்குரித்தானவை. அவற்றை மிகவும் கேவலமான முறையில் மக்களை திசைதிருப்புவதற்கும், தாம் விரும்பாத நபர்களை அபகீர்த்திக்கு உள்ளாக்குவதற்கும், தமது குழுவினரைக் கொண்டு வருவதற்கும் ஈடுபடுத்துகின்றனர்.

 

அவ்வாறே போதைப் பொருள் வியாபாரமாகட்டும், அரச கொந்தராத்துகளாகட்டும், இவ்வாறான முறைகளில் ஈட்டப்படும் பில்லியன் கணக்கில் ஈட்டப்படும் முறைகேடான நிதி தேர்தல்களின் போது முதலீடு செய்யப்படுகின்றது. அவர்கள் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றுக் கொள்கின்றனர். அவர்கள் இன்று பாராளுமன்றத்தில் முதல் வரிசையில் அமர்ந்திருக்கின்றனர். இவ்வாறான நிலைமைகளுடன், சனநாயகம், மக்களின் வாக்குகள் என்பன கேலிக்குரியனவாக மாறியுள்ளன.

 

இந்த குடும்பவாதிகள், கேவலமானவர்கள் மற்றும் ஊடக பொம்மைகளால் ஆட்டப்படும் அரசியலுக்குப் பதிலாக மக்களின் உண்மையான பிரதிநிதித்துவத்தை ஏற்படுத்திக் கொள்வதற்கு இந்த அரசியலமைப்பில் கட்சி உள்ளக சனநாயகத்தையும் வெளிவாரி சனநாயகச் செயற்பாட்டையும் தேர்தற் செயற்பாடுகளையும் வலுப்படுத்த வேண்டியுள்ளது என்பதுதான் எமது நம்பிக்கை. எமது கருத்திற்கு ஏற்ப, தேர்தல்கள் ஆணைக்குழு அமுல்ப்படுத்தப்பட வேண்டும். தேர்தல்கள் ஆணைக்குழுவானது ஒருபுறம் கட்சிகளின் உள்ள சனநாயகமற்ற அரசியலமைப்புகளை நிராகரிக்க வேண்டும். அவ்வாறே தேர்தற் தோல்வியின் பின்னர் பிரதான தலைவர்கள் விலகி ஏனைய தலைவர்கள் அதிகாரத்தில் நியமிக்கப்படும் சனநாயகச் சூழலொன்றை உருவாக்கிக் கொள்வதற்கு குறிப்பிட்ட வழக்கமொன்றை நாட்டில் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

 

அவ்வாறே வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கும் போது கட்சிகளின் பிரதேச குழுக்களின் விருப்பம் தொடர்பான விடயத்தை முன்னெடுக்கும் ஆற்றலை அடைய வேண்டும். சில நாடுகளில் வேட்பாளர்களுக்கான ஆரம்பத் தேர்தல்கள் நடத்தப்பட்டு அவற்றினூடாகத்தான் வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இல்லையேல் ஜனாதிபதி வேட்பாளர்கள், பிரதமர் பதவிக்கான வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அது மிகவும் அவசியமானது. தேர்தற் செலவுக் கட்டுப்பாடு இரண்டாவது விடயம் பணம். பணத்தைச் செலவிடுவது தொடர்பில் குறித்த கட்டுப்பாடொன்று தேர்தல்கள் ஆணைக்குழுவிற்குக் கிடைக்க வேண்டும். பெரும்பாலும் இதற்கான அவதானம் அரச சொத்துக்கள் மீது மட்டுந்தான் செலுத்தப்படுகின்றது.

 

அரச சொத்துக்கள் மட்டுமல்ல முறையற்ற விதத்தில் ஈட்டப்படும் நிதியைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும்
தேர்தல் செயற்பாடுகளில் குறிப்பிட்ட சட்டவிதிகளை விதிப்பதை ஆணைக்குழுவிடம் ஒப்படைக்க வேண்டும். அவ்வாறே வெகுசன ஊடகம். வெகுசன ஊடகம் தொடர்பில் அச்சு ஊடகம் பற்றி ஒருவகையான பிரச்சனையிருந்தாலும், நாட்டில் பாரிய அளவில் பயன்படுத்தப்படுகின்ற ஊடகம் இலத்திரனியல் ஊடகமாகும். அந்த இலத்திரனியல் ஊடகங்களின் அலைவரிசைகள் நாட்டு மக்களுக்கு உரித்தானதாகும். இணைய வலைத்தளங்கள் மக்களுக்கு உரித்தானது.

 

அதனால் வலைத்தளத்தையும் இலத்திரனியல் ஊடகத்தையும் குறித்த கட்டுப்பாட்டில், சமநிலையான முறையில் பேணிச் செல்வதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் இடையீட்டுக்கான அதிகாரத்தை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அளித்தல் அத்தியாவசியமானது. இல்லையேல் இது மிகவும் ஊழல்மிக்க வகையில் செயற்பட்டுக் கொண்டிருக்கும். அவ்வாறே பொதுமக்களுக்கும், அரசியலமைப்பிற்கும் வெளியே ஏதேனுமொரு வழக்கத்தைக் கட்டியெழுப்ப வேண்டும்.

 

இப்போது நாடு வங்குரோத்து நிலையிலிருந்தாலும் பின்னர் ‘ஐயோ எங்களுக்கு நடந்தது என்ன? யார் இதற்குப் பொறுப்புக் கூற வேண்டும்’ என்று சொல்வதைக் காட்டிலும் ஆரம்பத்திலிருந்தே ஒருவகையான புரிதலுடன் செயற்பட்டிருந்தால் இந்த அனர்த்தம் நிகழ்ந்திருக்காது.

 

எனவே மக்களும் இந்த மரபுகளைப் புரிந்து கொள்ள வேண்டும். குறிப்பாக ஜனாதிபதித் தேர்தலொன்றைக் கோரிய பின்னர் வேட்பாளர் வெற்றியீட்டினால், அவர் அந்தப் பதவியை வகித்த பின்னர், அரசியலிலிருந்து ஓய்வு பெறுகின்ற, வேட்பாளர் தோல்வியைத் தழுவினால், அவர் அரசியலிலிருந்து ஓய்வு பெறுகின்ற,
பிரதான தேர்தல் தோல்வியின் பின்னர் கட்சித் தலைவர்கள் அவற்றிலிருந்து விலகி, மற்றவர்களுக்கு அந்த சந்தர்ப்பத்தை வழங்கும் குடும்பவாத மற்றும் முறைகேடான பணத்தை வெறுக்கும் வகையிலான மரபொன்று நாட்டுக்கு மிக முக்கியம்.

This post is also available in: English සිංහල