அபிவிருத்தி குழு கூட்டத்தில் மீண்டும் ஊடகவியலாளர்களை அனுமதியுங்கள்!

அபிவிருத்தி குழு கூட்டத்தில் மீண்டும் ஊடகவியலாளர்களை அனுமதியுங்கள்!

மாவட்;ட செயலகத்தில் இடம்பெறும் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு (னுனுடுஊ) கூட்டங்களுக்கு செய்தி சேகரிப்பதற்காக மீண்டும் அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஊடகவியலாளர் இலட்சுமணன் தேவஅதிரன் (42) இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்த ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களுக்கு செய்தி சேகரிப்பதற்காக ஏற்கெனவே வழங்கப்பட்ட அனுமதி தற்போது தடை செய்யப்பட்டுள்ள நிலையில், கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவரான இவர் இந்த முறைப்பாட்டை முன்வைத்துள்ளார்.
இவர் மட்டக்களப்பு, கல்லடி, பழைய கல்முனை வீதி 6ஃ8 என்ற முகவரியைச் சேர்ந்தவர்.

இந்த முறைப்பாட்டை அவர், பிரதேச செயலகம், அரசாங்கம், மாவட்ட செயலகம், பிரதேச செயலகம் ஆகியவற்றுக்கு எதிராக முன்வைத்துள்ளார். அரசாங்க சுற்றறிக்கை வெளியான 2021ம் ஆண்டை அவர் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்ற ஆண்டாக குறிப்பிட்டுள்ளார். நிர்வாகக் குறைபாடுகளே இதற்கு காரணம் என்றும் அவர் முறைப்பாட்டில் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஊடகவியலாளர்கள் மாவட்ட செயலகத்தில் நடைபெறும் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களுக்கு அனுமதிக்கப்பட வேண்டும். அதன்மூலம் மக்களுடைய கோரிக்கைகள் வெளியுலகுக்கு தெரியப்படுத்தப்படுவதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட வேண்டும் என்று அவர் தனது முறைப்பாட்டினூடாக கோரிக்கை விடுத்துள்ளார்.

– ஊடகவியலாளர் தேவ அதிரன் வேண்டுகோள்

This post is also available in: English සිංහල