பொதுச்சேவையின் போது ஆண்களால் தொல்லை. பாதுகாப்பு தாருங்கள்!
பொதுசேவை செய்யும் பெண் என்பதால் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றேன் என்று மட்டக்களப்பைச் சேர்ந்த அருளானந்தம் கங்கா (29) மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.
கரவெட்டி நாவற்காடு என்ற முகவரியைச் சேர்ந்த கங்கா, போக்குவரத்து செய்யும இடங்கள் எல்லாம் ஆண்களால் தனது மனித உரிமைகள் மீறப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
தனது முறைப்பாட்டில் அவர் தெரிவித்துள்ளதாவது:
நான் வேலை செய்கின்ற சமூகத்தில் எனக்கு பல பிரச்சி;னைகள் ஏற்படுகின்றன. உதாரணமாக தொலைபேசி அழைப்புகள் மூலமாக பல தகாத வார்த்தைகளை பேசுதல் மற்றும் சமூகத்திற்குள் செல்லும் போது அங்குள்ள சில ஆண்களால் பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன. அதுமட்டுமன்றி சமூகத்தில் பெண் தனியாக சென்று வர பாதுகாப்பு இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதனால் தனக்கு உரிய முறையிலான பாதுகாப்பை வழங்குமாறு அவர் மனித உரிமைகள் ஆணைக்குழுவைக் கேட்டுள்ளார். மனித உரிமை நிகழ்ந்த திகதியாக 2022.02.10 என்ற திகதியை அவர் குறிப்பிட்டுள்ளார்.
– மட்டக்களப்பு கங்கா
This post is also available in: English සිංහල